உலகில் பேய் இருக்கிறதா?

உலகில் பேய் இருக்கிறதா?

  • By Magazine
  • |

– முனைவர் மோகனா, பழனி

உலகில் பேய்  இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சாமியார்கள் மற்றும் பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப்பொதுவாக நம்பப்படுகிறது.

விபத்தால் அல்லது  உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள்,மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’உலவுவதாக யாரும் பார்த்தது இல்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக செய்தியும் இல்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் மனிதர்களிடையேதான் உலவுகின்றன. அவர்கள்  யாரை தொந்தரவு செய்கின்றன தெரியுமா? படித்த அய்.ஏ.எஸ்.அதிகாரிகளை, அய்.பி.எஸ். அதிகாரிகளை,மருத்துவர்களை, பொதுவாக படித்த ஆண்களைதொந்தரவு செய்வதில்லை. அதேபோல் பார்ப்பன ஆண்களையும் பெண்களையும் தொந்தரவுசெய்வதில்லை.

இன்று வரை இவர்களையெல்லாம் ஏன் பேய், பிசாசு, ஆவிகள் தொந்தரவு செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதே “பேய், பிசாசு, ஆவிகள், கிராமப்புற மக்களை அதிலும் படிப்பு அறிவு இல்லாதவர்களை அதிலும் பெரும்பாலும் பெண்களையே தொந்தரவு செய்வது ஏன்?”இவையெல்லாம் தந்தை பெரியார் இந்நாட்டுமக்களை நோக்கி எழுப்பிய கேள்விகள் ஆகும்.

அடுத்து இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் ஆகியவற்றின் தொந்தரவுக்கு உள்ளானவர்கள் நிலையைப் பார்ப்போம்.

                இவர்களில் சிலர் பேய்,பிசாசு, ஆவியைப் பார்த்ததாகவும் சலங்கை ஒலியைக் கேட்டதாகவும் கடவுள் காட்சிகொடுத்ததாகவும் சொல்வார்கள். இவர்கள் பொய் சொல்லவில்லை. தாம் உணர்ந்ததைச்சொல்கிறார்கள். அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையா? அதாவது பேய், பிசாசு, ஆவிகள் இருப்பது உண்மையா? என்ற கேள்விகள் எழலாம்.

மேற்சொன்னவை எல்லாம் புலன்களை ஏய்க்கும் உணர்ச்சிகளே (Deceptive Perceptions) ஆகும். இவற்றை அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள்மூன்று வகையாகப் பிரிக்கின்றன.

அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே…?? அவ்வாறெனில், தினமும் இலட்சக்கணக்கில் இறைச்சிக்காகக் கொல்லப்படும் ஆடுகள், மாடுகள்,கோழிகள், மீன்களின் பேய்கள் ஏன் வருவதில்லை? இதுவரையும், ஒரு மாட்டின் பேயை, ஒரு ஆட்டின்  பேயை, ஒரு கோழியின் பேயை யாராவது பார்த்ததுண்டா?

மனிதர்களில் இறந்தவர்களுக்காக ஆத்மா சாந்தியடைய பல வகைகளில் பல பூசைகள், கிரியைகள் செய்தும் பல மூட நம்பிக்கையாளரின் குருட்டுக் கண்களுக்கு பல வடிவங்களில் பல பேய்கள் உலாவும் போது.. கதறக் கதற ஈவிரக்கமின்றி கொலை செய்யப்படும் மிருகங்கள் பறவைகளின் உயிர்களின் ஆத்மா சாந்தியடைய எதுவுமே செய்யாமல்… இருந்தும் அந்த மிருகங்கள், பறவைகள் பேய்கள் பற்றி இதுவரையும் யாரும் அறிந்ததுமில்லை… நேரடியாகப் பார்த்ததுமில்லை!!!!

எந்தவித கிரியைகளும்… பூசைகளும் செய்யாமல் இந்த உயிரினங்களின் ஆத்மா சாந்தியடையும் போது… இறந்து போன மனிதர்களுக்கு மட்டுமே ஏன் ஆத்மா சாந்தியடைய எனச் சொல்லிக் கொண்டு பல கிரியைகள்… பல பூசைகள் செய்ய வேண்டும்?

ஒருவேளை அந்தப் பூசைகள்… கிரியைகள் செய்வதால்தான் மனிதப் பேய்கள் வருகிறதோ???

கிரியைகள்… பூசைகளை நம்புவதா??? அல்லது பேய்களை நம்புவதா????

நவீன அறிவியல் உலகத்தில் ஆடைகள் அணிந்த உடலை ஊடுருவி நாளங்கள், நாடிகள், எலும்புகள் எனத் தொடர்ந்து இன்னும் பல பல உள் உறுப்புகளை மற்றும் அவற்றின் செயல்பாடு காட்சிகளை படமாக்கி கொள்ள பல படப்பிடிப்புக் கருவிகள் வந்துள்ள போதும் ஏன் இதுவரை ஒரு பேயைப் படம்பிடித்து அந்தப் பேயிடமிருந்து ஒரு நேர்காணலை எந்தவொரு விஞ்ஞானிகளும் செய்ததில்லை???

பேயின் சக்தி

உயிருடன் இருக்கும்போது எந்த  ஓர் அமானுஷ்யமான சக்தியும் இல்லாமல் இருக்கும்,  மனிதன், இனி இந்த உலகில் வாழமுடியாமல்,  எல்லாமற்று இறந்து போன பின்பு, பேயாகி சக்தி படைத்து வருவதோடு பலரையும் பயமுறுத்தி பழி வாங்குகிறான் என்றால்….ஏன் உயிருடன் இருக்கும் போது அந்தச் சக்தி அவனுக்குக் கிடைப்பதில்லை??? அப்படி ஒரு சக்தி பேய்களுக்கு கிடைக்குமெனில், அனைவரும் இறந்துபோனால் சக்தி கிடைத்த மனிதராகலாம் அல்லவா???

பேயின் இறப்பு எப்போது?

சரி… சக்தி கிடைத்த பேய்கள் எப்போது இறக்கும்? அவை இறக்குமா? இறந்தே போகாதா? அவ்வாறு இறக்காது என்றால்… ஒவ்வொரு தெருக்களிலும் சக்தி படைத்த பேய்களின் கூட்டமே கும்மாளம் அடித்துத் திரியுமே? அவற்றை நாம் எப்படி கட்டுப்படுத்துவது? அப்படி கும்மாளம் அடித்து அட்டகாசம் செய்த பேய்களை ஏன் யாருமே பார்க்கவில்லை???

சக்தி வாய்ந்த பேய், தனக்குத் தேவையானவற்றை தானே தனது சக்தியால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே..??? எதற்கு கோழைகள் போல் இன்னொருவர் மூலம் கேட்க வேண்டும்? பேய்க்கு அருகில் போனால்… பேய் பிடித்து விடுமெனில், பேய் பிடித்தவரின் அருகில் நிற்கும் போது ஏன் யாரையும் பேய் பிடிப்பதில்லை? இரவில் மட்டுமே பேய் திரிகிறது என்றால், ஏன் பகலில் இன்னொருவரை பிடித்து வந்து ஆட்டம் போடுகிறது.

ஆலயங்களால் பேயை பிடிக்காமல் வைக்க என்ன ஏற்பாடு

மசூதிகள் முகலாயர்களுடையது; கோவில்கள் இந்துக்களுடையது. தேவாலயங்கள் கிறித்துவர்களுடையது. ஏன் இவ்ஆலயங்களில் மட்டும் பேய்களை விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள்?  வேறு இடங்களில் பேய் விரட்ட முடியாதா? சரி ஒரு பேயை ஓட்ட மசூதிகள், தேவாலயங்கள், மற்றும் கோவில்கள் உண்டெனில்… மசூதி, தேவாலயம் மற்றும் கோவிலுக்கு சக்தி இருக்கிறதெனில்… ஏன் பேய் வந்து பிடிக்காமல் இருப்பதற்காக சம்மந்தப்பட்ட கோவில்களால் எதுவுமே செய்ய முடியாமல் இன்றுவரையும் உள்ளது?

 கோவில் சிலை திருட்டு ..

ஒரு கோவிலில் சிலையாக இருக்கும், ஒரு சாமி சிலையை பெயர்த்தெடுத்து ஒரு சாதாரண சக்தி இல்லாத மனிதன் திருடிக் கொண்டு ஓடி விடுகிறான். அவ்வாறெனில், சக்தி வாய்ந்த பேயை விரட்ட முடிந்த சாமியால் சாதாரண மனிதனிடமிருந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனது? இல்லாத பேய்களை விரட்டும் கோவில்களில் உள்ள பேய்விரட்டிகள் எப்படி உண்மையானவர்களாக  இருக்கு முடியும்?

 ஒருசிலர் பேயை உண்மையிலேயே பார்த்தேன் என்பார்கள்… அது, அதிக பயத்தின் காரணமாக பேயாக நினைத்து ஒரு உருவத்தைப் பார்த்து, மிகவும் பயந்து அதனால் மனதில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக உண்டாகும் ஒரு பயமும், பதற்றமும் நம்மை மிரள வைத்து பேய் பிடித்தவர்கள் போல் ஆகிவிடுகிறோம்..!

மனநோய் பாதிப்பு

மனநோய் பாதிப்பு ஏற்பட்ட ஒருவரை, நாம் பேய் பிடித்து ஆடுகிறார்கள் என தவறாக கணித்து, அவருக்கு பேய் ஓட்டுகிறேன் பேர்வழி என்று அவரை கட்டி வைத்து அடித்து கொடுமைப் படுத்துகிறோம். பின்பு, நவீன மருத்துவத்தை நம்பாமல் போலிச் சாமியாரிடம் போய் நாம் மாட்டிக் கொண்டு பேய் பிடித்து விட்டது என்று நம்பித் தொலைக்கிறோம்!!!

அது மட்டுமல்ல, உலகில் இது வரை பலப்பல ஆயிரம் ஆயிரம் போர்கள் நடந்துள்ளன. அவற்றில் தினந்தோறும் பல்லாயிரக்காணக்கான மக்கள், குதிரைகள், யானைகள் எல்லாம் ,  கத்திகளால், குண்டு வீச்சுக்களால், துப்பாக்கி குண்டுகளால்,  இறந்து போயிருக்கிறார்கள்; இறந்து போனார்கள்! ஆனால், அந்த பதற்றம் நிறைந்த நேரங்களில் இறந்தவர்களுக்காக எந்தவிதமான கிரியைகளும் யாரும் செய்ததில்லை! அவர்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகள், இன்னும் பேயாக உலவிக்கொண்டு இருக்கின்றார்களா?

உலகில் நம்மில் குறிப்பாக இந்தியாவில் மூவாயிரம் சாதிகளும், 25,000 துணை சாதி அமைப்புகளும் உள்ளன. அப்படி என்றால், ஒவ்வொரு சாதியில் இறக்கும், அல்லது விபத்தில் இறக்கும் மனிதர்களுக்கும் தனித்தனி பேய் வகைகள் உண்டா?

மின்சாரமே இல்லாத காட்டுப் பகுதியில் நிறைய உயிர்கள் இறந்தும், எந்தவிதமான கிரியைகளும் செய்யாமல் பேய்களே வராமல் இருக்கும் போது… எப்போதும் மின்சாரம் இருக்கும் உங்கள் ஊரில் பேய்கள் வருவது என்பது உங்களின் வெறும் மூட நம்பிக்கை ஆகும்.

ஆண்களுக்கு பேய் பிடிக்குமா?

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வந்து பிடிக்காதா? அதிகம் பிடிப்பது இல்லைதானே? பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?

இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்யும்

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்… பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது… ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைத்துக்கொள்ளுங்களேன்! அங்கே பூஜைக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது, ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்! என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா… யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!

இந்த ஆட்டங்களின் போது, சிலர் மற்றவர்களுக்கு நடந்த, கடந்தகால வாழ்க்கையைப் பற்றி சித்தரிக்கின்றனர். (ஓரிரு வரிகள் மட்டும்). அதை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சம்மதமாக தோன்றும் போது சரியாகிவிடுகிறது. அதாவது கடந்த காலத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள் என கூறுகிறோம்.

சிலர் ஆட்டங்களின்போது, மற்றவர்களை அதிகப்படியாய் துன்புறுத்துவதைப் பார்க்கிறோம். குறிப்பாக பளார் என அறைவது, ஹும்.. பேசாதே! நான் சொல்வதைச் செய் எனக்கூறி.. வேப்பிலை வைத்து ஆடுவதையும், சில நேரங்களில் தன்னைத்தானே வருத்திக் கொள்வதையும் கீறிக்கொள்வதையும், கத்தியை கையில் ஏந்திக்கொண்டு ஆடுவதையும் கண்டிருக்கிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சிலர் ஆடும்போது நன்மை ஏற்படுகிறது, சிலர் ஆடும்போது தீமை (காயம்) ஏற்படுகிறது. இதை வைத்தே மக்கள் நல்ல பேய், கெட்ட பேய் என வகைப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

இந்த நம்பிக்கைகள் ஆதிவாசியிலிருந்து அல்ட்ரா மாடர்ன் மனிதன் வரை அடக்கம். இங்கே கல்விக்கு, பணத்திற்கு, பட்டத்திற்கு, நாட்டிற்கு, வீட்டிற்கு, ஜாதிக்கு மதத்திற்கு என்று வித்தியாசம் கிடையாது.எல்லா மதங்களிலும் இந்த பேய் அல்லது ஆவி போன்றவற்றின் ஆதிக்கம் அதிக அளவில் ஆளுகை செய்கிறது.

இந்தப் பேய் பிசாசு ஆவிகள் ஆகியவற்றின் தொந்தரவுக்கு உள்ளானவர்கள்  நிலையைப் பார்ப்போம்:

இவர்களில் சிலர் பேய்! பிசாசு! ஆவியைப் பார்த்ததாகவும், சலங்கை ஒலியைக்  கேட்டதாகவும், கடவுள் காட்சி கொடுத்ததாகவும் சொல்லுவார்கள். இவர்கள் பொய்  சொல்லவில்லை. தாம் உணர்ந்ததைச் சொல்கிறார்கள். எனவே இவர்களைப் பொய்யர்கள் என்று  அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டியதில்லை. அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையா?

அதாவது பேய்! பிசாசு! ஆவிகள்!! இருப்பது உண்மையா? என்ற கேள்விகள் எழலாம்.மேற்  சொன்னவை எல்லாம் புலன்களை ஏய்க்கும் உணர்ச்சிகளே! (Deceptive perceptions ) ஆகும்.  இவற்றை அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் மூன்று வகையாகப் பிரிக்கின்றன.

1-மாயப்புலன் உணர்ச்சி. (Illusion)

2- மயக்கப்புலன் உணர்ச்சி

3- மருட்சி. (Delusion)

மாயப்புலன் உணர்ச்சி

கண், காது, மூக்கு, உள்ளிட்ட அய்ந்து புலன் உணர்ச்சிகளின் அடிப்படையில் மாய  உணர்ச்சிகள் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நல்ல வெயிலில் நீண்ட தார்ச்  சாலையில் நடக்கும் போது மிகத் தொலைவில் நீர் இருப்பது தெரியும். உண்மையில்  இருக்காது. இதனைக் கானல் நீர் என்பர். இது கண் உணரும் மாயக் காட்சியாகும்.  நெல்லிக்காய் தின்றபின் நீரைக் குடித்தால் இனிப்பது போல் உணர்பவர். அதனால் நீர்  இனிப்பாகாது. இது நாக்கின் ஒருவகை மாய உணர்ச்சியாகும். இதுபோல் மாய உணர்ச்சிகளை  நமது ஐம்புலன்கள் உணர வாய்ப்பு உண்டு. சரியான ஆய்வின் மூலம் இந்த மாய உணர்ச்சிகளை  வெளிப்படுத்தலாம்.

மயக்கப் புலன் உணர்ச்சி

இயற்பியல் (Physics) வேதியல் (Chemistry ) உயிரியல் (Biology ) மற்றும் உளவியல்  (Psycho;ogical) காரணங்களால் உண்டாகும் உணர்ச்சிகளே மயக்கப் புலன்  உணர்ச்சிகளாகும்.

3- சிறு பிள்ளையிலிருந்து பொய்யான கருத்துக்களை மனதில் திணித்து வந்ததன் விளைவாக  ஏற்படுவதே மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவிகள், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு,  மந்திரம் போன்றவையெல்லாம் இந்த மருட்சியில் அடங்கும்.

இயற்பியல் காரணங்களால் உண்டாகும் மயக்கப்புலன் உணர்ச்சி

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜே. டெல்காடோ ஆகியோர் மின் துடிப்புகள் (Electric Impulses) மூலம்  மூளையில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை (Controls) தூண்டிவிட்டு சினம்,  அச்சம், பசி, வருத்தம், துக்கம், துயரம், எக்களிப்பு, காதல், காமம், ஆர்வம்,  ஆக்கிரமிப்பு, உணர்ச்சி, நட்பு, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம்- போன்றவற்றை  சாதாரண நடைமுறையில் வாழ்வில் உணர்வது போல் செயற்கையாகத் தூண்டும் முயற்சியில்  வெற்றி பெற்று அதனைப் படைத்துள்ளார்கள்.

  தாளக்கட்டமைந்த பறையோசை, சீராகக் கைத்தட்டும் ஓசை, மந்திர உச்சாடணம், பண்ணோடு  இசைந்த பாடல், பாடல் ஒப்புவித்தல், ஒலி முழக்கமிடல், நடனம், அங்க அசைவுகள்,  கண்களில் மாற்றி மாற்றி வெளிச்சத்தையும் இருட்டையும் உண்டாக்குதல், ஒரு பொருளை  உற்று நோக்கல், ஜோதி, படிகம் (Crystal) மை போன்றவற்றை உற்றுநோக்கல், போன்ற  செயல்கள் மூலம் மயக்கப்புலன் உணர்ச்சி அனுபவங்களை உண்டாக்க முடியும்.”பேய்” ஆட்ட  அங்க அசைவுகள், முகச் சுழிப்புகள், காலடியாட்டம், கரக ஆட்டம், ஆலய பூசை, அங்க  அசைவுகள், பெந்த கோஸ்ட் என்னும் கிறிஸ்துவப் பிரிவினரின் பக்தி அசைவுகள் , உடல்  முறுக்கு நடனம், பாப் இசை நடனம்- போன்றவை நரம்பு மண்டல இயக்கத்தின் சத்த  இசைத்தூண்டல்களே ( Rythamical stimulations of the nervous system ) ஆகும்.

வேதியல் காரணங்களால் தோன்றும் மயக்கப்புலன் உணர்ச்சி

தொல்பழங்காலம் முதல் கள், சாராயம், கஞ்சா, அபின், ஊமத்தை விதை- ஆகியவற்றினை  உட்கொண்டு மயக்கக் காட்சிகளை நாமே உருவாக்கிக் கொள்ளும் நுட்பங்களை நம் முன்னோர்கள்  தெரிந்து வைத்து இருந்தனர். அண்மைக் காலத்தில் எல்.எஸ்.டி., மாரிஜினோ ஹிராயின், மெஸ்காலின், போன்ற போதை மருந்துகள் மூலம் இத்தகைய மயக்கக் காட்சிகளை அனுபவித்து சீர்செய்ய இயலாத அளவுக்கு உடலைப் பலர் சீரழித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை முத்து முதலி தெருவில் உள்ள பாலாஜி கோயிலில் பூசை பிரசாதத்தை உட்கொண்ட பக்தர்கள் புதுவகையான பக்திப் பரவசவத்தில் ஆழ்ந்து  வந்தார்கள். 07-05-1963-இல். இந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் 3,960 கிராம் கஞ்சா வைத்து இருந்ததற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது பூஜை  பிரசாதத்தில் கஞ்சாவைத் தாம் கலந்த செயலை ஒப்புக் கொண்டார்.

  உயிரியல் காரணங்களால் தோன்றும் மயக்கப்புலன் உணர்ச்சி

மனிதர்களின்  குறிப்பிட்ட வித்தியாசமான நடத்தைப் போக்குகள் அவர்கள் உடலில் உள்ள குரோமோசோம்கள்  (Chromosomes ) உடன் தொடர்புடையவை என்று கனடா நாட்டைச் சேர்ந்த ஆர்லண்டோமில்லரும்,  பேரா ஆலன்பிஷரும் கண்டுபிடித்துள்ளனர். உடலில் சிலவகை வைட்டமின்கள் நொதிகள்  (Enzymes) போன்ற பற்றாக்குறையின் காரணமாக மனக் கோளாறுகள் உண்டாக முடியும்.  வைட்டமின் “பி”- குறைவின் காரணமாக பெரி பெரி என்னும் மனநோய் உண்டாகும். மனப்  பிறழ்வான நடத்தை இந்த நோயின் இன்றியமையாத அறிகுறிகளாகும். வைட்டமின் குறைவால்  ஏற்படும் நோய்களில் ஒன்று பெல்லாக்ரா ஆகும். உடலில் உள்ள சில சுரப்பிகளின் கோளாறு காரணமாகவும்  சில மனநோய்கள் உண்டாகும். எண்டாக்கிரினல் சுரப்பிக் கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட மனநோய் உண்டாகும். பாராதைராய்டு சுரப்பி  (Parathyroid Gland) குறைவாகச் சுரப்பதால் மயக்கக் காட்சிகள் அதிகம் தெரியும்.

உளவியல் காரணங்களால் தோன்றும் மயக்கப் புலன் உணர்ச்சிகள்

மனித மனமானது கருத்தேற்றங்களினால் (Suggestions ) பாதிக்கப்படக்கூடும் என்பது  உளவியல் உண்மையாகும். இத்தகைய கருத்தேற்றங்கள் தன் கருத்தேற்றம் (Auto-Suggestion) அல்லது தன்வசியம் (Auto-hypnosis) என்றும் இரு வழியில் நடைப்பெறும். மதக்  கருத்துக்கள் ஊட்டுதலும், மூளைச் சலவை (Brain washing) செய்தலும் மெதுவான  தொடர்ச்சியான மன வசிய முறையாகும்.

 பேய்! பிசாசு! ஆவி! தொடர்பான மன வசிய முறையில் சிறு பிள்ளையிலிருந்தே  மனத்திற்குள் திணிக்கப்படுகின்றன.பேய் பிடித்தவரைப் போல் பிதற்றுதல், அயல் மொழியில்  பேசுதல், சாமி வந்து ஆடுதல்- போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின்  விளைவுகளே ஆகும். இதில் பேய் பிடித்து அயல் மொழியில் பேசுபவர் குளோசோலேலியா  (Clossolalia) என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர்கள் வாயில் அயல்  மொழி போல் வெளிப்படுவது உண்மையில் அயல் மொழி அல்ல என்பதனை அந்தக் குறிப்பிட்ட மொழி  தெரிந்தவரை அருகில் வைத்து நிருபிக்கலாம்.

  சாதாரணமாகக் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் கண் மருத்துவரை அணுகுவர். தோல்  நோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தோல் நோய் மருத்துவரை அணுகுவர். காது  சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் காது மருத்துவரை அணுகுவர். ஆனால் மனம் சம்பந்தப்பட்ட  நோய்களுக்கு மனநோய் மருத்துவரை அணுகாமல் பேய்! பிசாசு! ஆவி விரட்டும் செயலில்  ஈடுபடுவது அறிவுடமையாகுமா?

ஐ.ஏ. எஸ்.,ஐ.பி.எஸ்., மருத்துவர்- ஆகியோரை பேய்! பிசாசு! ஆவி பிடித்து ஏன்  ஆட்டுவதில்லை? பார்ப்பன ஆண்களை, பெண்களை ஏன் இவை ஆட்டுவதில்லை? எனவே இனிமேலும்  பேய்! பிசாசு! ஆவி! மூட நம்பிக்கைகளுக்கு நாமும் பலியாகாமலும், மற்றவரையும்  பலியாகாமல் காப்பதும், முக்கிய மனித நேயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

மனநோய் மருத்துவரைப் பைத்தியம் பிடித்தவர் மட்டுமே அணுக வேண்டும் என்ற தவறான  கருத்து மக்களிடையே நிலவிவருகிறது. அதைப் போக்கி மனநோய் மருத்துவரை நாடுமாறு  அறிவுறுத்த வேண்டும்.

மருட்சி

சிறு பிள்ளையிலிருந்து பொய்யான கருத்துக்களை மனதில் திணித்து வந்ததன் விளைவாக  ஏற்படுவதே மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவிகள், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு,  மந்திரம், போன்றவையெல்லாம் இந்த மருட்சியில் அடங்கும். மேற் சொன்னவற்றிலிருந்து  படிப்பு அறிவு இல்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய்! பிசாசு! ஆவி!  தொந்திரவுகளுக்கு உள்ளாவதன் காரணங்கள் தெளிவாகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்  கிராமங்களுக்குப் பகுத்தறிவாளர் குழு நேரில் சென்று ஆய்வு செய்ததும் உண்டு.

  உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் 1983 – இல் மேடக் மாவட்டத்தில் பனிமதி!! (Banimathi) என்ற பெயரில் பேய்! பிசாசு! பில்லி! சூனியங்களுக்கு- பல கிராமங்களில் மக்கள்  பலியாகி, பலர் உயிருடன் எரிக்கப்பட்டும், சிலர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி  மக்களை ஏமாற்றி பணம் பறிக்க- மாவட்ட காவல்துறைக்கு இது ஒரு பெரும் சட்ட ஒழுங்கு  பிரச்சனையாகி விட்டது. உடனே மாவட்ட காவல் அதிகாரி விஜயவாடாவில் உள்ள நாத்திக  மையத்திற்கு அழைப்பு விடுத்தார். அங்கிருந்த ஒரு நோய் மருத்துவர், இரண்டு பொது  மருத்துவர்கள், ஒரு இயல்பியல் அறிஞர், ஒரு சமூகவியல் அறிஞர், ஒரு மனோவசிய அறிஞர்,  ஒரு மாஜிக் நிபுணர், மற்றும் சில சமூக சேவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு மேற்சொன்ன  கிராமங்களுக்கச் சென்று ஆய்வு செய்தது. யார் யார் என்னென்ன நோங்களுக்கு உள்ளாயினர்?  எதெது மோசடி வேலை? என்பதையெல்லாம் கண்டறிந்து அறிக்கையின் மூலம்  வெளிப்படுத்தினர்.

பேய்! பில்லி! சூனியம்! ஒரு கலாச்சார நம்பிக்கையாக இருந்தது என்றும், பல்வேறு  சமூக பொருளாதார அரசியல் மற்றும் மனோவியல் காரணங்களே இந்த மூடநம்பிக்கைகளை  உருவாக்கின என்றும் ஆய்வின் முடிவில் வெளிப்படுத்தினர். படிப்பு அறிவு அற்ற  கிராமப்புறப் பெண்களை பேய் பிடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு. பருவம்  அடையும் கிராமப்புறப் பெண்ணுக்குத் தனது உடலில் உணர்வில் ஏற்படும் மாற்றங்களைப்  பற்றிச் சரியான விளக்கம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அதனால் மனநோய்க்கு  ஆளாகி பேய் பிடிப்பது உண்டு.

                அடுத்து பாலியல் உடலுறவு

குழந்தை பிறப்பு பற்றிய அடிப்படைத் தகவல்கள் சரியாகத் தெரியாத பெண் திருமணம் செய்துக் கொண்டு விவரமற்ற கணவனால் கட்டாய உடலுறவுக்குள்ளாகி திகில் அடைந்து  மனநோய்க்குள்ளாகி பேய் பிடிப்பதும் உண்டு. இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்தவுடன்  இந்த பேய்கள் ஓடிவிடும். ஆக இவையெல்லாம் அறியாமையால் விளைந்த மனக்கோளாறுகளே. சரியான  மனநோய் மருத்துவரை அணுகி குணப்படுத்தக்கூடிய இந்த வகைக் கோளாறுகளை பேய்  பிடித்ததாகச் சொல்லி ஏமாறுவதும், ஏமாற்றுவதும்- இனியும் நடைப்பெற நாம் அனுமதிக்கக்  கூடாது.

பேய், பிசாசு, பில்லி சூனியம் ஒரு சமூகக்கலாச்சார நம்பிக்கையாக இருந்தது என்றும்பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும்உளவியல் காரணங்களே இந்த மூட நம்பிக்கைகளைஉருவாக்கின என்றும் ஆய்வின் முடிவில்வெளிப்படுத்தினர்.

படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களை ‘பேய்பிடிப்பதற்கு’ ஒரு குறிப்பிட்ட காரணம்உண்டு. பருவம் அடையும் கிராமப்புறப்பெண்ணுக்குத் தனது உடலில், உணர்வில் ஏற்படும்மாற்றங்களைப்பற்றி சரியான விளக்கம்பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அதனால்மனநோய்க்குள்ளாகி ‘பேய்’ பிடிப்பது உண்டு.அடுத்து ‘பாலியல்’ உடலுறவு, குழந்தை பிறப்புபற்றிய அடிப்படைத் தகவல்கள் சரியாகத் தெரியாதபெண் திருமணம் செய்து கொண்டு, விவரமற்ற கணவனால் கட்டாய உடலுறவுக்குள்ளாகி, திகில்அடைந்து மனநோய்க்குள்ளாகி ‘பேய்’ பிடிப்பதும்உண்டு. இரண்டு, மூன்று குழந்தைகள் பிறந்தவுடன்இந்த ‘பேய்’கள் ஓடிவிடும். ஆக இவையெல்லாம் அறியாமையால் விளைந்த மனக்கோளாறுகளே சரியான மனநோய் மருத்துவரை அணுகி எளிதில்குணப்படுத்தக் கூடிய இந்த வகைக் கோளாறுகளை‘பேய்’ பிடித்ததாகச் சொல்லி ஏமாறுவதும், ஏமாற்றுவதும் இனியும் நடைபெற நாம் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிவியல் கருத்துகளை மக்களிடம்  பரப்பி வந்த மராட்டிய பகுத்தறிவாளர் தபோல்கர், மதவெறியரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *