– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
புதிய பாஸ்போர்ட் சட்டம்
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி அந்நாடடில் குடியேறியவர்களுக்கு புதிய அதிபர் டிரம்ப் எவ்வாறு கடிவாளம் போட்டுள்ளாரோ அதே போல் நம் நாட்டிலும் நமது நாட்டிற்குள் முறையான ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு கடிவாளம் போட்டு அவர்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்தந்த நாட்டிற்கு அவர்களை திருப்பி அனுப்பும் சட்டம் வந்துள்ளது. வங்க தேசிகள், பாகிஸ்தானியர், பர்மாகாரர்கள் என நிறைய அந்நிய நாட்டினர் சட்டத்திற்கு புறம்பாக நம் நாட்டினர் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கடிவாளம் போடும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வங்காள தேசிகள் மட்டும் சுமார் மூன்று கோடிபேர் நம்நாட்டில் சட்டத்துக்குப் புறம்பாக குடி புகுந்திருக்கலாம் என ஒரு சர்வே சொல்லுகிறது. தற்போது கூட தமிழகத்திலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் நிறைய வங்காள தேசியினர் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் அதிகமாக வங்காள தேசத்தினர் புகுந்துள்ளனர். அவர்கள் எல்லாம் விரைவில் கண்டறியப்பட்டு வங்காள தேசத்துக்கு அனுப்பப்படுவர். இதே நிலைமை தான் அஸ்ஸாமிலும். இது மத்திய அரசின் சட்டம் என்பதார் மேற்குவங்க அரசோ அல்லது அஸ்ஸாம் அரசோ அவர்கள் நினைத்தபடி சட்டத்துக்குப் புறம்பாக வந்த வங்க தேசிகளையோ, பர்மீஸ்களையோ காப்பாற்ற முடியாது. ரோகிங்கியாக்கள் இருந்தாலும் கண்டறியப்படுவர்.
CAA (Citizen Amentment) அதாவது இந்திய குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தபோது ஏராளம் போராட்டங்கள் நடந்து அது தற்போது கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிகி வே இனிமேல் தேவை இல்லை. புதிய பாஸ்போர்ட் சட்டம் படி இந்தியாவில் திருட்டுத்தனமாக குடியேறியவர்கள் இனிமேல் குடியுரிமை கேட்க முடியாது. இவர்களுக்காக இனிமேல் யாரும் போராட முடியாது. இந்த சிகிகி -வை செயல்படுத்தாமலேயே பாஸ்போர்ட் சட்டம் வெளிநாட்டினரை அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைத்து விடும் அல்லது அவர்களை ஜெயிலில் அடைக்கும். இந்த புதிய சட்டம் வருகையால் ஏற்கனவே இது சம்மந்தமாக நிலுவையில் இருக்கும் 1. Passport entry into india Act- 1920 2. Foreigners Act 1946 3. Registration of foreigners Act- 1939 ஆகிய மூன்று சட்டங்களும் கால அவதியாகிறது.
Leave a Reply