வடை சுட்ட பாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்?

வடை சுட்ட பாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்?

  • By Magazine
  • |

கோ.சுரேஷ்குமார்

ஒரு நாள் காலை, பாட்டி தனது கடையில் வாசலில் உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருந்தார். வாசனை முழு தெருவையும் சுற்றி வந்தது. அந்த வாசனைக்கே பக்கத்தில் உள்ள ஒரு டயர் வண்டியிலிருந்த ஒரு குட்டி காக்கா! பறந்து வந்து “பாட்டியிடம் பாட்டி பாட்டி எனக்கொரு வடை தர வேண்டும்”என்றது. பாட்டி சிரித்தபடியே, “ஓ.. பணம் கொடு, வடை கொடுக்கிறேன்!” என்றார். உடனே காக்கா தான் சேமித்த பணத்தில் இருந்து ஒரு 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தது. பாட்டி அதை வாங்கி ஏற்கனவே பழைய எண்ணெயில் சுட்ட வடையை கொடுத்தார். “வா… சூப்பரா இருக்குது!” என்று காக்கா வடை சாப்பிட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே.. “அய்யோ! வயிறு வலி! வாந்தி!” என்று காக்கா தலை சுற்றி கீழே விழுந்து பாதி மயக்கத்தில் இருந்தது. இதைக் கண்ட மற்ற காக்காக்கள் ஓடி வந்தன. “என்னாச்சு? என்னாச்சு?” குட்டி காக்கா பாட்டியிடம் வடை வாங்கிய விபரத்தை சொல்லி முடித்தது. “அந்த பாட்டி பழைய எண்ணையில் தான் மீண்டும் மீண்டும் வடை சுடறாங்க!” வடையில் ஒரே எண்ணைய் சிக்கு, தொண்டை எல்லாம் கரகரப்பு என்று பரிதாபமாக கூறியது? அனைத்து காக்காக்களும் ஒன்று சேர்ந்து கூடி பேசி காசு கொடுத்து வாங்கும் பொருளே இப்படி இருந்தால்? நாம் எப்படி சாப்பிடுவது? எனவே காகங்கள் ஒன்று சேர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். உடனே அதிகாரிகள் வந்து பாட்டி வடை சுட்ட கடாயில் உள்ள எண்ணையை பரிசோதனை செய்து பார்த்தனர். ஆம் “இது சுத்தமில்லாத எண்ணெய்! இது மிகவும் ஆபத்தானது!” என்றார்கள். பாட்டியை பார்த்து ஏற்கனவே நாங்கள் முதலில் எச்சரித்தோம்? ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த தவறை செய்ததால் பாட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாட்டி மிகவும் வருந்தினார். உடனே பாட்டி அபராதம் செலுத்தி ரசீது வாங்கினார். பாட்டி நான் இனிமேல் மிக சுத்தமான புதிய எண்ணெயில் மட்டுமே வடை சுடுவேன் என்று உறுதி ஏற்றார். அதன்படி எந்தவிதமான கெடுதல் ஏற்படுத்தாத வகையில் வடை சுட்டு விற்பனை செய்தாள். இப்போ, காக்காக்களும், அதன் பிள்ளைகளும், மிக ஆரோக்கியமாக பாட்டி சுட்ட வடையை சாப்பிடுகிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *