– குமரி எழிலன்
இரட்டைக் கோபுரங்கள்
தகர்க்கப்பட்டு
தீட்டிய மரத்தில்
அம்பெய்து கூர்பார்த்த சோகம்
நிகழ்ந்த நாள்……,
செப்டம்பர்..11
ராமர்
பிறந்த இடங்களில் ஒன்றாய் கருதி
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்..
டிசம்பர்..6
இவைதானே உங்கள் நினைவில் நிற்கின்றன..
இவ்விரண்டும் நடத்தப்பட்டது…
செப்டம்பர் 11,
சிகாகோ அனைத்துலக மாநாட்டில்….
அனைவரும்
சீமான்களே..
சீமாட்டிகளே
என விழித்துப் பேசுகையில்
சகோதரிகளே சகோதரர்களே
என அழைத்து முழங்கிய
ஆனந்தனின்
விவேகக்கொடி
பறந்தநாள்
டிசம்பர்6
இயற்கையின் ஈகையால்
ஓடும்
நதி நீரை
ஊறும்
கிணற்று நீரை
பருகத்
தடைவிதித்தோரை
எதிர்த்துக்குரல்தந்த
பீமாராவின் நினைவுநாள்..
ஆம்
ஜனவரி 12ல்
அவதரித்த
விவேகானந்தர்
டிசம்பர் 6ல்
நினைவாகிப்போன…
அம்பேத்கர்
இவர்களை மறக்கவைக்கத்தானோ….?….!….?…!
Leave a Reply