SAVKIA-வின் 286-வது கருத்தாய்வுக் கூட்டதமானது, திரு. ஜாண் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மூலச்சல். டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.04.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், திரு.ஜெரின் ஆசான் உடல் உஷ்ணம், மேகநோய் இவற்றுக்கு பற்பம் செய்முறையை கூறினார்.
மரு .கமலக்கண்ணன் தைராய்டு குணமாக சூரணம், குழந்தையின்மைக்கு சூரணம், சிறுநீரகக்கல் குணமாக சூரணம், மூட்டுவலிகளுக்கு லகு தைலம் செய்முறைகளை தெளிவாக கூறினார்.
அடுத்ததாக திரு. ஜெகஜீவன் ஆசான் தூக்கமின்மைக்கு எளிய மருந்துக் குறிப்புகளை வழங்கினார்.
அடுத்ததாக திரு.அருள்செல்வன் அவர்கள் மூட்டுவலி, வாதம் இவற்றுக்கு கசாயம் செய்முறையை கூறினார்.
திரு.வடிவேல் ஆசான் கர்ம பயன் குறித்து விளக்கி பேசினார்.
அடுத்ததாக மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் அவர்கள் பயனுள்ள பல அரிய தகவல்களை பகிர்ந்ததோடு உடல் உஷ்ணம் மாற எளிய கசாயம் , தூக்கமின்மைக்கு மருந்து, வெண்புள்ளிக்கு தைலம், ஞாபகசக்திக்கு பிரம்மி நெய், PCOD-க்கு பூங்காவி செந்தூரம் செய்முறை, தைராய்டு பிரச்சனை குணமாக எளிய கசாயம், புற்றுநோய் வராமல் தடுக்க எளிய மருந்து செய்முறைகளை தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.ஜாண் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply