– இரா.சிவானந்தம்
திருவள்ளுவரின் அற்புதப்படைப்பால்
வியந்து நிற்கிறது ஞாலம்
ஒன்றே முக்கால் வரிகளில் தான்
எத்தனையெத்தனை ஜாலம்
முப்பாலின் உன்னதத்தை
என்றும் மறக்காது காலம்
மதம் இனம் கடந்த
அற்புதப்படைப்பு
வள்ளுவரின் காலமும் – வரலாறும்
இன்னும் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதுவரை இதற்கீடான
ஒரு நீதிநூல் தோன்றவில்லை
இனியும் எம்மொழியிலும்
தோன்றப் போவதுமில்லை
அனைத்து மக்களாலும்
ஏற்கப்பட்ட நூல்
அனைத்து நாட்டாரும்
ரசிக்கும் நூல்
போற்றாத மனிதர் இல்லை
போற்றாதவர் மனிதரே இல்லை
ஞாலம் உள்ளளவும்
வள்ளுவம் பேசப்படும்
நமது தமிழ்மொழிக்கு கிடைத்த அறிவுக்களஞ்சியம் என்றே கொண்டாடுவோம்
Leave a Reply