– ஸ்ரீதர், கோவை
பெ: ஆறறிலோடும் நீரைப்போல
துள்ளியாடி வாரேனே
அமிழ்தம் பொங்கும்
ஆழிக்கரையோரம் வாரேனே
ஆ: பாவை அவளைக் காண
பறக்கும் படகேறி வாரேனே
கரையில் நிறையும் ஆசை
நுரையோடு வாரேனே
பெ: என் தினமலரின் பூக்களானவனே
ஆ: என் பூக்களின் இதழ்களானவளே
பெ: என் கருநீல வானம் மழையாய்
மண்ணில் விழ எழுகிறதே
ஆ மணலை நனைக்கும் மழையின்
ஈரம் காதலால் என்னை நனைக்குதே
பெ: காற்றின் அலையைப் போல
உணரும் உயிருக்குப் புரிதலானேனே
அலையை உணரும் கரையைப் போல
மனதை உணரும் உயிரானேனே
பெ: கரையின் இறுதிவரை
அலைகள் இறப்பதில்லை
நம் வாழ்வின் கடைசி வரை
கைகோர்த்து வாழ்வோம் வா
ஆ: உலகம் அழிந்தாலும்
உதிக்கும் சூரியன் அழிவதில்லை
வாழ்வின் எல்லை வரை
நெஞ்சம் சேர்ந்து வாழ்வோம் வா
Leave a Reply