கே.பி.பத்மநாபன்
பகுத்தறிவைப் பயன்படுத்திப்
படிப்பறிவை உயர்த்திக் காட்டு
வகுத்திட்ட பழமை மூட
வழக்கத்தை ஒழித்துக் காட்டு
தகுமென்றோ தகாத தென்றோ
தனியறிவால் பிரித்துக் காட்டு
தொகுத்த பல நூல்கற்றாலும்
தூயவையா தென்றே காட்டு!
மிகுதியான கற்பனைகள்
மெய்யற்ற பொய்க் கதைகள்
மகுடியின் முன் நாகம்போல் உன்
மதியினையே மயக்கும் தம்பி
புகுந்திட்ட ஐயம் நீக்கப்
புத்தியுடன் வினாவெழுப்பு
தகுதிவிடை கிட்டா தாயின்
தள்ளிவிடு மூட மென்றே!
சொகுசாக வாழ்வதற்காய்ச்
சூதுகதை செய்தார் சில்லோர்
செகுத்தானின் கதையால் அஞ்சச்
செய்திட்டார் இன்னும் சில்லோர்
உகுத்திட்டப் பொய்க்கண்ணீரால்
உரைகதைகள் ஏராளம்காண்
பகுத்தறிந்து மெய்யைக் கண்டுன்
பட்டறிவை மேம்படுத்து!
Leave a Reply