பெண்ணற்ற வாழ்க்கையும்
கண்ணற்ற முகமும் ஒன்று
பெண்களைப் பேணுவோம்
கண்கள் தெளிவாகும்
கசடர்கள் எழுதி வைத்த
பெண்ணடிமை வார்த்தைகளை
தீயிட்டு கொழுத்திடுவோம்
ஆக்கிப்படைத்து
நமை ஆளுகின்ற
இயற்கையும்
பெண்ணாகும்…
போற்றி வளர்த்து
நமை பூத்துக்குலுங்க வைக்கும்
நீரும் பெண்ணாகும்
காற்றாய் நாம் வாழ
கணக்கறிந்துள்ளே
ஊற்றி வெளியேறும்
உட்காற்றும் பெண்ணாகும்
ஆற்றி உடலுள்ளே…
ஆற்றலாய் நிற்பவளும்
பெண்ணாகும்…
நுட்ப அறிவாலே
நூறாண்டு சென்றாலும்
மாறாத நுண்ணிமையும்
பெண்ணாகும்…
ஆண் பெண் என
இருவரையும் தான் சுமக்கும்
எண்ணாயிரம் தனிநரம்பு
பெற்றவளும் பெண்ணாகும்
வலிமையினைத் தானடக்கி
வாழ்பவளும் பெண்ணாகும்
அவளைக் காலடியில்
அடக்க நினைக்காதீர்…
ஆணாதிக்க சமுதாயம்
ஆக்கி வைத்த மதநூல்கள்
அத்தனையும் பொய்யாகும்
அறிவீர் மானிடரே!
பெண்கள் அறிவதனை
பேணிக்காத்திடுவீர்
பேதைமை நமக்கு
வாராது உணர்ந்திடுவீர்!
முல்லைத் தமிழ்
“கவிதைக்குமுறல்கள்”
Leave a Reply