சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த இந்துமதி அம்மாவிற்கு … மனது ஒரு வித குதூகலமாகவே இருந்தது.
வழக்கமாக அவள் பயணிக்கும் பயணம் தான் அது. அன்று…. ஏனோ!…. அந்த பயணம் அவளுக்கு ஒரு சுகத்தை குடுத்தது.
சொந்த மண்ணின் பாசமோ?… தெரியலையே… அல்லது நேற்று அவள் கண்ட கனவு தான் காரணமா?
அவள் கண்ட கனவைப்பற்றி … அவள் கணவனிடம் கூற முயற்சித்த போதல்லா …. அவர் காது குடுக்கவேயில்லை. அவளுக்கும் அது தடையாக படவே… சொல்லவேயில்லை.
கனவை பற்றி வெளியே சொன்னா… அது பலிக்காது… அதா … சொல்ல வேண்டாம்” அவளே அவளை சமாதானம் செய்து கொண்டாள்.
அவள் கண்ட கனவைப்பத்தி சொல்லவே … மாட்டங்கறா. அப்படி என்ன கனவோ? அது!!
வழியில் வழக்கமாக காருக்கு பெட்ரோல் போடும் இடத்தில் போட்டு விட்டு அவளும் சாப்பிட சென்றாள் அருகில் உள்ள உணவகத்திற்கு … கணவருடன் அங்கு அவளையே உற்று நோக்கியபடி… ஒரு வாலிப பெண். எங்கேயோ பரிச்சயமான முகம் போலவே இருந்தது. இந்துமதிக்கு.
அவள் சாப்பிட சென்ற அதே இடத்தில் அவளும் ….. இந்துமதிக்கு எதிரே…அவள் கண்ட கனவைப் போலவே இருந்தது. இந்நிகழ்வு.
அந்த பெண்ணும் … அவள் கைப்பையில் இருந்து எதையோ எடுத்து பார்த்து…. இவளையும் பார்த்து … உள்ளே வைத்துக் கொண்டாள்.
இந்துமதியின் கணவன் இதை கண்டு கொள்ளவேயில்லை.
இந்து மதிக்கு மட்டும் மனது பரபரத்தது.
அந்த பெண்ணும் ஏதோ எடுப்பதும் இவளை பார்பதுவுமாகவே இருந்தாள்.
அப்பெண் முகத்திலும் ஒரு சாந்தம் அமைதி… இந்துவை பார்த்து சற்றே புன்னகைத்தாள். சாப்பிட்டு இந்துமதி கிளம்பிய உடன் … அந்த பெண்ணும் சென்று மறைந்து விட்டாள்.
ஆனா, அந்த பெண், இவளை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்ததை … இந்துமதி கவனிக்கவில்லை தான்.
அடுத்த நாள், சொந்த ஊருக்கு வந்த இந்துமதி… தன் குடும்ப டாக்டரிடம் உடல் பரிசோதனைக்காக சென்றவள், அதிர்ந்தாள்.
அவளுக்கு, பிரஷர் சோதனை செய்தது … நேற்று கண்ட… புன்னகைத்த அதே முகம். அதே வசீகர பார்வை. உலகமே செயலற்று… அசைவற்று நிற்பதாக உணர்ந்தாள் இந்து.
“என்ன இது ? சினிமாவில் ஹீரோ… ஹீரோயின் சந்திப்பு மாதிரி! இது நிகழ்வா! கனவா! எப்படி இருந்தாலும்… இந்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள்.
ஏன் இந்த பூரிப்பு? மகிழ்வு? என்ன விந்தை இது? போன ஜென்மத்து பலனா! குழம்பிய எண்ணங்களோடு வீடு திரும்பினாள் இந்துமதி.. செல்லஃபோன் சினுங்கியது. எடுத்து ஹலோ என்றான்… எந்த பதிலும் இல்லை.
மீண்டும் அந்த கனவு வருமா? என்ற ஏக்கத்தோடே … உறங்கச் சென்றாள் இந்து… பொழுது விடிந்தது. ஹாயாக சுவற்றில் சாய்ந்து … கால் நீட்டி. அமர்ந்து…பில்டர் காபியை ரசித்து, ருசித்த … இந்து மதியின் வீட்டின் வாசலில் மீண்டும் அவள். நிலமை புரியாமல். இந்து, அந்த பெண்ணை வரவேற்று, அருகில் அமர்த்தி…
“இங்க என்ன சினிமா ஷூட்டிங் நடக்குதா? மீண்டும் மீண்டும் , நீ என் எதிரில் … யாரம்மா? நீ? எப்ப பாரு எனக்கு தரிசனம் கொடுக்கிறாய் ? இது என்ன மாயம்? ஆச்சரியத்தில் … இந்து. வந்த அந்த மங்கை “ என் பேர் வானதி. ஒரு போட்டோவை எடுத்து காட்டி இது நீங்க தானா என்றாள். “
“ஆமா … சில வருடங்களுக்கு முன்… நான், லிவீஷீஸீs சிறீuதீ மூலம் … அன்பகம் காப்பகத்திற்கு சென்றேன். அங்கே ஒரு பெண் குழந்தை, என்னை கட்டி பிடித்துக் கொண்டு… என் கூடவே சுற்றியது. “
“அவ தாம்மா நான். “ “என்னம்மா சொல்ற…! எப்படி என்னை கண்டுபிடிச்ச “?
“ எங்க அன்பகத்தல, நீங்க அப்பப்ப வந்து எங்களுடன், ஒன்றி கொண்டாடிய புகைப்படங்களை ஆல்பமா போட்டு வைத்திருக்காங்க.
நான் வளர்ந்த பின்பு … என்னை நீங்க தூக்கி வைத்துள்ளதை பார்த்த… என்னை இப்படி முதன்முதலில் தூக்கியது நீங்கதாம்மா.
நான் பிறந்த உடனே | , எங்க அம்மா இறந்துட்டாங்க. என் பார்வை பட்டு எங்கம்மா இறந்துட்டாங்கன்னு… என் சொந்தங்கள் என்னை இங்கு கொண்டு வந்து விட்டார்களாம். நான் இங்கே வந்த சில மாதங்களிலே இந்த காப்பகத்தை நிர்வகித்து வந்த … அந்த தெய்வமும் திடீர்ன்னு இறந்துட்டாங்க.
“ம் ஆமாம் அது தெரியும் சொல்லு”…
அதிலிருந்து என்னை எல்லோரும் ஒரு பாவியாகத்தான் பாத்தாங்க…
நீங்க அங்க வந்த போது நீங்க மட்டும்தான் என்னை தூக்கினீங்க. நீங்க, என், அம்மாவாக என் மனசுல பதிச்சிட்டேங்க.
பிறகு, நீங்க எப்போதாவது வருவீங்க… பணம் குடுத்துட்டு உடனே போய்டுவீங்க. உங்களை கிட்ட பார்க்க முடியவில்லை. “,
“ ஆமாம்மா | நான் இப்போ சென்னையில இருக்கேன். அப்பப்ப இங்கு வரும் போது உங்க அன்பகத்திற்கு வருவேன். அவ்வளவுதான். “
“நானும் வளர்ந்து “நர்ஸிங்” கோர்ஸ் விரும்பி படித்து … இங்கேயே ஒரு டாக்டரிடம் வேலை பார்க்கிறேன்.
அன்று கடலூரில் ஒரு மருத்துவ முகாம் நடத்தினார்கள்… அங்கு வந்த போதுதான் உங்களை பார்த்தேன். நீங்க தானா என்று “புகைப்படத்தை எடுத்து பார்த்து, பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டேன்.
உங்கள் போன் நம்பரையும் எங்கள் காப்பகத்தில் இருந்து எடுத்து வைத்துள்ளேன். ஃபோன் செய்தேன்… நீங்க எடுக்கவில்லை….என் நம்பிக்கை போச்சு.
மீண்டும் நேற்று கிளினிக்… கில் பார்த்தேன்…. உடனே ஃபோன் செய்தேன்… நீங்க எடுத்தீங்க. ஆனா நான் பேசவில்லை”
. “ஏம்பா… உடனே பேச வேண்டியது தானே… ஏன். பேசல?!!
“உண்மை தாம்மா… எனக்கும் தோணுச்சு. என் முகம் பார்த்து எங்கம்மா போய் சேர்ந்துட்டாங்க, எனக்கு ஆதரவு குடுத்தவங்களும் போய் சேர்ந்துட்டாங்க. நான், உங்களிடம் வந்தா. உங்களுக்கும் ஏதாவது ஆகிட போகுதேன்னு தான் உங்களை பார்க்கவில்லை. “
“என்னம்மா, இது .. இதெல்லாம் மூட நம்பிக்கை… இப்போ எப்படி வந்த?!”
“அந்த கதையை கேளுங்கம்மா…” நேத்து எனக்கு ஒரு கனவு அம்மா … நாமம் போட்ட ஒரு முதியவர் வந்தார் கனவில் . நான் மனமுருக வேண்டினேன். பின்னால் ஒரு உருவம் என் தோளை தட்டி., கண்ணீரை துடைத்து … உங்க அம்மா வந்துட்டுல்ல … இனிமே அழக்கூடாதுன்னு சொன்னாங்க. அந்த கனவுல எனக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. அம்மா… பெருமாளே, அம்மாவா உங்களை எனக்கு காட்டுகிறார் என்று நம்பி… பெருமாள் கோயிலுக்கு போயிட்டு… உடனே உங்களை பாக்க வந்தம்மா… என்றாள் கண்ணீர் மல்க, “…
“தோ, பாரும்மா… நானும் பெருமாள் பக்தை தான். அந்த பெருமாள் உன்னை என்னிடம் அனுப்பியுள்ளார். இனி, நீ என் பொண்ணு தாம்மா.”
அவளும் தான் கொண்டு வந்த பூ, பழத்தோடு அந்த அம்மாவை நமஸ்கரித்தாள். நான் இப்போ நர்ஸாக இருக்கேம்மா. அந்த காப்பகத்தில் தான் இருக்கேம்மா என்றாள்
மறுநாள், இந்துவின் கணவருக்காக.. கால்வலிக்காக ஒரு “பிஸியோதரபிஸ்ட் “ வழக்கமாக வருபவர் தான் …. வந்தார்.
“தம்பி, ரொம்ப நாளா நீயும் உன் கல்யாணத்தை தள்ளி போட்டுட்டே போற… நீங்க பொண்ணு பாத்து சொன்னா கல்யாணம் செய்து கொள்கிறேன் என்பாய்..
அதற்கு ஒரு சான்ஸ் வந்துள்ளது என்று… அவளுக்கு கிடைத்த மகளைப் பத்தியும் … எல்லா விவரங்களையும் எடுத்து கூறினாள் இந்துமதி.
உனக்கும் ஆதரவு அளிக்க யாரும் இல்லை. அவளும் நர்ஸ்… உங்களுக்குள் ஒத்து போகும் … நான் தான் அவளுக்கு அம்மா… என்று தெளிவா எடுத்து கூறி “அவர்கள் திருமணத்தையும் பேசி முடித்தாள்.
தன் மகளின் விருப்பப்படியே அவர்கள் காப்பகத்திலே தன் சக தோழிகளுடன் ….. அவனை திருமணம் செய்து கொண்டாள் அந்த மகள் வானதியும்.
இந்துமதிக்கும் … அவள் கண்ட கனவு நினைவுக்கு வந்தது.
“நாமம் போட்ட ஒரு முதியவர் ஒரு பெண்ணை இவளிடம் ஒப்படைத்து.. இவ உனக்கு தான் “ என்று கூறி மறைந்து போனது நினைவுக்கு வந்தது. “ பெருமாளே இருவர் கனவிலும் வந்து. தாய், மகளை ஒன்றாக சேர்த்து விட்டார். யாரும் அனாதையோ, ஆதரவு அற்றோர்களோ கிடையாது…. என்பது உண்மைதாங்க . அதை கனவு மூலம் நிருபித்து விட்டார். பெருமாள் … தன் பக்தையான இந்துமதிக்கு…
– கலா ஞானசம்பந்தம்
Leave a Reply