வேணும் சிக்கனம்

வேணும் சிக்கனம்

  • By Magazine
  • |

இரா.சிவானந்தம்

பிழைப்பிற்காக

வெளிநாடு சென்றவன்

நன்றாய் சம்பாதித்து

அனுப்பினான் குடும்பத்திற்கு

மனைவி மக்களும்

வந்த பணத்தில்

செல்வ செழிப்பாள்

வாழ்ந்து மகிழ்ந்தனர்

தேவையானவைகளைத் தவிர

தேவையற்றதையும் வாங்கினர்

சிக்கனம் என்பதை

மறந்து போயினர்.

நான்காண்டு கழித்து

விடுமுறையில் வந்தவனும்

அள்ளி வந்தான் நிறைய

ஆடம்பரப் பொருட்கள்

உறவும் சுற்றமும்

வியந்து நின்றன

நட்பும் – அறிந்தோரும்

சுற்றி வந்தனர்

மீண்டும் புறப்பட்டான்

வெளிநாட்டுக்கு ஆர்வமுடன்

அங்கு மூண்ட அந்நிய நாட்டுச்

சண்டையால் திகைத்து நின்றான்.

தாக்குதல்களால் பலரும்

வெளியேறத் தொடங்கினர்

உயிரைக் காக்க தானும்

ஊர் திரும்பினான்

வீடு வந்தவனின்

குடும்பம் திகைத்தது

இருந்து சாப்பிட்டதால்

இரண்டாண்டு கழிந்தது.

தேவையற்று வந்த பொருட்கள்

வீட்டை விட்டு வெளியேறின

சுற்றமும் – நட்பும்

விலகிச் சென்றது.

ஊர் விட்டு ஊர் போனான்

சாதாரண தொழிலாளியானான்

உள்ளபோது சேமிக்க தவறியதால் வந்த சங்கடமிது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *