கறுத்த சண்டை

கறுத்த சண்டை

  • By Magazine
  • |

– கிருஷ்ணகோபால்

 “இன்னாப் பாரு உனக்கு வெளிவுலகம் தெரியாது உனக்கு  என்னமாதிரி வெளிப்பழக்கம் இருந்திருந்தா  நல்லது கெட்டது  என்னான்னுத் தெரியும்…”

அவன் வாசல் பக்கம் நின்றேப் பதில் சொன்னான். “எனக்கு வெளியுலகம் தெரியாதுங்கிறது உண்மதான். வெளியுலகம் தெரிஞ்சி ஒரு வேலையும் இருந்திச்சுனா கல்யாணம் கெட்டிட்ட ஒரு மாசத்திலேயே நீயும் வேண்டாம் உறவும் வேண்டாம்ணு போயிருப்பேன்.. எங்க அம்மா நோய்பிடிச்சவங்க மிளகு அரைக்க முடியாதுனு படிப்ப பாதியில அவள் சிவப்பு நிறத்தில் கட்டியிருந்த பூப்போட்ட புடவையை விலக்கி வெள்ளை நிறப் பாவாடைத் தெரிய தொடையைக் காட்டிச் செல்வாள்.

“இந்த தொடையிலத் தெரியுற வெளுப்பு என் முகத்துல மட்டும்  இருந்துச்சினா நான் உன்னை மாதிரி புறம்போக்குக்கு வாக்கப்பட்டிருப்பேனா. ராஜா மாதிரி கவர்மென்ட் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன்” எனச் சொல்லி முடித்து விட்டு மறுபடியும் குறுங்கட்டியில் உட்கார்ந்துக் கொண்டு  தோசைக்கு ஊறப் போட்டிருந்த உளுந்தை  அலசிக் கொண்டிருந்தாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த கணவன் சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டுச் சொன்னான். “கறுத்த தொலி எல்லாத்தையும் காடிப்பானைக்குள்ளப் போட்டிராம அதுல கொஞ்சத்த எடுத்து போட்டு ஆட்டு..”

“உனக்கு கிறுக்கு புடிச்சிருக்கா கறுத்த தொலிய யாராவது  தோசைக்கு போட்டு ஆட்டுவாவளா.

தோசை, இட்லி கறுப்புக் கலரா வரும்.. பிள்ளைங்க சாப்பிட மாட்டாங்க கிறுக்கா.. உன் கிறுக்குத்தனத்த உங்க அம்மாகிட்ட கொண்டு காணி…”

“ஒரு நாளு தொலியப் போட்டு ஆட்டி தோசைச் சுட்டுக் குடுத்துப் பாரு நல்லாயில்லனா என்ன குத்தம் சொல்லு  நல்லாயிருக்கும். உடம்புக்கு நல்லது. முதுகு வலிக்கு நல்லதுனு பேப்பர்ல படிச்சிருக்கேன்..”

“ ஓ  ! மாப்பிள காலையில காலையில டீ குடிக்க போறேன்னு சொல்லிட்டு பேப்பர்  படிக்கிறதுக்கு கிளம்பிட்டீரா…இதெல்லாம் என்னைக்கிருந்து …இந்தா பாரு நீ சொல்றது மாதிரி பண்ணினா பிள்ளகளுக்கு பிடிக்காது சொன்னாக் கேளு காலையிலேயே என் உயிர எடுக்காத…..

 பிள்ளைங்க சாப்பிடலேன்னா எல்லாத்தையும் உன் தலையில தான் தட்டுவேன் பாத்துக்கோ…” “ஒருநாளு பண்ணிப்பாரு கருப்புனாலே என்ன மோசமா..”

“நீதான் அப்டி சொல்லிய, என்னயப் பாக்க வந்தவனுவ எல்லாவனுவளும் என்னயப் பாத்துட்டு கறுப்பு  பிடிக்கலைன்னுச் சொல்லிட்டு வெள்ள தொலிய பாத்துலப் போனானுவ..”

“நீ  கறுப்புனு உன்னை நான் எப்போமாவது வெறுத்துப் பேசியிருக்கேனா … இல்லனா நீ கறுப்புத் தொலிய ஒதுக்கி வச்சமாதிரி நான் ஒதுக்கி வச்சேனா…”

“உனக்கு வேறப் போக்கிடம் இல்ல… உன்னைப்பத்தி தெரியும். நீ ஊருல உலகத்தில உள்ள ஆம்பிளையிங்க மாதிரி நல்லா சம்பாதிக்கிறவனா இருந்திருந்தா  என்னை மாதிரி கறுத்தப் பொண்ணக் கட்டியிருப்பீயா….”

“அப்படி சொல்லாத உன்னைப் பிடிச்சியிருந்ததனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…”

“இப்படி எல்லாம் கீழ்தரமா பேசாத நான் சொன்னபடி கறுத்தத் தொலிய கிரைண்டர்ல போட்டு ஆட்டு..”

“வாயிலக் கெட்ட வார்த்தை வந்திரும் பாத்துக்கோ ஆம்பிளயளுக்கு அடுக்களயில என்ன வேல…  போய் வேலை ஏதும் உண்டானு  பாரு. பையனுக்கு நாளைக்கு டியூசனுக்கு பீஸ் குடுக்கணும் பாத்துக்கோ ….”

 அவள் குறுங்கட்டியை விட்டு எழுந்திருந்து அவன் முன்னாலேயே கறுத்த தொலியிருந்த தண்ணீர் மொத்தத்தையும் காடிப்பானைக்குள் கொண்டு ஊற்றினாள்..

“இன்னாப் பாரு வெள்ளையா இருக்கிறதெல்லாம் விஷம்.  சீனி, உப்பு, பாலு இப்பிடி எல்லாமும் விஷம் தான்..தோசை வெள்ளையா இருக்கணுங்கிறதுக்காக இப்படி பண்ணாத கொஞ்சம் நான் சொல்றதப் புரிஞ்சிக்க”

ஊரு உலகத்தில வெள்ளைய கட்டி வெச்சிருகிறவனெல்லாம் வெஷத்தயா கூட வச்சிருக்காங்க…”

“நான் என்னத்தச் சொல்லேன் நீ என்னப் பேசுற…” “நான் அப்படித்தான் பேசுவேன் துரப் போறீயா அப்புறம்”

“இது என்னப் பேச்சு உனக்கு… இன்னாப் பாரு  சம்பா, கவுனி அரிசி என எல்லா சத்தான அரிசியோட நிறமும் கறுப்பு.. கறுப்பு சத்து வெள்ள விஷம் அதப் புரிஞ்சிக்க முதல்ல…”

“கீறல் விழுந்த ரெக்காடு மாதிரி திரும்பத் திரும்ப அதையே பேசிட்டிருக்காத. நீ ஒரு சாதாரண கூலி வேலக்காரன்.. அதுவும் ஆண்டுல ஆவணியில வேலைக்குப் போறவன்  நீ ஒரு கவர்மென்ட் வேலக்காரன் மாதிரி சம்பாதிக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தையும் இதமாதிரி எல்லாம் வாங்கி நெறக்கிறீயே.. இதெல்லாம் பானையில போட்டா வேவுமா.. ரெண்டு மணிநேரமாவது ஆகும். உன்னச் சொல்லிக் குத்தமில்ல உன்ன பெத்துப் போட்டுட்டு  என் தலையில கெட்டி வச்சிருக்காங்க பாரு அவங்களுக்கு குடுக்கணும் கொட. நீ அங்கப் போய்  2000 ரூபாய்க்கு வாங்கி வாரப் பாத்தியா அத வைரா விளையாங் கடையில 500 ரூபாக்கு வாங்கிருவேன்…”

“லோக்கல்ல வாங்குறதெல்லாம் டூப்ளிகேட்…எதையும் நம்பி வாங்க முடியாது  ஒரிஜினல் கிடையாது”

“முதல்ல நீ நல்லவனா… உங்க அம்மா நான் கல்யாணம் முடிஞ்சி வந்த புதுசுல நின்னாக் குத்தம், இருந்தாக் குத்தம் அவா என்ன படுத்தின பாடிருக்கே….வயத்துல குழந்தை இருக்கிறவளை மாடிக்கும் தரைக்குமா அலைய வைக்கிறோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி இருந்திச்சா.. சரி ரெண்டு குடம் தண்ணி எடுத்துக் குடுப்போம்ன்னு நினச்சாளா ..நல்ல தண்ணி வேணும்னாலும் நான் கீழ வந்துதான் பிடிச்சிட்டுப் போவேன்.. மேலயும் கீழேயும் ஏறி எறங்கி  கன்னிக்குடம் உடைஞ்சி மூத்தப் பையன் குறைப் பிரசவத்துல பொறந்தான் அதெல்லாம் நீ பாத்திட்டுதானே இருந்த..”

“இப்போ  எங்க அம்மா கதையெல்லாம்  ஏன்  நீ சொல்ற. அவதான் தனியா போயிட்டாளே “ “அவ தனியா போகலைன்னா நான் உயிரோட இருக்க முடியுமா…உங்க அம்மாகிட்ட யாரு குடியிருக்க முடியும்…நீயும் என்னைய என்ன பாடுபடுத்தின…” “நான் என்னச் செய்தேன் உன்னை” “என் வாயால பேச வைக்காத… என் கண்ணுல முழிக்காத எங்கேயாவது போயிரு..”

“நல்லது எது… கெட்டது எதுன்னுத் தெரியாதவளுட்ட எதைப் பேசி புரிய வைக்க முடியும்..”என முணுமுணுத்துக் கொண்டே மேலும் சண்டை வலுக்காமல் இருக்க வேண்டி  அந்த இடத்தை விட்டு நகர்ந்து வாசல் பக்கம் சென்றான்.

“உனக்கு தான் நல்லது கெட்டதுன்னு எல்லாம் தெரியுமோ…யாரு எதைச் சொன்னாலும் பேத்தமாதிரிக் கேட்டிட்டு  அப்படியே நம்பிடுறது பணம் என்ன மரத்திலியா காய்க்குது..”

நிறுத்தினேன்..

அதுதான் நான் செஞ்ச பெரியத் தப்பு..என்னத்தச் சொல்ல எல்லாம் என் தலைவிதி… உன்ன மாதிரி ஒருத்தன கட்டிக்கிட்டு நிம்மதியில்லாம கிடந்து சாகுறேன் பாத்தியா…”

“ என்னட்டி வாய் ரெம்ப நீளுது…” என அதட்டிக் கொண்டே ஐந்தாறு ஈர்குச்சிகளை உருவி எடுத்து அவளை நோக்கி வேகமாக வந்தான்.

அடிக்க வற்ரீயா.. அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத… உன்னையும் உம் அம்மா  உங் தொங்கச்சி எல்லாரையும் சேத்து  மகளிர்ல கொண்டு வரதட்சணக் கொடுமைன்னு கேஸ் கொடுத்துப்புடுவேன். உலகம்  தெரியாதுன்ணு நெனச்சிட்டியோ… ஒரு பெட்டிசன்தான்… எல்லாரையும்  உள்ளத் தள்ளிருவேன் பாத்துக்க” வார்த்தையால்  அவன் அடிக்க வருவதை தடுத்தாள்.

“இப்ப என்ன நடந்துச்சின்னு  தாடவ மாதிரி ஆடிட்டிருக்க..”

“நானா தாடவ மாதிரி ஆடுறேன். உங்க தங்கச்சியும், உங்க அம்மாவும் சின்ன ஆட்டமா ஆடுனாங்க..”

“தேவயில்லாம தங்கச்சியையும் அம்மாவையும் இழுக்காத…”

“அவளுவதான பொண்ணு பாத்து உன்ன மாதிரி நாதாரிக்கு கெட்டி வச்சாளுவா சின்னக் கொடுமையா பண்ணுனாங்க.

 “உங்களுக்கெல்லாம் நல்லா வாழனும்னு ஆசையில்ல..கண்டதையும் தின்னுகிட்டு ஆஸ்பித்திரிகாரங்கிட்ட குடுக்கிறதுக்கு ஆச.  போங்க போங்க எப்படியும் போங்க”

“ நாலு விசயத்தச் தெரிஞ்சிக்கிட்டு  நல்ல பொருளா வாங்கிப் போடுறேனு நீ சொல்ற சரி.

ஆனா உம் மக்கா இத சாப்பிடுமா.. அப்பனுக்கு கிறுக்குப் புடிச்சிட்டானுக் கேக்கியாங் முத்தவன்….

இதெல்லாம் பிடிக்கல ரேசன் அரிசிய பொங்குன்ணு இளையவன் கண்ணீர் வடிச்சி அழுறான்… நீ நல்லதுன்னு வாங்கிட்டு வர்றது எதுவுமே பிள்ளைங்க வாயில வைக்க மாட்டேங்குதே என்னச் செய்யலாம்..”

“போகப் போக அது பழகிறும், நீதான் பக்குவமாப் பேசி சாப்பிட வைக்கணும்”

“பொன்னாம் போல ரேசன் அரிசியல பொங்கிப்போடுறத  சாப்பிட்டுகிட்டு ஓடிச் திரிஞ்ச பிள்ளைங்க இப்ப சாப்பிடாம பள்ளிக்கூடத்துக்கு போக போடுறேன் …ரேசன் அரிசில பிளாஸ்டிக் அரிசி கலப்படம் வருதுன்னு உனக்குத் தெரியாதா…? என கொஞ்சம் குரலை உயர்த்தி பேசினான்

“உனக்குத்தான் எல்லாம் தெரியும்ணு நெனப்போ…எங்களுக்கும் எல்லாம் தெரியும்…ரேசன் அரிசியை தண்ணீரில அலசும் போது பிஸாஸ்டிக் அரிசி தண்ணீர்ல மெதக்க செய்யும் அதை எடுத்து தூரப் போட்டுகிட்டு சோறு பொங்குவேன்.. வந்திட்டா நீட்டி முழங்க.. உனக்கு மட்டுந்தான் அறிவிருக்கிறதா நினச்சிட்டியோ எனக்கும் எல்லாம் தெரியும்…வேல வெட்டியில்லாதவன்… நீ எதவேணுனாலும் பேசுவ…அதக் கேக்கதுக்கு நான் தயாரில்ல எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கு. சும்மா சலம்பிக்கிட்டு நிக்காத போய் வேல உண்டானுப் பாரு…” என்றாள்.

“உனக்கிட்ட சண்டை போடுறதுக்கு  என்னால முடியாதம்மா எங்கேயாவது போறேன்”

அவன் வெளியேறி முற்றத்தை கடக்கும் போது அவள் ஓடி வந்துச் சொன்னாள். “கடைப்பக்கம் போறதாயிருந்தா ரெண்டு முட்ட வாங்கிட்டு வாங்க.

டக்காங் கோழி முட்ட வாங்கினாப் போதும் நாட்டுக்கோழி முட்டையோ, வாத்துமுட்டையோ வாங்கி காச கரியாக்காதீங்க…” அவர்களுக்குள் சண்டை எதுவும் நடக்காதது மாதிரி மரியாதைக் கொடுத்து  நேசத்தோடு  சொன்னாள்..

அவன் அவளை முறைத்துப் பார்த்து விட்டு தெருவில் இறங்கி முணுமுணுத்துக் கொண்டே  அவளின் பார்வையிலிருந்து மறைந்தான்…                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *