– கஸ்தூரிபா ஜாண்ஸன்
நமக்கு நன்மை தரும் மூலிகைகளுள் ஒன்று நன்னாரி. தாவரயியலில் கேமிடெஸ்மஸ் இன்டிகஸ் (Hemidesmus indicus) என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை Indian Sarsaparilla (இந்தியன் சர்சாராபாரில்லா என்பதாகும். நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்து பழமொழி
நன்னாரி தெற்கு ஆசியா முழுதும் காணப்படும் ஒரு கொடியினம். தரம் எங்கும் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேர்கள் பயன்படுகிறது.
தாவரத்தின் அமைப்பு
எதிரெதிரில் அமைந்த நீண்ட இடைவெளிகளையுடைய கம்பி போன்ற இடைகளையுடைய ஒரு கொடியினம். இதன் இலைகள் கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இதன் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உட்புறம் கத்தரிப்பூ நிறத்தில் செம்மை கலந்த ஊதா நிறத்திலும் இருக்கும். இது ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பச்சை நிற இலைகளில் வெண்ணிற வரிகள் காணப்படும்.
நன்னாரியின் வேறுபெயர்கள்
அங்காரி மூலி, நறுநெட்டி, நறுக்கு மூலி, பரற்கொடி, பாதாள மூலி, வாசனைக் கொடி, சாரியம், சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்ற வேறுபெயர்கள் உண்டு.
இத்தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் பாற்கொடி என்றும் வாசனை கொடுப்பதால் சுகந்தி என்றும், பூமிக்குள் வளரும் இதன் வேர் தொகுப்பால் பாதாள மூலி என்ற பெயரும் இதற்கு அமைந்தது. இதில் நாட்டு நன்னாரி மற்றும் சீமை நன்னாரி, மலை நன்னாரி என்ற வகைகளும் உள்ளன.
நன்னாரிவேர் குடிநீர்- நன்னாரி
வேரினை குடிநீர் செய்து அருந்த உடலுக்கு புத்துணர்வு தரும். நாட்டுச் சர்க்கரையை பாகுபோல் காய்த்து நன்னாரி வேர்ப் பொடி போட்டு எலுமிச்சம் பழம் சேர்த்து ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தி வர உடலில் குருதி சுத்தம் ஆகும். சூட்டுக் கொப்புளங்கள் தீரும். நன்னாரி வேர், இலை, பழம் அனைத்தும் அதிக நன்மைகள் தரும்.
இதனை ஆயுர்வேத மருத்துவத்துறையில் அனந்த் மூலா என்பர். நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையை கூட்டுவற்கும், வியர்வையைத் சுத்தப்படுத்துவதற்கு உதவுகிறது. பல்வித நோய்களுக்கும் மருந்தாகும். உடலுக்கு வலிமை தரும். காய்ச்சல், பசியின்மை, உடல் மெலிவு, நாட்பட்ட மூட்டுவலி, தோல் வியாதிகள், மலச்சிக்கல் மற்றும் யானைக்கால், பால்வினை நோயினால் தோன்றும் புண்களுக்கு நல்ல மருந்து.
நன்னாரி வேர் + ஆவாரம் பூ + ஆலம்பட்டை இடித்து கசாயம் செய்து தினம் காலை, மாலை குடித்து வந்தால் முகத்தில் காணும் கறுப்பு மாறும்.
நன்னாரி சர்பத் பற்றி அறியாதவர்கள் இல்லை. இது உடல் உஷ்ணம் குறைக்கவும், வெப்பத்தை வெல்லவும் ஒருசிறந்த பானம். இதன் வேர், இலை, பழம் என அனைத்தும் நன்மை நிறைந்தது. தலைவலி முதல் பால்வினை நோய்கள் வரை தீர்க்கும். இதன் மணம் வேர்களுக்கு உண்டு.
கோடைக்காலத்தில் வெப்பத்தை வெல்ல மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்று. இந்தியாவின் அனைத்து பானங்களிலும் காணப்படும் மூலிகைத் தாவரம் நன்னாரி ஆகும்.
இந்த வேரின் மேற்புறம் கருமை நிறமாகவும் உள்ளே வெண்ணிறமாகவும் நல்ல மணமுடையதாகவும் வாயிலிட்டு சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. குருதியை தூய்மைபடுத்துகிறது. சிபிலிஸ் (Syphilis) மூட்டு வலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படுகிறது. உடம்பை உரமாக்கி ஒற்றை தலைவலியை தீர்க்கும். வாதநோய், பித்தம், மேக நோய்க்கு நல்ல மருந்து.
பல்வேறு பால்வினை நோய்கள் நீக்கும் நன்னாரி வேர், கல்லீரல் சுரக்கிறது. பற்கள், ஈறுகளை பலமடைய செய்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மையுடையது. நன்னாரி ஊறிய நீர் வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
கடுமையான கோடைக்கு நன்னாரி ஜீஸ் அருந்துவது நல்லது.
நன்னாரி வேர் 5 கிராமுடன் 200 மில்லி பாலில் அருந்தி வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, வறட்டு இருமல் தீரும். நீண்ட நாட்கள் இதனைச் சாப்பிட்டு வர மிகுந்த நன்மை தரும்.
200 மில்லி நீரில் இதன் பச்சை வேரை 20 கிராம் ஊற வைத்து வடிகட்டி, 100 மில்லி வீதம் காலை மாலை அருந்தி வர நீரிழிவு, கிரந்தி, சொறி , சிரங்கு, வெட்டைச் சூடு ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
இவ்வாறு நன்னாரி பற்றி பல செய்திகளை நாம் அறிந்து கொண்டோம். எனவே புல் போன்ற தாவரம் ஆனாலும் பட்டுப் போகாமல் அவற்றை அழியாமல் பாதுகாப்பது நமது கடமை.
Leave a Reply