மலையாள இயக்குனர் ஆசிக் அபுவோடு உரையாடல்
மலையாளத்தில் பேட்டிக் கண்டவர் ஸ்ரீதேவி பி.அரவிந்த்
தமிழில்: கிருஷ்ணகோபால்
இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனும் பன்முகத் தன்மைக் கொண்ட மலையாள இளம் திரைக்கலைஞன் ஆஷிக் அபு .22 பிமேல் கோட்டயம், சால்ட் அன்ட் பெப்பர் மற்றும் வைரஸ் போன்ற படங்களை இயக்கியவர். தனது படங்களுக்கு பல விருதுகளைப் பெற்ற பரிசோதனை முயற்சி இயக்குனர்.சமீபத்தில் அவர் இயக்கி வெளி வந்த கவனம் பெற்றப் படம் ‘ரைபிள் கிளப் ‘ என்பது குறிப்பிடத்தக்கது.
‘சிந்த புஸ்தகவார்த்த’ எனும் மலையாள மாத இதழில் ஜீலை 2022 வெளி வந்த பேட்டி இது.
கேள்வி: ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்கள் தேவையான அளவு பார்க்க கிடைக்கிறன.ஆனால் திரையரங்கங்களில் சொந்த இருக்கையில் உட்கார்ந்து திரைப்படங்கள் காணும் போது தனிப்பட்ட அனுபவமும் கூர்மையான அவதானிப்பும் ஓ.டி.டி -யில் காணும் போது கிடைப்பதில்லை. இரண்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க ஆசிக் அபு..?
பதில்:என்னுடைய தனிப்பட்ட முறையிலான பார்வையில் ஓ.டி.டி தளம் என்பது தொலைக்காட்சி என்ற நவீன தொழில்நுட்பம் வந்தபோது உள்ளதைப் போன்று ஒரு பரந்த அளவிலான நிலைதான்.இணையதளம் வழியே கூடுதல் ஆட்களை வந்தடையும் ஒரு களமாகத்தான் நான் அதைப் புரிந்துக் கொள்கிறேன்.
ஆனால் ஒரு திரைப்படம் என்பது அதன் முழுமையான அர்த்தத்தில் மகிழ்ச்சியை உணர்வதும் பார்வையாளர்களின் முழு எண்ணமும் திரைப்படத்திலேயே இருந்து ஆழ்ந்து ரசிக்கும் அனுபவம் என்பது நிச்சயமாக திரையரங்கங்களில் மட்டுமே கிடைக்கும். அதனால் தனிப்பட்ட முறையில் திரையரங்கங்களுக்குத்தான் முன்னுரிமைக் கொடுக்கிறேன்.அதனால் ஓ.டி.டி தளத்தை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அர்த்தமல்ல. ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரித்தான குணங்கள் உண்டு என்று நான் நம்புகிறேன். வீட்டில் இருந்து சினிமா காண வேண்டும் என விரும்புவர்களுக்கு அது துணைச் செய்யும்.. ஆனால் ஒரு திரைப்பட இயக்குனர் என்ற நிலையில் நான் விரும்புவது என்னுடைய திரைப்படங்களை ரசிகர்கள் திரையரங்கங்களில் வந்துக் காண வேண்டும் என்பதே..
கேள்வி: ஆசிக் அபு என்ற இயக்குனர் உருவாக்கி வருகிறார் என்பதை எப்போது உணரத் துவங்கினீர்கள்..?
பதில்: கல்லூரியில் படிக்கின்ற காலம் முதல் சிறிய நாடகங்களும் ,திரைக்கதை எழுதுவதும் எல்லாம் செய்திருக்கிறேன்..அது மட்டுமல்லாது அரசியல் இயக்கத்தின் கலை சார்ந்த பிரிவில் என்னுடைய பங்களிப்பும் உண்டு .இவ்வாறான ஒரு இயக்கத்தின் வழியே என்னுள் ஒளிந்திருந்த இயக்குநன் வெளியே தெரிய ஆரம்பித்தான். இருப்பினும் நான் விருப்பப்பட்ட சினிமாத் துறையில் நுழைவதற்கான வாய்ப்பு இல்லாதிருந்தாலும் நான் நினைப்பதை மற்றவங்களுக்கு கடத்த முடியும் என கல்லூரியில் படிக்கும் படிக்கும் போதுதான் தோன்றியது.
கேள்வி: காலங்கள்தோறும் மலையாள சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.2000- க்கு பிறகு ‘புதிய தலைமுறை ‘சினிமா எனச் சொல்லிக் கொண்டு சினிமாவில் பெரிய மாற்றங்கள் நடந்திருப்பதை உணர்ந்துக் கொள்ள முடியும். நீங்களும் இதன் தொடர்ச்சிதானே..
அதனால் இன்னும் மலையாள சினிமா பல மாற்றங்கள் காண வேண்டும் என நினைக்கிறீர்களா…?
பதில்: காலங்கள் தோறும் மாற்றங்கள் நடந்து வருகிறது.இது மலையாள சினிமாவில் மட்டுமல்ல. உலகெங்கிலும் மாற்றங்கள் நடக்கிறது.2000 தில்தான் சினிமா டிஜிட்டல் மயமாகியதும் இணையதளத்தின் வரவும் ஒரு போல் நடந்தது.
தொழில் நுட்பம் நிறைந்த சினிமா எல்லா இடங்களுக்கும் சென்று சேர்ந்து பொது உடமையாகியது. காரணம் இது ஒரு ஒண்ணும் ராக்கெட் அறிவியல் இல்லை. எல்லோரும் கற்றுக் கொள்ளவும் அதைச் செய்ய முடிகிற ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.அந்த காலக்கட்ட சினிமாவை என்னப் பெயரிட்டு அழைத்தாலும் நாம் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.அதை பார்வையாளர்கள் தேவையான ஒன்றாகத் தான் பார்கிறார்கள்.
இது போல் மாற்றங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கும். மாற்றங்கள் ஒரு போதும் முடிவடைவதில்லை என்று தான்
தனிப்பட்டமுறையில் என்னுடைய புரிதலாக இருக்கிறது.
கேள்வி: சினிமா விமர்சனம் செய்யப்படும் போது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் கண்ணோட்டம் ஆராயப்படுகிற காலத்தில் நாம் இருக்கிறோம்.இது ஒரு பிலிம் மேக்கரின் சுதந்திரத்தை பாதிக்குமா…?
பதில்: உண்மைதான் காரணம் தகவல் தொழில் நுட்பக் கூறுகள் பெரிய அளவில் நம்மை ஆக்கிரமித்திருக்கும் காலமிது. அப்போது இயல்பாகவே எல்லோருடைய கருத்து வெளிப்படுத்தலும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளைக் குறித்து அவருடைய நிலைபாடு என்னவென்பதுக் குறித்த பதிவிடலும் பத்திரிகை ஊடகங்களை விடவும் சமூக ஊடகங்களின் பரவலாக்கம் பெற்றுவருகின்றன.
கேள்வி: வித்தியாசமான ரீதியில் பரிசோதனைமுயற்சி திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர் தாங்கள் உங்களுடைய ‘ட்ரென்ட் செட் ஆப் ஒர்க் ‘கை கொஞ்சம் விவரிக்கிறீர்களா..?
பதில்: வித்தியாசமான முறையில் செய்வதற்கு மனப்பூர்வமாக முயற்சி எடுக்கிறேன். யாரும் செய்யாத விஷயங்களை செய்வதற்கு சிரத்தை எடுக்கிறேன்.. வெவ்வேறு இடங்களை நோக்கி பயணப்படுகிறேன்; இதன் மூலம் எனக்கு பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள இயலும்; விவாதங்களை முன்னெடுத்துச் செய்ய இயலும்; இதன் வழியே புதிய கதாபாத்திரங்களைக் குறித்து சிந்திக்கவும் வேறு கோணத்தில் காட்சிப்படுத்தவும் முடியும்.. ஒரு திரைக்கலைஞனுக்கு சினிமாவை வளர்த்தெடுத்துச் செல்லும் முறையில் தனித்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது பிறரிடமிருந்து தன்னை தனித்துக் காட்டும்.நான் இயக்கும் சினிமாவுக்கு என்னத் தேவையோ அதை என்னுடைய தனித்துவம் நிறைந்த முறையில் கொண்டு வர முயற்சி எடுக்கிறேன். கூடுதலாகச் சொன்னால் என்னுடைய சினிமாவைக் குறித்து அதிகம் பேசுபவர்கள் என்னுடைய சினிமாவைக் காண்பவர்களே.. ஆனாலும் சிறிது காலம் போனப் பின்புதான் என்னுடைய தனித்துவ முறை என்ன என்பது தெரியவரும்.
திரைப்படம் என்பது ஒரு கூட்டுக்கலையென்றோ, ஒரு முழுமையான கலைவடிவம் என்றோ சொல்லும் அத்தனை சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கியது. .பல குழுக்கள் இணைந்துதான் ஒரு திரைப்படம் உருவாகிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.என்னுடைய குழுவிலும் என் நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு.இத்தகைய குழுக்களின் பங்களிப்பும் சேர்ந்ததுதான் எல்லா திரைப்படங்களும் உருவாகிறது இதுயெல்லாம் சேர்ந்துதான் ஒரு படத்தின் வெற்றியைக் கொடுக்கிறது.நான் அவர்களை வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லை.எல்லோரும் சுதந்திரமான மனிதர்கள்.அவர்கள் என்னுடைய நண்பர்கள்.
கேள்வி: வித்தியாசமான வடிவங்களில் பரிசோதனைச் செய்து வெற்றியடைந்த ஒருவர் நீங்கள் இருப்பினும் எந்த வடிவம் உங்களுக்கு ஏற்றதாக தோன்றுகிறது…?
பதில்: வித்தியாசமான வடிவங்களில் சினிமா செய்ய வேண்டுமென்பது எனக்கு விருப்பமுள்ள விஷயம்.எனக்கு ஏற்ற வடிவங்களில் செய்வதை விடவும் ஒரு உள் தூண்டுதல் வழியேதான் பயணித்து திரைப்படங்கள் செய்கிறேன்.எனக்கு பழக்கப்பட்ட வடிவங்களின் மீது நான் நம்பிக்கை வைப்பதில்லை..எனக்கு பரீட்ச்சயமான வடிவங்களைத் தாண்டிச் செல்வதுதான் எனக்கு கூடுதல் விருப்பம்…
கேள்வி: மதவாத கும்பல்கள் திரைப்படங்களுக்கெதிரே வாளெடுக்கும் முறை கேரளத்திலும் பரவிக் கொண்டடிருக்கிறதல்லவா…?சமூக ஊடகங்களில் மட்டுமே நடந்து வருகின்ற இந்தக் கூத்து மத்திய இந்தியாவில் நடப்பதைப் போன்று கேரளத்தின் தெருக்களில் வந்தடைய அதிகக் காலம் பிடிக்கும் என நினைக்கவில்லை.நமது திரைப்படத்துறையினர் சினிமா எடுக்கும் போது இந்த கும்பல்களுக்கும் பயப்பட வேண்டியதிருக்கிறதா…?
பதில்: நிச்சயமாக …மதவாத சக்திகள் எல்லோருமே பெரிய அளவில் உறுதியற்றக் ஒரு காலகட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.முக்கியமாக கோவிட் காலம் முழுதும் நாம் அனுபவித்த கொடும் நெருக்கடியிலிருந்து மீண்டப் பிறகு நாம் இது மாதிரியான மதவாதக் கும்பல்களின் பிடிக்குள் சிக்குண்டிக்கும் நிலமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.ஜனநாயகத்தை விரும்புகிற சமுதாயத்தில் மத சக்திகளின் எதிர்வினையை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் கடந்துச் செல்லப் பழகியிருக்கும் போது பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
மத்திய இந்தியாவில் அதுக் கொஞ்சம் கூடுதலாகவேக் காணப்படுகிறது.நமது பிரதேசத்திலும் இதுப் போன்ற மோசமான நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொண்டு சினிமாவுக்கு எதிரே பெரிய எதிர்ப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேரளத்தில் அவர்களின் எதிர்ப்பு செல்லுபடியாகவில்லை.முக்கியமாக அவர்களை ஒரு பொருட்டாக யாரும் கருதவில்லை.எதிர்ப்புகள் உருவானால் அதைச் சரியான முறையில் எதிர்க் கொண்டு முறியடிக்கும் அறிவார்ந்த சமூகம் இங்கு இருக்கிறது.அதை வளர்த்தெடுத்ததில் கலைஞர்களின் பங்கு என்பது அபரிதமானது.இதையெல்லாம் முறியடிக்கும் முயற்சிகள் நிகழ்ந்தாலும் இதெல்லாம் இம் மண்ணில் வெற்றியடையும் எனத் தோன்றவில்லை..
கேள்வி: மலையாளத்தில் முழுமையான பெண்ணிய சினிமா சாத்தியம்தானா..? நட்சத்திர அந்தஸ்தை முன்னிறும் திரைப்படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றியைக் கொடுக்கும் காலகட்டத்தில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர் கிடைப்பது நெருக்கடி அல்லவா…?
பதில்: நிச்சயமாக நெருக்கடிதான் ஆனால் மலையாளத்தில் பெண்ணிய சினிமாக்கள் சாத்தியம்தான்.ஆண் நட்சத்திர அந்தஸ்தை முன்னிறுத்தும் திரைப்படங்களைப் போலவே பெண்ணை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசிலும் மட்டுமல்லாமல் வேறு விதத்திலும் வெற்றியைக் கொடுத்திருக்கின்றன என்பதை நாம் இங்கு கண்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எண்ணிக்கையில் குறைவு என்பது தான் உண்மை. இனி வரும் காலகட்டங்களில் முக்கியமாக ஓ.டி.டி தளங்கள் போன்ற சாத்தியங்கள் இருப்பதால் திரைப்படங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் நிகழும். அப்போது அதிக தயாரிப்பு நிறுவனங்கள் இவ்விதமான விசயத்தில் படமெடுக்க முன்னே வருவார்கள் என எதிர்ப் பார்க்கிறேன். காரணம் காலகட்டத்தின் மாற்றங்களை அறிந்துக் கொண்டிருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இயல்பாகவே பெண்ணிய சினிமா நோக்கி வருவார்கள் எனப் புரிந்துக் கொள்கிறேன்.
கேள்வி: நமது சினிமா படப்பிடிப்பு அரங்குகளில் பெண்களுக்கு இணக்கமான சூழல் நிலவுகிறதா…?அதற்காக வேண்டி விவாதம் செய்த உங்களுடைய முன்னெடுப்பு எது வரைக்கும் போய் எட்டியது…?
பதில்: உண்மையில் நம்முடைய சினிமாப் படப்பிடிப்பு அரங்குகள் பெண்களுக்கு இணக்கமான சூழலில் இல்லை.அதற்கு படப்பிடிப்பு அரங்குகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஒரு காரணமாகும் .மற்றபடி மிகவும் குறைவான எண்ணிக்கையில் பெண்களே சினிமாவில் வேலைச் செய்கிறார்கள் என்பதும் ஆகும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.. பெண்களின் பாதுகாப்பை பொறுத்தமட்டில் பெண்களுக்கு இணக்கமான சூழல் இருக்கிறது என்கிற பாதுகாப்புணர்வு தோணவும்; ஏதாவது பிரச்சனை என்று உருவானால் அதை எதிர்த்து உறுதியாக குரலெழுப்பும் தைரியத்தைக் கொடுக்கும் படப்பிடிப்பரங்குகள் உருவாக வேண்டும் என்பதுதான்.
பெண்களுக்கான உள்கட்டமைப்பு இயக்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். குறிப்பாக பெரிய நடிகர்களுக்கு இயல்பாகவே கழிவறைகள் இருக்கும்.அதுபோன்ற நிலையிலுள்ள சௌகரியங்களை எல்லோருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு செய்துக் கொடுக்கும் நிலையில் படப்பிடிப்பு அரங்கங்களை வடிவமைக்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களில் பணிபுரிகின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமாவதை அனுசரித்து எல்லாருக்கும் எல்லா சௌகரியங்கள் என்ற நிலை வரும் என நினைக்கிறேன்.எங்களுடைய எல்லா படப்பிடிப்பு அரங்கங்களிலும் அதற்கான முன்னெடுப்பு காரியங்களைச் செய்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ‘Lost of bangalore’ என்ற விளம்பரப்படத்திற்கான தூண்டுதல் எதனால் ஏற்பட்டது ..? எவ்வாறு விளம்பர படத்திற்கு வந்துச் சேர்ந்தீர்கள்..? விளம்பரப்படங்கள் செய்வது உங்களுக்கு விருப்பமான ஒன்றுதானா…?
பதில்: ‘Lost of bangalore’ மாத்ரு பூமிக்காகச் செய்த குறும்படம்.’மிப்றி’ விளம்பரத்திற்காக ஆரம்பத்திலிருந்தே விளம்பரப்படம் செய்து வருகிறேன். மாத்ருபூமிக்காகவே 3,4 காம்பைன்களில் திரைப்படம் செய்ய முடிந்தது.அதில் ஒரு காம்பைனின் பகுதியாக என்னுடன் பயணிக்கும் ஒருவர் ‘மிப்றி’ விளம்பரத்திற்கான கிரேட்டிவ் இயக்குனராக இருக்கும் வேணு கோபாலன்.அவருடைய நண்பர் அவருடைய வாழ்க்கை அனுபவத்தைச் சொல்ல நாங்கள் விவாதம் செய்து உருவானதுதான். ‘Lost of bangalore’ .
நான் கல்லூரி படிக்கும் காலத்தில் விளம்பரப்படம் செய்வது என்ற சிறு முயற்சியும் இருந்தது.அப்போது நாங்கள் காம்பஸ் சினிமா ஒன்றும் செய்ததுண்டு..
விளம்பரப்படம் என்பது குறைந்த நேரத்தில் ஒரு கதைச் சொல்லும் முறையாகும்.அது வேகமாக நடக்கும் ஒரு விஷயமாகும் அதனால் எனக்கு விளம்பரப்படம் செய்வதில் விருப்பம் உண்டு…
கேள்வி: தொழில் நுட்பங்களை சுவீகரித்து அதன் வழியே அதிகமும் மாற்றங்களால் உருவானது சினிமா என்ற கலை வடிவமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.அறிவியல் திரைப்படத்தின் வளர்ச்சியை எவ்வாறு எல்லாம் மாற்றியமைத்திருக்கிறது …..?இன்று திரைப்பட தயாரிப்பு என்பது கூடுதலும் எளிதாக ஆகியிருக்கிறது அல்லவா….?
பதில்: 2000 முதல் பல பெயர்களில் நாம் அறியப்படும் புதிய தலைமுறை என பத்திரிகைகளும் மற்ற ஊடகங்களும் சொல்லிக் கொண்ட வேளையில் உண்மையில் விஞ்ஞான ரீதியான வளர்ச்சியைத்தான் அவ்வாறு சொல்லி வந்தார்கள்.
அறிவியலில் புதிய கண்டுப்பிடிப்புகள் வருவதும் அதன் வழியே நடந்த மாற்றங்கள் இணையதளம் மற்றும் புதிய சமூக ஊடகங்களின் காத்திரமான பங்களிப்பும் சேர்ந்தே திரைப்படங்கள் விவாதப் பொருளாக மாற்றப்பட்டதும்; காத்திரமான விசயங்களை தயாரிப்பு தரப்பினர் முன்னெடுத்து பெரிய மாற்றங்கள் உருவானதும் ஜனநாயகரீதியாக எல்லோரையும் சென்றடைந்தது என்பதும் உண்மை.சினிமாவில் கதைச் சொல்லல் முறையில் அறிவியல் கூடுதல் பங்களிப்புச் செய்திருக்கவில்லையென்றால் கதைச் சொல்லல் முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க முடியாது.தொடர்ந்து இன்னும் அதிகம் பல்வேறு முறைகளில் திரைப்படங்களை உருவாக்குவதற்கு இப்போது இருப்பதைக் காட்டிலும் விஞ்ஞான அறிவின் அத்தனை சாத்தியங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
கேள்வி: நீங்கள் மகேஷின்ட பிரதிகாரம் , ஆர்க்கறியாம் …தொடங்கி சிறந்த பல படங்களின் தயாரிப்பாளரும் கூட .. கோவிட்கால இக்கட்டான நேரத்தில் தகர்ந்துப் போய்கிடந்த திரைப்படத்துறையை அதிலிருந்து மீட்டெடுக்க எதையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது….?
பதில்: சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் அதிலும் கூடுதல் ஆட்களை தியேட்டருக்கு கொண்டு வர வேண்டிய விதத்திலுள்ள திரைப்படங்கள் தயாரித்தால் மட்டுமே இது நமக்கு சாத்தியமாகும் என யோசித்து முன்பு செய்ததை விடவும் அதிகம் முயற்சி எடுத்து வேலைகள் செய்தோம்..நம்மவர்களுக்கு சினிமா என்பது மிகவும் விருப்பமான ஒன்று ; அதனால் தான் அவர்கள் திரையரங்கங்களுக்கு வருவதற்குத் தயாராக இருந்தார்கள்.அதனால்தான் அவர்களை எரிச்சல்பட வைக்காத தரத்தில் அவர்கள் வரவேற்கும் வடிவத்தில் உள்ள திரைப்படங்களைக் கொண்டு வர வேண்டும் என மறுபடியும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்.அவ்வாறான திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டால் மீண்டும் பார்வையாளர்களை திரையரங்கத்திற்கு கொண்டுவர இயலும் என நம்புகிறேன்..
கேள்வி: ஒரு பார்வையாளர் என்ற நிலையில் ‘வைரஸ்’ திரைப்படத்தை இப்போது காணும் போதுக் கூட நெருக்கமாக உணர்கிறேன்..’நிபா’ க்கு பிறகு கோவிட் நெருக்கடிக் காலகட்டம் என்பது உலகத்தை இயங்கவிடாமல் செய்த போதுதான் உலகம் முழுதும் அந்தப்படத்தின் அவஸ்தையில் கடந்துச் சென்றது..அதனால்தான் என்னவோ இன்றும் அந்தச் சினிமாவைக் மீண்டும் காணும் போது உணர்வு பூர்வமாகத் தோன்றியது.அனுபவச் சாட்சிப் போல இருந்த அத்திரைப்படத்தை வெளி உலகிற்குத் தெரிய வைக்க வேண்டும் என எவ்விதத்தில் தோணியது…?
பதில்: நானும் எனது எழுத்தாளர்கள் குழுவும் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விஷயங்களை நெருக்கமாக நின்று அவதானித்துக் கொண்டிருக்கும் போது அப்போது இயல்பாகவே அந்த நேரத்தில் இதை ஒரு திரைப்படமாக எடுத்து மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டானது.உடனே நாங்கள் காலம் தாமதிக்காமல் அதன் தயாரிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குச் சென்றோம்.

அப்போதெல்லாம் கோவிட் நெருக்கடி வரும் என்று யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை.அந்த சினிமா அறிவியல் பார்வையில் மக்களை அணுக வைத்து விழிப்புணர்வை உருவாக்கிய தென்றால் மகிழ்ச்சியே.சைலஷா டீச்சர் ,என் முதல் சினிமா சந்திப்பில் ஆச்சரியப்பட்டு என்னோடுச் சொன்னது: ‘எல்லோரையும் அறிவியல் விழிப்புணர்வாக்கும் அத்தனைச் சாத்தியங்களையும் சினிமா என்னும் கலை வழியே கூட்டி அழகுள்ள சினிமாவாக தொடர்ந்து கொடுக்க முடியுமென
நான் விருப்பப்படுகிறேன் ‘என்றார் முதல் சினிமாவின் போது பேசியதை நினைத்து அதற்காக நான் முயற்சி எடுத்ததும் தொடர்ந்து பயணிப்பதும் மகிழ்ச்சியே…..
நன்றி
சிந்த புஸ்தகவார்த்த, ஜீலை 2022
Leave a Reply