SAVKIA-290 வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில், மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் முன்னிலையில் 02.08.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், திரு.கே.செல்வநாதன் ஆசான் SAVKIA -வின் நோக்கம் குறித்துப் பேசியதோடு, பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், வயிற்றிரைச்சல், உஷ்ணபேதி இவற்றுக்கு தயிர் சுண்டி சுக்கு சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக, மரு.ஷேக் Mega power காபி மருத்துவபயன்கள் குறித்து தெளிவாக விளக்கிப் பேசினார்.
அடுத்ததாக மரு.கமலக்கண்ணன் கல்லீரல் வீக்கம், பசியின்மை, அஜீரண கோளாறு, அஜீரண வாந்தி, பித்த மயக்கம், பித்தப்பை கல் இவற்றுக்கு சூரணம் ஒன்றினை கூறினார். மேலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு சூரணம் செய்முறையையும், உயர் ரத்த அழுத்தம் குணமாக எளிய மருந்தினையும் கூறினார்.
அடுத்ததாக மூட்டுவலி, மூட்டுவீக்கம் இவை குணமாக பூச்சு மருந்து செய்முறையை கூறினார்.
திரு.கருணாநிதி ஆசான் உடல் ஆரோக்கியமும் பெருக கருங்குறுவை அரிசி சூரணம் செய்முறையை கூறினார். மேலும் சொரியாசிஸ் எனும் தோல்நோய்க்கு வெளிபூச்சு தைலம் செய்முறையை கூறினார்.
அடுத்ததாக திரு.ஜெபமணி ஆசான் இருமல், அதிசாரம், கிறாணி இவற்றுக்கு சாரணாதி சூரணம் செய்முறையை கூறினார்.
அடுத்ததாக மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் களரிக்கலை மற்றும் சிலம்பம் குறித்துப் பேசியதோடு, மூலநோய்க்கு சூரணத்தினையும், புழுவெட்டு மாற எளிய மருந்தினையும், முடக்குவாதத்துக்கு சூரணத்தினையும், புற்றுநோய்க்கான எளிய மருந்தினையும், தலைச்சுற்று, கண்பார்வை, மேகம், உஷ்ணம், மஞ்சள்காமாலை, பித்தம், பைத்தியம், படபடப்பு, முடி உதிர்தல், தூக்கமின்மை, ஜலதோஷம் இவற்றுக்கு பால் தைலம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.
கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply