– ஓஷோ
அது இன்னமும் காலைப் பொழுது. ஒரு கிராமத்தின் குழந்தைகள் அப்போது தான் பள்ளியை அடைந்திருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஒரு அதிகாரி ஆய்வு செய்ய வந்தார். முதல் வகுப்பறைக்கு சென்று சொன்னார். மூன்று மிகவும் புத்திசாலி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வந்து நான் கரும் பலகையில் எழுதக்கூடிய வினாவிற்கு விடை காணுங்கள்.
ஒரு மாணவர் மெதுவாக எழுந்திருந்து கரும்பலகையிலிருந்த வினாவுக்கு விடையளித்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு இரண்டாவது மாணவர் வந்தார். அவரும் வினாவுக்கு விடையளித்து அமைதியாக இருக்கைக்கு போய் அமர்ந்தார். மூன்றாவது மாணவர் எழுந்திருக்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார். அவர் வந்ததும் தயக்கத்தோடு கரும்பலகை முன்னால் நின்றார். அவர் விடையளிக்க ஒரு வினா எழுதியிருந்தார். ஆனால் திடீரென்று அந்த அதிகாரி முதலில் வந்த மாணவர்தான் இவர் என்பதை உணர்ந்தார்.
எனக்குத் தெரிந்தவரையில், நீ முதலில் வந்த அதே மாணவன் தானே என்று அவர் கேட்டார்.
மாணவன் சொன்னான், என்னை மன்னித்து விடுங்கள், மூன்றாவது மிக புத்திசாலியான மாணவர் இன்று கிரிக்கெட் போட்டியை பார்க்க போயிருக்கிறான். அவனுக்காக நான் வந்திருக்கிறேன். அவனுக்காக எந்த வேலையையும் செய்ய சொல்லி இருக்கிறான்.
இதை கேட்டதும் அந்த ஆய்வாளர் கோபமடைந்தார். உரக்க சத்தம் போட்டார். அவர் கொதிப்படைந்து விட்டார். அவர் சொன்னார், ஒரு மாணவருக்காக இன்னொரு மாணவர் வினாவுக்கு விடை கொடுப்பதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? அல்லது யாரோ ஒருவர், யாரோ ஒருவருக்காக பரீட்சை எழுத முடியுமா? இதை விட நேர்மையற்ற தனம் இருக்க முடியுமா? நடந்தது மிகவும் தவறு என்று மாணவர்களுக்கு நீண்ட வகுப்பே நடத்தினார்.
பிறகு அவர் ஆசிரியரிடம் திரும்பி ஐயா, நீங்கள் இதையெல்லாம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். இதை எல்லாம் தடுக்கவில்லை. என்னை முட்டாளாக்கப் பார்த்திருக்கிறீர்கள். இந்த மாணவர் ஏற்கெனவே வந்தவர் தான் என்று கூட சொல்லவில்லை.
இப்போது ஆசிரியரும் மாணவர்கள் மீது கோபம் அடைந்தார். திடீரென்று ஆய்வாளர் அந்த ஆசிரியரிடம் உங்களுக்கு இந்த மாணவர்களை தெரியாது போலிருக்கிறதே.
ஆசிரியர் சொன்னார், என்னை மன்னித்து விடுங்கள். உண்மையில் நான் இந்த வகுப்பு ஆசிரியர் இல்லை. இந்த வகுப்பு ஆசிரியர் கிரிக்கெட் பந்தயம் பார்க்க போயிருக்கிறார். இன்றைக்கு என்னை இந்த வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.
திடீரென்று அவர் சாந்தமாகி சொன்னார், இது நல்லது. நீங்கள் அதிர்ஷ்டசாலி. உண்மையான ஆய்வாளர், ஆய்வுக்கு வரவில்லை. அவர் கிரிக்கெட் பந்தயம் பார்க்க போயிருக்கிறார். உண்மையான ஆய்வாளர் இன்றைக்கு வந்திருந்தால் நீங்கள் எல்லாம் சிக்கியிருப்பீர்கள். நாமெல்லாம் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் சமமான குற்றவாளிகள், பொறுப்பேற்க வேண்டியவர்கள். மற்றவர்கள் மீது விரலை நீட்டுவது என்பதல்ல, மாறாக முக்கியமானது நமக்குள்ளே திரும்பிப் பார்த்து, நாம் எந்த மாதிரியான சூழலில் இருக்கிறோம் என்பதை நமக்குள்ளே பார்க்க வேண்டும். நாம் ஒரே படகில் பயணிக்கிறோம். இந்த உலகமும், சமூகமும் உருவானதற்கு நமக்கெல்லாம் சமமான பொறுப்பு இருக்கிறது. உலகத்தின் இருட்டிற்கு நம்முடைய பங்களிப்பும் இருக்கிறது. அதை உருவாக்கியதில் நாமும் பங்குதாரர்கள்.
Leave a Reply