நுரையீரல்   பிரச்சனைகள்

நுரையீரல்   பிரச்சனைகள்

  • By Magazine
  • |

– கஸ்தூரிபா ஜாண்ஸன்

ஆஸ்துமா, சைனஸ், அடுக்குத்தும்மல், விக்கல், இருமல் போன்றவற்றை தீர்க்கும் கசாயம்

கிச்சிலிக்கிழங்கு 2 கிராம், லவங்கம் 2 கிராம், அதிகமதுரம் 2 கிராம், திப்பிலி 2கிராம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை, இரவு உணவுக்கு முன் அருந்தி வரலாம். சுமார் ஆறு மாதம் அருந்தி வர தீராத ஆஸ்துமா, வறட்டு இருமல் தீரும்.

சைனஸ், ஆஸ்துமா தீர்க்கும் கொள்ளு கசாயம்

சுக்கு, கொள்ளு, ஆடாதோடை, கண்டங்கத்தரி அல்லது தூதுவளை ஒவ்வொன்றும் ஒரு கை எடுத்து நன்கு வேகவைத்து வடிகட்டி காலை, இரவு உணவுக்கு முன் அருந்தி வரவும். தூக்கம் கெடுதல், மாரடைப்பு போன்ற காரணங்களால் நுரையீரல் நோய்கள் உண்டாகும்.

ஆஸ்துமா தாக்கம் குறைத்து கட்டுக்குள் வைக்க

சீரகம் 2 கிராம், சுக்கு 2 கிராம், குறுந்தொட்டி வேர்ச்சூரணம் 2 கிராம் ஒவ்வொன்றாகப் பொடித்து நீரில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து காலை, இரவு அருந்தி வரவும். பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சேர்க்கக் கூடாது.

சுவாச உறுப்புகள் சுருங்குவதாலும், அவற்றில் உள்ள ரசாயனக் கழிவுகளில் உள்ளக் காற்று வெளியேறாமல் இருப்பதாலும், குளிர்ச்சி மிகுந்த உணவுகள் உண்பதும் ஆஸ்துமா வர அதிக காரணம் ஆகும்.

இதைத் தடுக்க 200 மில்லி நீர் சூடாக்கி அதிமதுர  துண்டுகள், 10 மிளகு, 1/4 ஸ்பூன் சுக்குபொடி, சித்தரத்தை பொடி சேர்த்து வடிகட்டி கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும். காலை, மாலை 30 மில்லி தொடர்ந்து 46 நாட்கள் குடிக்கவும்.

சுவாசக்குழாயில் தொற்றுக் கிருமிகளால் பாதிப்பு உண்டாகும். ஆகவே குளிர்ந்த காய்கறிகள் உண்ணக் கூடாது.

ஆஸ்துமா- நுரையீரல் பாதிப்பு

300 மில்லி நீரில் சில தூதுவளை இலைகள் 3 கிராம், கொன்றை மரப்பட்டை 3 கிராம் காய்த்து  கசாயம் செய்து காலை, மதியம், இரவு மூன்று நேரமும் அருந்தி வரவும். இதனால் தீர்க்க முடியாத இந்நோய் கட்டுக்குள் வரும். இந்த மூலிகை தேநீரை அருந்தி வர நுரையீரல் பாதிப்புகள் சரியாகும்.

நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும் இரைப்புக்கசாயம்

2 கிராம் மிளகு, 2 கிராம் கிராம்பு, 2 கிராம் சுத்தி செய்யப்பட்ட எருக்கின் வேர். இவற்றை 300 மில்லி நீரில்போட்டு கொதிக்க வைத்து 100 மில்லி ஆக்கி காலை உணவுக்கு முன் 50 மில்லி, இரவு உணவுக்கு முன் அருந்தி வரவும். இந்த இயற்கை மருந்தினை பயன்படுத்தி ஆஸ்துமா நோயாளிகள் நிவாரணம் பெறலாம். தமிழ் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று எருக்கின் வேர் சுத்தம் செய்வது பற்றி அறிந்து கொள்ளலாம்.

பல வருடகால ஆஸ்துமா

பிறந்தது முதல் ஏற்படும் நுரையீரல் நோய்களை குணமாக்க குறுந்தொட்டி சூரணம் 2 கிராம், சீரகம் 2 கிராம், அதிமதுரம் பொடி 2 கிராம், கண்டங்கத்தரி 2 கிராம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து 100 கிராம் ஆனதும் காலை மாலை உணவுக்கு முன் அருந்தி வரவும்.

ஆஸ்துமா உள்ளவர்கள் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான முள்ளங்கி, சௌ சௌ, பீர்க்கங்கய், புடலங்காய் இவற்றை சீரகம், மிளகு, பூண்டு, காயம், மிளகு, வெந்தயம் சேர்த்து சமைக்கலாம். மோரில் மஞ்சள் தூள் சேர்க்கவும். பால் பொருள்கள் வேண்டாம். சிவனார் அமிர்தம், தாளிசபத்திரி போன்ற மருந்துகள் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *