கைபேசி கையடக்க கைபேசி
கையில் வைத்து பேசுவதினால் கைபேசி
வாஞ்சையுடன் அன்பை பகிர்ந்திட கைபேசி
வகைவாயாய் வர்த்தகம் செய்ய கைபேசி
தபால் தந்தி காணாமல் போகச் செய்த கைப்பேசி
காலையில் எழுந்திட அலாரமான கைபேசி
ஊரிலிருந்து கொண்டே வேறு ஊரில்
இருக்கிறேன் என்று பொய் பேசி
நாடகமாட கைபேசி
நன்மைகள் நடக்க உடனடி தகவல் தர கைபேசி
உள்ளங்கையில் உலகை காட்டும் கைபேசி
வங்கிக்கடன் பரிமாற்றத்துக்கு கைபேசி
வழிதுணையாக நண்பன் போலான கைபேசி
கர்ணன் கவச குண்டலம் போலான கைபேசு
சிறுவர் விளையாட சீரழிக்க செய்து கைபேசி
கணினி போலான கைபேசி
அல்லவை எல்லாம் தவிர்த்திடு
நல்லதை பேசாது இருந்தால் தூக்கி எறி
சின்ன கண்ணதாசன்
Leave a Reply