புண்பட்ட நெஞ்சம்
தேறுதல் பெற்றது
மழலை பேச்சால்
காத்திருப்பதும் ஏமாறுவதும்
சகஜந்தான்
காதல் பாதையில்
உழைப்பும் நம்பிக்கையும்
இருந்தால் புறமுதுகு காட்டும்
தோல்வி
எத்தனை தலைமுறைக்கு
தாக்கம் தரப்போகிறதோ
மதுவின் ஆட்டம்?
படிப்பிற்கும் அறிவிற்கும்
சம்பந்தம் இல்லாமல் அமைந்து விடுகிறது
பலருக்கு வேலை
எத்தனை கொலைகள் உறவுகளுக்குள்
எங்கே போனது
மனித நேயம்
எல்லோருக்கும் கிடைக்கட்டும் உணவு
அதன்பின் பேசுவோம்
ஜனநாயகத்தைப் பற்றி
கடும்பசி
பார்ப்பதில்லை
உணவின் சுவையை
கட்சி மாநாடு
நல்ல கூட்டம்
பிரியாணி வழங்குமிடத்தில்
அலங்காரமாய் இரண்டு மணிநேரம்
தொடர்ந்து பேசினார்
தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல்
– இரா.சிவானந்தம்
Leave a Reply