கமல. அருள் குமார்
சிறகை விரிக்க
சிட்டுக்கு
வானம் முழுவதும்
சுதந்திரம்…
மணத்தை பரப்ப
மொட்டுக்கு
காற்று முழுவதும்
சுதந்திரம்..
கண்டபடி ஆட
மீனுக்கு
கடல் முழுவதும்
சுதந்திரம்…
வண்டு போல ஓட
மானுக்கு
காடு முழுவதும்
சுதந்திரம்…
சுதந்திரம் பெற்ற
மனிதனுக்கு
சொந்த நாட்டிலும் இல்லை
சுதந்திரம்…
இயற்கை
போடுவதில்லை
எதற்கும் தடை..
செயற்கைத்
தடையென்றால்
சினம் கொண்டதை உடை..
Leave a Reply