– ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
பிரத்யேகமாக போடப்பட்ட அரங்கம்
பிரபலமான வர்ணனையாளர்
எல்லாம் தயாராக
காத்திருந்த அந்த நொடியும் வர
காரில் இருந்து இறங்கினார்
கம்பீரமான எழுத்தாளர்
பார்வையாளர்களின் ஆர்வத்தை
கூட்டும் வகையில்
தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு
புன்னகை மாறா முகத்தோடு
எதிர் கொண்டார்
நிறைவான கேள்வி என வினாவுகிறார்
உங்களின் நிறைவேறாத விருப்பம் ? என
சராசரி பெண்போல
நானும் உதிர்க்க வேண்டும்
சிவப்பு திரவத்தை என்றார்
அரங்கம் அமைதி பூண்டது
ஒரு திருநங்கையின் விருப்பத்துக்கு
மௌன அஞ்சலி செலுத்துவது போல
Leave a Reply