SAVKIA-வின் 282-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அசரி ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 07.12.2024 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் வாயுப்பிரச்சனை குணமாவதற்கான மருந்து செய்முறையை கூறினார்.
அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் மலச்சிக்கலுக்கு நிலவாகை சூரணம் செய்முறையை கூறினார்.
அடுத்ததாக, திரு.அசரி ஆசான் இரத்த மேக கசாயம் செய்முறையையும், மேகம், குடல்சுரம் இவற்றுக்கு சிப்பிநெய் செய்முறையையும் கூறினார்.
அடுத்ததாக, திரு.ஜெரின் ஆசான் இரத்த விருத்தி லேகியம், வாத தைலம் செய்முறைகளையும், பிரம்ம லிங்க செந்தூரம் தயாரிக்கும் முறைகளையும் தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக, திரு.கருணாநிதி ஆசான் வர்மகசாயம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
திரு. ஜெபமணி ஆசான் வர்மத்துக்கு சூரணம் செய்முறையையும், சுண்டைவேர் கசாயம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.
திரு.பிரபு ஆசான் ஒடிவுமுறிவு கட்டுமுறை குறித்து பேசினார்.
திரு.புரூஸ்லி ஆசான் உடல் ஆரோக்கியம் குறித்து தெளிவாக பேசினார்.
திரு.குமார் ஆசான் சித்தமருத்துவம் சிறந்த மருத்துவம் என பேசினார்.
திரு.அர்ஜீனன் ஆசான் ஒடிவுமுறிவு எளிதாக கட்டி குணப்படுத்துவது குறித்து பேசினார்.
அடுத்ததாக, மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் வயிற்றுப் பொருமல், பசியின்மை, ருசியின்மை, வாய்வு இவற்றுக்கு சூரணம் செய்முறை, எல்லாவித விசமும் முறிய எளிய கசாயம் மற்றும் வாதம், முதுகுவலி இவற்றுக்கு மருந்து செய்முறையையும் தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply