ஆயுள் நீடிப்பதற்காக  உண்ணும் உணவும் பருகும் பானங்களும்

ஆயுள் நீடிப்பதற்காக  உண்ணும் உணவும் பருகும் பானங்களும்

  • By Magazine
  • |

  C. முருகன்

உலக ஆய்வில் அதிகம் தேனீர் அருந்தும் நாடு இந்தியா. ஜப்பானிய மக்களும் இந்தியர்களை போன்று அதிக அளவில் தேனீர் பருகுகின்றனர். தேயிலை 1660-ல் ஆசிய நாட்டில் தோன்றியது . 19-ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்கா நாடுகளில் பிரபலமாக தோன்றியது. 1880-ல் தான் அமெரிக்காவில் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே நம் நாட்டில் தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.   இந்திய மக்கள் தேயிலை அதிகமாக தேனீராக குடிக்கின்றனர்.

இன்னும் பல தேனீர் வகைகள் உள்ளன. அவை

  1. டோஃபு (சாயா பன்னீர்)
  2. மிசோ (ஒரு வகையான ஜப்பானிய மசாலப் பொருள்)
  3. டுனாமீன் (இது ஒரு வகை மீன்)
  4. கோட்
  5. கோயா (பாகற்காய்)
  6. கோம்பு (ஒருவகை கடற்பாசி)
  7. முட்டைகோஸ்
  8. நோரி (கடற்பாசி)
  9. வெங்காயம்
  10. முளைவிட்ட சோயா
  11. ஹெச்சிமா (வெள்ளரி போன்ற காய்)
  12. சோயாபீன்ஸ் (அவித்தது அல்லது பச்சையாக)
  13. சீனிக்கிழங்கு
  14. குடமிளகாய்
  15. சன்பின்-சா (மல்லிகைத் தேநீர்)

                இவையனைத்தும் எதிர் ஆக்சிஜனேற்றகளான உயிர் அணுக்கள் மூப்படையும் வேகத்தை குறைக்கிறது.

சன்பின் – சா

                ஒக்கினாவா மக்கள் அதிக அளவில் எடுத்து கொள்வது சன்பின் சா ஆகும். இது பசுந்தேநீரும் மல்லிகை மலர் தேநீரும் கலந்த நீராகும். இது மேற்கத்திய நாடுகளில் பரிமாறப்படும் மல்லிகை தேனீரை போன்றது. மல்லிகை தேநீர் சீனாவிலிருந்து வருகிறது. 1988-ம் ஆண்டில் ஒக்கினாவா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த வரரோகா ஷோ நடத்திய ஆய்வு. இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் ஆற்றல் மல்லிகைத் தேநீருக்கு இருப்பதைக் கண்டுபிடித்தன.

பிற பயன்கள்

  1. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
  2. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
  3. மன அழுத்தம் குறைவதற்கு உதவுகிறது.
  4. இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.

                ஒக்கினாவா மக்கள் தினமும் சராசரியாக மூன்று கோப்பை சன்பின் சா அருந்துகின்றனர்.

கீரின் டீ (பசுந்தேநீரின் பலன்கள்)

                பசுந்தேநீருக்கு ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருப்பதாக பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆய்வுகள் அதை உறுதி செய்துள்ளன. இதை அடிக்கடி குடிப்பது நீண்ட ஆயுளுக்கு உதவும் என்பதையும் ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

                பசுந்தேனீர் சீனாவில் தோன்றிய ஒன்று. அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள போதிலும், ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் அது ஏனைய நாடுகளை வந்தடைந்தது. தேயிலை கொழுந்தை பசுமை மாறாமல் உலர வைத்து தயாரிப்பதால் இதிலிருக்கும் சத்துக்கள் அப்படியே தக்க வைத்துக் கொள்ளப்படுகின்றன. இது கீழ்க்கண்ட பலன்களை தருகின்றது.

  1. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.
  2. இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
  3. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  4. இன்ஃபுளுவென்சாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது (வைட்டமின் C)
  5. எலும்புகளை வலுப்படுத்துகிறது. (ஃபுளுரைடு)
  6. ஒருசில மற்றுயிரி தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
  7. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
  8. உள்ளுறுப்புகளைச் சுத்தப்படுத்துகிறது.

விக்குவாசா

                விக்குவாசா இது ஒருவகைப் பழமாகும். ஒக்கினாவில் கிடைக்கும் ஜப்பானிலேயே ஒகிமிகில்தான் மிக அதிகமாக ஷிக்குவாசா பழங்கள் விளைகின்றன. இப்பழம் கடுமையான அமிலத் தன்மை கொண்டது. அதன் பழச்சாற்றை நீர்த்துப்போக வைக்காமல் குடிப்பது கடினம். இதன் சுவை ஆரஞ்சுப் பழத்திற்கும் எலுமிச்சம் பழத்திற்கும் இடைப்பட்ட ஒன்றாக இருக்கும்.

                ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற அனைத்துப் பழவகைகளிலும் நொபிலெட்டின் உள்ளது. விக்குவாசா பழங்களின் ஆரஞ்சு பழங்களில் இருப்பதைப் போல நாற்பது மடங்கு அதிகமான நொபிலெட்டின் உள்ளது. அதை உணவில் சேர்த்து கொள்வதால் புற்றுநோய், நீரழிவு, அதீதப் பருமன், தமனிச்சுவர் தடிமானம் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

                அதோடு விக்குவாசா பழங்களில் வைட்டமின் சி.பி., பீட்டா, கரோட்டின் மற்றும் சில தாதுப் பொருள்களும் உள்ளன. அவை ஜப்பானிய பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்படுவதோடு உணவு சுவை கூட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. இது பழரசமாகவும் பருகப்படுகின்றது.

எதிர் ஆக்ஸினேற்றிகள் நிறைந்த உணவுகள்

                இங்கிலாந்திலுள்ள டெய்லி மிரர் பத்திரிகை வல்லுநர்கள் பரிந்துரைத்திருந்த மூப்படைவதற்கு எதிராகச் செயல்படும் உணவுகளின் பட்டியல் ஒன்றை 2010-ம் ஆண்டில் வெளியிட்டிருந்தது.

அவை,

  1. புரோக்கலி சார்டு போன்ற காய்கறிகள்
  2. இவற்றில் அதிக அளவில் தாதுப்பொருட்கள், நார்ப்பொருட்கள் உள்ளன.
  3. சால்மன், மெக்கரெல், டூனா, சார்டைன் போன்ற கொழுப்பு மீன்கள் அவற்றின் கொழுப்பில் எதிர் ஆக்சிஜனேற்றிகள் ஏராளமாக உள்ளன.
  4. ஸ்டராபெர்ரி, ஏப்ரிகாட், கிச்சிலி போன்ற பழங்கள் அவற்றில் வைட்டமின் அதிக அளவில் உள்ளன. அதோடு, உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் அவை உதவுகின்றன.
  5. புளுபெர்ரி, கோஜிபெர்ரி போன்ற பெர்ரி வகைப்பழங்கள் அதிக அளவு எதிர் ஆக்ஸினேற்றிகளாக உள்ளன.
  6. உலர் பழங்கள் அவற்றில் உள்ள வைட்டமின்களும் எதிர் ஆக்ஸினேற்றிகளும் அதிக அளவில் உள்ளன.
  7. கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் இவற்றில் அதிக அளவு தாதுப்பொருள்கள் உள்ளன.
  8. ஆலிவ் எண்ணெய் இதில் எதிர் ஆக்சிஜனேற்றிகள் அதிக அளவில் உள்ளன.
  9. சிவப்பு ஒயின் இதில் எதிர் ஆக்சிஜனேற்றிகள் உள்ளன. அதோடு இதற்கு இரத்தக்குழாய்கள் விரிவாக்க குணமும் உண்டு. ஆனால் இது மிதமான அளவில் பருக வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

                சுத்திகரிக்கப்பட்டச் சர்க்கரை மற்றும் தானியங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மாட்டுப்பால் மற்றும் அதுசார்ந்த பொருட்கள் ஆகியவை அடங்கும்.

ஹராஹாசிபூ ஜப்பான் மொழி

                நாம் உட்கொள்ளும் உணவின் அளவை குறிப்பிடுகிறது.

                ஹராஹசி பூ கருத்தாக்கத்தைப் பின்பற்றுவதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. உணவுக்கு பின் பரிமாறப்படும் இனிப்பை தவிர்த்து விடுவது தான் அது அல்லது பரிமாறப்படும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்டு முடிக்கின்ற போது லேசாகப் பசி இருக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

                மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஜப்பானியில் பரிமாற்றப்படும் உணவின் அளவு குறைவாகவே இருப்பதற்கு இதுதான் காரணம்.

                மேற்கில் சூப் முக்கிய உணவு இனிப்பு என்று உணவு தனித்தனியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பரிமாறப்படுவது போல் ஜப்பானில் பரிமாறப்படுவதில்லை. மொத்த உணவும் சிறு சிறு தட்டுகளில் வைத்து ஒரே சமயத்தில் கொடுக்கப்படும். ஒரு தட்டில் சாதம் இருக்கும். ஒன்றில் காய்கறி இருக்கும். ஒரு கிண்ணத்தில் சூப் இருக்கும். இப்படி சின்னத் தட்டுகளில் பரிமாறப்படுவது அளவுக்கு அதிகமாக உண்பதைத் தடுக்க உதவுகிறது. சூப் தேநீராகவும், சூப்பாகவும் பருகப்படுகிறது.

குறைவாக சாப்பிட்டு நீண்ட நாள் வாழலாம்

                இக்கருத்தை எதிர்ப்பவர்கள் குறைவாகவே இருப்பார். தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழி வகுக்காதவரை நம்முடைய உடல் நம்மிடம் கேட்பதை விட குறைவாக ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருள்களை சேர்த்து கொள்ள வேண்டிய அவசியம் நம்முடைய உடலுக்கு போதுமானது ஆகும்.

                ஜப்பானில் இரயில் இல்லாத ஒரே பகுதி ஓக்கினாவாதன் என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அங்குள்ள மக்கள் கார்களை பயன்படுத்தாமல் இருக்கும் போது நடக்க வேண்டும் அல்லது மிதிவண்டியில் பயணிக்க வேண்டும். உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய உப்பின் அளவு நாளொன்றுக்குப் பத்து கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று ஜப்பான் அரசின் பரிந்துரையைப் பின்பற்றி கொண்டிருக்கின்ற ஒரே பகுதி ஓக்கினாவாதன். அதிலும் இந்த மக்கள் 7 கிராம் உப்பை தான் தினமும் எடுத்து கொள்கிறார்கள்.

ஜப்பான் மக்களின் பழக்கங்கள்

                ஜப்பானில் இதயநோயபல் இறந்தவர்களின் எண்ணிக்கை ஓக்கினாவாவில் தான் மிகவும் குறைவு. இதற்கும் அவர்களுடைய உணவுப் பழக்கத்திற்கும் ஒரு நேரடி தொடர்பு இருக்கிறது. ஊட்டச்சத்துக்குரிய பற்றிய பேச்சை எடுத்தாலே ஓக்கினாவா உணவு பழக்கம் பற்றி பேசுவதற்கு தக்கக் காரணம் இருக்க செய்கிறது.

                பின்னர் பிதாட்லி வில்காக்னீம், சிரைக்வில் காக்ஸீம் மகோடாவின் ஆய்வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் மூவரும் இணைந்து ஓக்கினாவா புரோகிராம் என்ற பிரபலமாக எழுதினர். அவர்களின் உணவு பழக்கம் சூப், தேநீர் மற்றும் காய்கறி வகைகள் அதிகமாகவும் இறைச்சி வகைகள் சிறிதளவும் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மீன்களும் எடுத்து கொள்வதாலும் உடற்பயிற்சியாலும் அதிகம் மூப்படையாமலும், நோய் தொற்று பாதிக்காமலும் வாழ்வதற்கு ஆதாரம் என்று ஆய்வில் கூறப்பட்டது. நாமும் இந்த பழக்கத்தை கடைபிடித்தால் நன்றாக வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *