மறதி-மூளையின் அமைதியான அறிவியல் புரட்சி

மறதி-மூளையின் அமைதியான அறிவியல் புரட்சி

  • By Magazine
  • |

– முனைவர் மோகனா, பழனி

“நினைவுகள் நம்மை உருவாக்குகின்றன. மறதிகள் நம்மை பாதுகாக்கின்றன.”

மரணிப்பு.. வேதனை -துக்கம் – மறதி!

நமது நெருங்கிய நண்பர்/ உறவினர் ஒருவர் மரணித்துவிட்டால், நாம் வேதனைப்பட்டு துடிதுடித்துப் போகிறோம். துக்கம் நெஞ்சை அடைக்கிறது. அழுது புலம்புகிறோம். அல்லது ஒரு விபத்தைப் பார்த்தாலோ/ கேள்விப்பட்டாலோ, அதே போல மனம் கலங்குகிறது. ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போகிறோம். ஆனால் நாளாக, நாளாக இது குறைகிறது. அல்லது அதனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்காது துவங்குகிறோம்.இது ஏன்? மறதி இல்லை என்றால், மனிதன் நிம்மதியாக வாழ முடியாது. மனிதன் வாழ்வதற்கான ஒரு கூறுதான் மறதி.

நினைவோ ஒரு பறவை

மனிதன் நினைவுகளின் தொகுப்பு என்று நாம் கூறுகிறோம். ஆனால், நினைவுகளால் மட்டும் மனிதன் உருவாகவில்லை; அவன் மறந்தவற்றாலும் உருவாகிறான். நினைவு என்பது அறிவின் சேமிப்பு எனில், மறதி என்பது அறிவின் வடிகட்டி. மறதி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது உயிரியல் தேவையுடன் கூடிய ஒரு செயல். மூளை, தேவையற்ற தகவல்களை அழித்து, தேவையானவற்றை மட்டும் பாதுகாக்கும் திறன் பெற்றுள்ளது. இதுவே மனிதனின் அறிவாற்றலுக்கான அடித்தளம்.

 மறதி

அறிவியல் ரீதியில், மறதி என்பது ஏற்கனவே சேமிக்கப்பட்ட தகவலை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர இயலாத நிலை.

நினைவை உருவாக்கும் மூன்று நிலைகள்

1. பதிவு செய்தல் (Encoding)

2. சேமித்தல் (Storage)

3. மீட்டெடுத்தல் (Retrieval) இந்த மூன்றில் ஏதேனும் ஒரு கட்டத்தில் குறைவு ஏற்பட்டால் மறதி நிகழ்கிறது. ஆனால், இது அழிவு அல்ல. அது “செயல்முறை மாறுதல்”.

நினைவுகள் மூளையின் பல பகுதிகளின் ஒருங்கிணைப்பால் உருவாகின்றன.

1.            புதிய நினைவுகளின் உருவாக்கம்- Hippocampus

2.            உணர்ச்சி நினைவுகள்- Amygdala

3.            தீர்மானம், திட்டமிடல்- Prefrontal Cortex

4.            பழக்க இயக்கங்கள்- Cerebellum

நினைவு என்பது ஒரு “நரம்புக் கூட்டிணைப்புகளின் உரையாடல் ஆகும். (Synaptic dialogue). ஒரு தகவல் அடிக்கடி பயன்படுத்தப்படும்போது, “Long-term Potentiation (LTP)” ஏற்படுகிறது. பயன்படுத்தப்படாத இணைப்புகள் “Long Term Depression  (LTD)” மூலம் பலவீனமடைகின்றன. இதுவே மறதியின் உயிரியல் அடிப்படை.

“சோகமான நிகழ்ச்சி உடனே மனதை ஆட்கொள்கிறது; சில நாட்களில் அது மங்கிவிடுகிறது” இது மனித மூளையின் இயல்பான பாதுகாப்பு செயல்முறை.

இது மூன்று அடுக்குகளால் ஆனது

1.  நரம்பியல் (Brain circuits)

2. வேதியியல் (Neurochemistry)

3. நினைவியல் (Memory processing)

உணர்ச்சி எப்படி உருவாகிறது?

ஒரு சோகமான செய்தி வந்தவுடன், முதலில் செயல்படும் பகுதி.

  • அமிக்டாலா (Amygdala ) பயம், சோகம் போன்ற உணர்ச்சிகளை உடனடியாக செயல்படுத்தும் மையம்
  • ஹிப்போகாம்பஸ் (Hippocampus ) அந்த நிகழ்ச்சியை நினைவாக பதிவு செய்யும்
  • கார்டக்ஸ் பகுதியின் முன் மூளை (Prefrontal cortex ) “இது நமக்கு என்ன பொருள்?” என்று பகுத்தறியும்.

இது எவ்வாறு செயல்படுகிறது?

நமது மூளையில் பல பகுதிகள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக,

  • அமிக்டாலா (Amygdala): பயம், கோபம், சோகம் போன்ற உணர்ச்சிகளை உடனடியாக செயல்படுத்தும் பகுதி
  • முன்மூளைப் பகுதி (Prefrontal cortex): பகுத்தறிதல், முடிவெடுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதி
  • ஹிப்போகாம்பஸ் (Hippocampus): நினைவுகளைச் சேமிக்கும் பகுதி.

வேதியல் செயல்பாடுகள் மற்றும் உதாரணங்கள்

  • உடனடி எதிர்வினை (0-24 மணி நேரம்)
  • ஒரு சோகமான செய்தி கேட்ட உடனே
  • வேதியல் மாற்றங்கள்
  • கார்ட்டிசோல் (Cortisol): மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கிறது. இது உங்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்கிறது.
  • அட்ரினலின் (Adrenaline): இதயத்துடிப்பை அதிகரித்து, உடலை எச்சரிக்கை நிலையில் வைக்கிறது.
  • நார் எபிநேப்ரின் (Norepinephrine): கவனத்தை அந்த நிகழ்வின் மீதே செலுத்துகிறது

உதாரணம்: ஒரு நெருங்கிய நபருக்கு நோய் வந்தது என்று தெரிந்தது

  • உடல்: இதய துடிப்பு மாறும்
  • மனம்: கவலை, தூக்கக் குறைவு
  • வேதியியல் மாற்றங்கள் (Neurochemistry).

சோகத்தின் போது சில முக்கிய வேதிப்பொருட்கள்

கார்டிசால் (Cortisol) இது மன அழுத்த ஹார்மோன் ஆகும் (Stress hormone)

  • அட்ரினல் சுரப்பியிலிருந்து வெளியேறும்: இது அதிகரித்தால் உடல் தயார் நிலையில் இருக்கும்.
  • அட்ரினலின்  (Adrenaline): இதன் மூலம் உடல் உடனடி பதில் அளிக்கிறது
  • இதய துடிப்பு உயரும்
  • மனநிலை தாழ்வு
  • சோக உணர்வு அதிகரிப்பு
  •  டோபமைன் (Dopamine) குறைவு. எனவே மகிழ்ச்சி உணர்வு குறைவு.

அப்படியென்றால் ஏன் இரண்டு மூன்று நாட்களில்சோக உணர்வு ஏன் மங்குகிறது?

இது மிகவும் சுவாரஸ்யமான பகுதியாகும்.

  • மூளை தன்னிலைக்கு வர முயற்சி (“Habituation) செய்கிறது. ஒரே உணர்ச்சியை நீண்ட நேரம் தாங்க முடியாது.மூளை தன்னைத்தானே சமநிலைக்கு கொண்டுவரும்.
  • இது நடப்பது முன் மூளையின் கட்டுப்பாட்டால் (Prefrontal cortex) கட்டுப்பாடு, “இது நடந்துவிட்டது; இப்போது என்ன செய்யலாம்?” என்று யோசிக்கத் தொடங்கும்.
  • இதனால் அமிக்டாலாவின் அதிர்ச்சி குறையும்.
  • நினைவக மாற்றம் (Memory reconsolidation)
  • ஒரு நினைவு முதலில் “உணர்ச்சி நிறைந்ததாக” சேமிக்கப்படுகிறது.
  • பின்னர் அது மெதுவாக “தகவல்” மாதிரி மாறுகிறது.

மறதி எப்படி ஏற்படுகிறது?

மறதி என்பது உண்மையில் அழிவல்ல. அது முக்கியமற்ற தகவலை மூளை ஒதுக்குவது.

முக்கிய காரணங்கள்

  • நரம்பு செல்கள் (Neurons) இடையே உள்ள இணைப்புகள் (Synapses)  பயன்பாடு இல்லையெனில் பலவீனமடைகின்றன. அதாவது நீங்கள் திரும்பத் திரும்ப நினைக்கவில்லை எனில் பலவீனமடைகின்றன.
  • நினைவு நீடித்து இருப்பது (Long- term Potentiation (LTP) குறைகிறது.
  • மீண்டும் மீண்டும் நினைத்தால் இணைப்பு பலப்படும்.
  • நினைக்கவில்லை என்றால் குறையும். இதுதான் மூளையின் நெகிழ்ச்சித்தன்மை (Neuroplasticity- Neurochemical reset)
  • கார்ட்டிசால் அளவு சாதாரண நிலைக்கு திரும்பும்.
  • செரடோனின் அளவு சீராகும்.
  • ஒரு எளிய உவமை :மனம் ஒரு ஏரி போல. ஒரு கல் (சோக நிகழ்ச்சி) விழுந்தால் உடனே அலைகள் எழும்சில நேரம் கழித்து, அலைகள் ஓய்ந்து நீர் மீண்டும் அமைதியாகும்.
  • அலை இருந்தது.
  • ஆனால் அது நிரந்தரம் அல்ல.
  • இது நல்லதா? கெட்டதா?
  • இது ஒரு பாதுகாப்பு செயல்முறை. இல்லையெனில் மனிதன் ஒவ்வொரு சோகத்திலும் சிக்கிக்கொண்டு வாழ முடியாது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் சோக நிலை நீடித்தால்,தூக்கம், உணவு, செயல்பாடு பாதிக்கப்பட்டால்அது மன அழுத்தக் கோளாறு (Clinical depression) ஆக இருக்கலாம்.  உடல் உபாதைகள் ஏற்படும்.

ஒரு சோகமான நிகழ்வு நடந்த சில நாட்களில் அதன் தாக்கம் குறைந்து, நாம் இயல்பு நிலைக்குத் திரும்புவது முற்றிலும் இயற்கையான செயல்முறையாகும். இதற்கு நமது மூளையின் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) திறனே முக்கிய காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *