– கஸ்தூரிபா ஜாண்ஸன்
நம் உடல் நலத்துக்காக, நோய்களை தீர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் பல்வகைத் தாவரங்களில் ஒன்று இரணகள்ளி. இது ஒரு கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி.
இத்தாவரம் நீளவட்ட வடிவில் நீர் பற்று அதிகமாகவும் காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாகவும் காணப்படுகிறது. இது ஓர் விதையற்ற தாவரம். இதன் இலைகளின் ஓரங்கள் அல்லது விளிம்புகளிலிருந்து புதிய கன்றுகள் வளர்வதைக் காணலாம். இதற்கு மலைக்கள்ளி என்ற பெயரும் உண்டு.
இரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்புகள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் தன்மையைக் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் இந்த இரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.
காதுவலிக்கு இரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட காதுவலி குணமாகும். இரணகள்ளி மூலிகைகளை நன்றாக அரைத்து வெற்றிலையோடு சேர்த்து வர புண்கள், காயங்கள், கட்டிகள் உள்ள இடத்தில் பற்றுபோட வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் ஆறும் தன்மை கொண்டது.
சிறுநீரக கற்களை கரைக்க இந்த மூலிகைச் செடியின் இலை பயன்படுத்தப் படுகிறது. சிறுநீரகத்தில் உருவாகும் எவ்வளவு பெரிய கற்களைகளையும் மிக எளிதில் கரைத்து துகள்களாக சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும் இன்றி வெளியேறுகிறது. இரணகள்ளி இலைகளை 7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர நோய் பூரண குணமடையும். முதல் நாள் மிகச்சிறிய இலையில் இருந்து தான் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
இத்தாவரம் காணப்படும் இடங்கள்
மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட இக்கள்ளிச் செடிகள் வெப்பமண்டல பகுதிகளில் இயற்கையாக வளர்கிறது. பசுமையான வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் மலை காடுகளில் உள்ள பாறைகளின் தளங்களைப் பற்றி வளர்கிறது. இது ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலேந்தியா, மேற்க்கிந்திய தீவுகள் பெர்முடா, மக்ரோனேசியாமஸ், பிரேசில், சுரினாம், கலபகோஸ் தீவுகள், மெலனேசியா, பாலினேசியா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. ஹவாய் போன்ற இடங்களில் இது ஒரு களையாக கருதப்படுகிறது.
குறிப்பு இவற்றை உண்ணும் போது பால் சார்ந்த பொருட்களையும் இறைச்சி, மீன், முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
Leave a Reply