சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.03.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில், திரு. இராஜன் ஆசான் பித்தப்பை கல் கரைய கரிசலாங்கண்ணி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறி, அதற்கான கசாயம் ஒன்றினையும் கூறினார்.

அடுத்ததாக, மரு. கமலக்கண்ணன் மலச்சிக்கலுக்கு மாத்திரை செய்யும் எளிய முறையையும், கருப்பை நோய்களுக்கு கசாயம், புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் எளிய மருந்துமுறைகளையும், ஆண்மைக்குறைவுக்கு சூரணம், மூலநோய்க்கு லேகியம் செய்முறையையும் கூறினார்.

அடுத்ததாக, திரு. கே. செல்வநாதன் ஆசான் கபம், இருமல், இளைப்பிருமல் மாற திப்பிலி சூரணம் செய்முறையை கூறினார்.

திரு. அருள்செல்வன் வாத நோய்களுக்கு மேல்பூச்சு தைலம் செய்முறையைக் கூறினார்.

திரு. சுரேஷ்பாபு ஆசான் இரத்த அணுக்கள் குறைவை சரிப்படுத்த எளிய மருந்துக்குறிப்பினை கூறினார்.

திரு. வடிவேல் ஆசான் சித்த மருந்துகள் சாப்பிட வேண்டிய முறைகள், உண்ணும் கால அளவு குறித்து தெளிவாகப் பேசினார்.

திரு. ஜெரின் ஆசான் தோல்நோய்களை குணப்படுத்தும் சர்வாங்க தைலம் செய்முறையை கூறினார்.

அடுத்ததாக, திரு. ஜெபமணி ஆசான் காயம், சயம், இளைப்பு, இரத்தபித்தம், குவளை, மாந்தை, விப்புருதி, நெஞ்சு உளைச்சல், கண்நோய்கள் இவற்றுக்கு வல்லாதி லேகியம் செய்முறையைக் கூறினார்.

அடுத்ததாக, மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் மனம், ஆன்மா குறித்து தெளிவாகப் பேசியதோடு, வர்ம மருத்துவம் குறித்தும் தெளிவாக உரையாற்றினார். கூட்டத்தின் இறுதியில், திரு. கே. செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றிகூறி கூட்டத்தினை நிறைவுசெய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *