அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளி போடுகிறாய்!

அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளி போடுகிறாய்!

  • By Magazine
  • |

– ஓஷோ

காத்துக் கொண்டிருக்காதே. எதையும் தள்ளிப் போடாதே. நாளைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விடாதே. நாளை என்றொரு நாள் வருவதே இல்லை. நாளை என்றொரு நாள் இருந்ததே இல்லை. இருக்கவும் போவதில்லை. மனதின் ஒரு காட்சி தான் அது. எப்போதும் இன்றுதான் இருப்பது. இருப்பது எப்போதும் இப்போது மட்டுமே இருக்கிறது. இந்த கணம் மட்டுமே இருப்பது.

ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை இங்கே இப்போது செய்துவிடு. ஒத்திப் போடதே. இவ்வளவு சிறிய விஷயம் தானே! நாளை கவனித்துக் கொள்ளலாம் என்றிருக்காதே. எதுவும் சிறிய விஷயமல்ல. சுதாரித்து இருக்கவில்லையென்றால் நாளை என்ற ஒரு நாள் வரும்போது அது பிரமாண்டமானதாகிப் போகும். எதுவும் சிறியதல்ல. அதை கவனிப்பது உனக்கு நாளைக்கு சாத்தியமில்லாமல் போய்விடலாம்.

எந்தப் பிரச்சனையும் அரையும் குறையுமாக விட்டு விடாதே. அதனால் தான் உனக்குச் சுமை சேர்ந்து விடுகிறது. கணத்துக்குக் கணம் நிறைவாகிப் போவதாக வாழ்க்கை இருக்கட்டும். என்ன செய்ய வேண்டியிருந்தாலும் அதை இப்போதே செய்துவிடு. என்ன சொல்ல வேண்டியிருந்தாலும் அதை இப்போதே செய்துவிடு. என்னவாக இருக்க வேண்டுமாயிருந்தாலும் இப்போதே இருந்துவிடு. நாளைக்கு என்று சொல்லவே சொல்லாதே. நாளை என்ற நாள் முட்டாள்களின் களம். ஒத்திப் போட்டு போட்டுத்தான் முட்டாள்தனம் போய் கொண்டே இருக்கிறது. இந்தக் கணமே எதையும் முடித்து வைத்து விட்டால் எப்போதும் அடுத்த கணத்தை புத்துணர்ச்சியோடு எதிர் கொள்ளலாம்.

அப்படிப்பட்டவருக்கு மரணம் வருகிறது என்றால் அதற்குத் தயாராக இருப்பார். அதை மகிழ்ச்சியோடு வரவேற்பார். ஏனென்றால் அவர் எப்போதும் முழுமையாக இருக்கிறார். மரணம் உனக்கு வருகிறது என்றால் பெரிய சிக்கல் தான். எத்தனை காரியங்களை செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்கிறாய். நீதான் இதையும் அதையும் செய்ய வேண்டும் என்றிருக்காய். ஆனால் எதையும் செய்து முடிக்கவில்லையே!.

பார்க்கப் போனால் பயனற்ற காரியங்களைத் தான் செய்து முடித்திருக்கிறாய். பயனுள்ள காரியங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருக்கிறாய். கோபத்தை நாளைக்கு ஒத்தி போட்டால் அது நல்லது தான். ஆனால் கோபத்தை நாளைக்கு என்று தள்ளிப் போடுவதில்லை. கோபத்தை உடனே கண்டித்து விடுகிறாய். அன்பை நாளைக்கு என்று ஒத்திப்போட்டு விடுகிறாய். பேராசை அப்போதே நிறைவேற வேண்டும் என்கிறாய். பிறரோடு எதையாவது பங்கிட்டுக் கொள்ள வேண்டுமா? அதை நாளைக்கு என்று ஒத்திப்போடுகிறாய். வன்முறையை இப்போதே அரங்கேற்றி வைக்கிறாய். கருணையைத் தள்ளிப் போடுகிறாய். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்கிறாய். எல்லா முட்டாள்தனத்தையும் அவ்வப்போது செய்துவிடுகிறாய். நாளைக்கு என்று காத்திருப்பத்தில்லை. அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளிப் போடுகிறாய்.

துயரத்தை தள்ளி போடுவதில்லை. ஆனந்தத்தைத் தள்ளி போடுகிறாய். எனவே மரணம் வரும்போது துயரமான வாழ்வையே வாழ்ந்தவனாகிப் போகிறாய். ஆனந்தம், இன்பத்தைத் தள்ளிப் போட்டு வைத்திருக்கிறாய். மரணம் வரும்போது தவிக்கிறாள், அழுகிறாய், அரற்றுகிறாய்.

இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும் என்கிறாய். நாள் இன்னும் கொஞ்சம் வாழ வேண்டியிருக்கிறது என்கிறது உண்மையான வாழ்வை நாள் இன்னும் வாழவில்ல என்கிறாய். எதையும் முடித்து விட்டால் நிறைய சக்தி வெளிப்படுகிறது. இதை உனக்குள்ளேயே கவனித்திருக்கலாமே! எதையாவது செய்து முடிக்காவிட்டால் அது உன்னுடைய தலையில் தங்கிப் போகிறது. குட்டிக் கொண்டே இருக்கிறது. அதை செய்து முடிக்கும் வரையிலும் உன்னைச் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. ஒன்னை பேய் போலப் பிடித்தாட்டுகிறது . சின்ன விஷயமாக இருக்கலாம் என்றாலும் உன்னைப் பிடித்து ஆட்டி வைக்கிறது. அதை முடித்துவிடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *