சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர் பி. விஜயகுமார்

Death Warrant or black warrant

இறப்பு பிடிகட்டளை அல்லது கருப்பு பிடிகட்டளை

கொலை வழக்குகளில் தண்டனை வழங்குபவர்களுக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கப்படுகிறது. முதல் கட்டம் ஆயுள் தண்டனை. இங்கு ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு குற்றவாளி 14 வருடம் முடிந்ததும் வெளிவந்து விடுவார். அடுத்தது சாகும் வரை ஜெயிலில் இருக்க வேண்டுமென்ற தண்டனை. இதில் குற்றவாளி சாகும் வரை ஜெயிலிலே இருக்க வேண்டுமென்றும் ஜெயிலில் இருந்தே இயற்கையான இறப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

அடுத்தது மரண தண்டனை. மேற்படி தண்டனைகள் குற்றத்தின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்படுகிறது. 3,4 பேர்களைக் கொல்லுவது, பெண்களை கற்பழித்து கொலை பண்ணுவதெல்லாம் கொடூரமான கொலைகள். இதற்கெல்லாம் மரண தண்டனை வழங்கப்படுகிறது. வாய்த் தகராறால் ஏற்படும் கொலைகள், சொத்து தகராறால் ஏற்படும் கொலைகளுக்கெல்லாம் 14 வருடகால வரையரைக்குள்ள ஆயுள் தண்டனைதான் பொதுவாக வழங்கப்படுகிறது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் (pocso Act) பாலியல் சீண்டலுக்கு ஆளான குழந்தை இறக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் உட்செலுத்துதல் (Penetration) இருந்தாலே போதும் அந்த ஆண்களுக்கு சாகும் வரை ஜெயில் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ வழங்கலாம் என poscso சட்டம் சொல்லுகிறது. poscso சட்டம் மிகவும் கடுமையானது. இது பற்றிய விழிப்புணர்வுகள் மக்களிடையே அதிகம் இல்லை. தினம்தோறும் நாட்டில்  poscso  குற்றங்கள் பற்றிய செய்திகள் நாளிதள்களில் வந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்கிறோம்.

இறப்பு அல்லது கருப்பு பிடிகட்டளை என்பது ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் தூக்குதண்டனை விதிக்கும் சமயத்தில் உடனே இந்த பிடிக்கட்டளையையும் பிறப்பித்து விடுவார்கள். அதாவது குற்றவாளியை தாமதப்படுத்தாமல் உடனே தூக்கிலிடப்பட வேண்டும் என்ற வாரண்டை பிறப்பிப்பது தான் இறப்பு பிடிகட்டளை (Death Warrant) தூக்குதண்டனை குற்றவாளியின் மேல் முறையீட்டு மனுவும் உடனே பரிசீலிக்கப்பட்டு விடும். உயர் நீதிமன்றத்திலும் தூக்கு உறுதியாகும் நிலையில் அவர்களும் இந்த Death Warrant – ஐ பிறப்பித்து விடுவார்கள். பிறகு குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார். அங்கும் வழக்கு விசாரணை விரைவில் வந்து விடும். அங்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால் திரும்பவும்  Death warrant அல்லது Black warrant பிறப்பிக்கப்பட்டுவிடும். ஆனால் வழக்கு உச்சநீதிமன்றம் சென்றிருக்கையில் கீழமை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் பிறப்பித்த Death warrant -ஐ ரத்து பண்ணுவதற்குரிய மனுவை அந்தந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு குற்றவாளிக்கு உரிமை உண்டு. உச்ச நீதிமன்றத்தின் Death warrant -ஐ நிறுத்தி வைக்க வேண்டுமென்றால் நாட்டின் ஜனாதிபதியால் மட்டுமே முடியுமேத் தவிர வேறு எவராலும் நிறுத்தி வைக்க முடியாது. இதற்கு குற்றவாளியின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *