– குமரி எழிலன்
ஒரு ரூபாய்க்கு நாலு பென்சில்
நாலு ரூபாய்க்கு எத்தன பென்சில் ?
பதினாறு பென்சில் ….
ஒரு வகுப்பில் (அரசுப்பள்ளி) நாலு மாணவர்கள் உள்ளனர் (40 இருந்த காலம் மலை ஏறிற்று) நாலு வகுப்பில் எத்தனை மாணவர்கள்? பதினாறு மாணவர்கள் …
ஒரு மாச கண்ணுக்குட்டிக்கு நாலு காலு, நாலு மாசக் கண்ணுக்குட்டிக்கு எத்தன காலு? பதினாறு காலு …
மாணவர் கூட்டம் கொல்லென்று சிரித்தது.. ஆசிரியையும் தான் …. அமைதியாக எழுந்து நின்றாள் மாணவி பிருந்தா.
மேம், சரியான விடைதான் சொன்னேன் … என்றாள் ஆசிரியையின் முகம் சிவந்தது. மேம்… கால்வாய்பாடு எனக்குத் தெரியும்… அப்ப, எனக்குத் தெரியாதுங்கறியா… இல்ல மேம்.. என்ன, நொள்ள மேம்… கால்வாய்பாடு நான் சொல்லட்டா மேடம்…
… எனக்கு… எனக்கு… நீ… சொல்லித்தரப் போறியா…?
கோபமலையின் உச்சிக்குச் சென்றார் ஆசிரியை.. இல்ல மேம், ஒரு கால் கால், இருகால் அரை, நால்கால் ஒண்ணு, எண்கால் ரெண்டு பதினாறுகால் நாலு ….
நாலுகால் என்பதை பதினாறு கால்னு சொன்னேன்….. மாணவிகள் கோரசாய்க் கைத்தட்டினர். ஆசிரியையும் தான் …
காலமாகி விட்ட பக்கத்து வீட்டு ஆச்சி சொல்லிக் கொடுத்த கால்வாய்பாடு காலம் கடந்தும் கால் கொடுத்த … சீச்சீ கை கொடுத்ததை எண்ணி கண்ணில் நீர்கோர்த்ததை மறைத்தாள் பிருந்தா.
Leave a Reply