உலகின் தங்க பெட்டகம் – நியூயார்க், பெடரல் பேங்க்

உலகின் தங்க பெட்டகம் – நியூயார்க், பெடரல் பேங்க்

  • By Magazine
  • |

– முனைவர் மோகனா, பழனி

அட தங்கமே…யாரறிவார் உந்தன் அரியாசனம் ..?

வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வு/ செயல்பாடுகளில் தங்கத்தை போட்டிருப்பீர்கள்.   அல்லது யாருக்காவது தங்கம் வாங்கிக் கொடுக்கும்படி நேர்ந்திருக்கும். அந்த தங்கத்துக்கு எங்கு விலை, யாரால் நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? அதன் தரத்தை நிர்ணயம் செய்வது யார்? எங்கே? இதெல்லாம் என்றைக்காவது நினைத்துக்கூட பார்த்திருப்போமா? இப்பவும் கூட நம்மில் நிறைய பேருக்கு இது  தெரியாது.

கண்டுபிடித்தது எப்படி?

     மனிதன் எப்போது தங்கத்தைப் பயன்படுத்தினான், எப்படி கண்டுபிடித்தான், அப்போது அவனுக்கு பவுனோட மவுசு தெரியுமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவும், பின்னர் அதற்கு விடையும் கூட கிடைத்திருக்கிறது. மனிதனுக்கு தங்கத்துடனான ஈர்ப்பு என்பது வரலாற்றுக்கும் முந்தையது என்றுதான் குறிப்பிட வேண்டும். எப்ப சரியாக மனித இனம் தங்கத்தோட உறவு கொண்டாட ஆரம்பிச்சது என்று சரியாகத்  தெரியவில்லைதான். ஆனால் மனிதன் வாழ்ந்த பழைய கற்கால குகைகளில், தங்க செதில்கள் கிடைத்துள்ளன என்றால், அவை அங்கு அப்போது வாழ்ந்த மனித இனம்தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.  இது ஒரு 40,000 (கி.மு. 40,000)ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை அறிகிறோம்.

 ஆதி தங்கம்

நிறைய ஆதிகால சான்றுகளைத் தேடும்போது,மனித இனம் தங்கத்தை ஓர் உலோகமாகப் பயன்படுத்தினர் என்பது தெரிய வருகிறது. எனவே தங்கம் என்பது உலகத்தில் பல இடங்களில், பல மனித குழுக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் வரலாற்றின் வழியே சேகரிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு குழுவுக்கும் வேறு வேறு கலாச்சாரம் என்பதால், அவரவர் கலாச்சாரத்துடன் இணைந்தே தங்கத்தின்  பயன்பாடும் இருந்திருக்கிறது. பல இடங்களில் பயன்பாடு இருந்தாலும்,  சில இடங்களில் பதிவும், நிறைய இடங்களில் சப்தமின்றி பயன்பாடும்.நிகழ்ந்திருக்கின்றன.

 தங்கமே நீ எங்கு..தங்கினாய் ?

   தங்கம், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் தங்கம் பயன்படுத்தியதுடன், இறந்தபின்னர், அந்நாட்டு மன்னரை அடக்கம் செய்யும்போதும்   தங்கத்தையும் சேர்த்து வைத்தே  பாரோவில் (எகிப்திய கல்லறையில்) மூடி அடக்கம் செய்துள்ளனர். அப்போது அவர்கள்தான்  முதன் முதலில் தங்க நகைகளைச் செய்வது பற்றிய திறமை அவர்களிடம் இருந்திருக்கிறது. நைல் நதிப்படுகையில், நதியில் தங்கத் துகள்கள் இருந்திருக்கின்றன.   சுமேரியர், நாகரீகத்தில், சுமார்  3000 ஆண்டுகளுக்கு முன்னர், தங்க சங்கிலி செய்துள்ளனர்.அரேபியர்கள் தங்கத்தை வணிகத்தில் பயன்படுத்தினர்.

 உலகின் தங்கம் சேமிப்பு

    உலகில் மனித வரலாற்றில், மிக மிக அதிகமான தங்கம் சேமிக்கப்பட்டுள்ளது எங்கு தெரியுமா? நியூயார்க் நகரின் மையமான, பிராட்வே தெருவில் லோயர் மன்ஹாட்டன் என்னும் இடத்தில் இருக்கும் “பெடரல் ரிசர்வ் வங்கி”க்கு கீழே இருக்கும் இரு அறைகளில், சுமார்  80 அடி  ஆழத்தில் ,பெடரல் வங்கியின் சிறப்பு பெட்டகம் உள்ளது. இதில்தான் உலகின் ஒட்டு மொத்த சேமிப்பு தங்கமும் வைக்கப்பட்டு உள்ளது. இது பாறைப் படுக்கையால் ஆனது. இதில் இரண்டு சிறப்பு பெட்டகங்கள் உள்ளன.  இப்போது உலகத்தின் ஒட்டுமொத்த தங்க இருப்பும், எங்கு இருக்கிறது என்று பார்த்தாகிவிட்டதா?? அவங்கதான். உலக போலீஸ்காரனான, அமெரிக்கா. இதன்  தலைநகரில், அங்குள்ள லோயர் மன்ஹாட்டன் தெருவிலுள்ள  பெடரல்  ரிசர்வ் வங்கியில். உலகில் பாதுகாப்பில் எல்லா நாடுகளும், தங்கள் ஊர் மக்களை நம்பாமல், அமெரிக்க பெடரல் வங்கியை நம்பி, தங்கள் வசம் உள்ள தங்கத்தை கொடுத்து வைத்துள்ளனர் . இங்கே அமெரிக்க நாடுகளின் தங்கம் இருப்பது ஒரு ஜுஜுபி .இந்த பெட்டகங்களுக்குள் சுமாராக 7,000 டன்கள் உள்ள தங்க கட்டிகள் பகபகவென ஜொலிக்கும் சொக்கத்தங்கம் இங்கேதான் உள்ளது.இதுவரை உலகில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தில், 5% இங்கேதான் இருக்கிறது தெரியுமா?

உலக பாதுகாவலனா?

 உலகின்  ஒட்டு மொத்தத்திலுள்ள சேமிப்பில் உள்ள தங்கம் இந்த வங்கியின் தரைதளத்துக்கும் கீழே உள்ள தங்க பெட்டகததில்  மிக மிக  பாதுகாப்பாக உட்கார்ந்து இருக்கிறது. உலகத்தங்கம். சும்மா எம்புட்டு இருக்கும்னு யாராவது உத்தேசமா சொல்ல முடியுமா?  உங்களால் சொல்லவே முடியாது. இவற்றில் ஒரு துணுக்கை கூட அமெரிக்கா என்னோடது என்று சொல்ல முடியாது. சொந்தமும் கொண்டாட முடியாது. .அதன் சொந்தக்காரர்கள்  36 அயல்நாடுகளில்.  அது யார் யாருன்னு சொல்ல மாட்டோம்ல.. இங்குள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 200,000,000,000 டாலருக்கு சமம். இந்த இரண்டு பெட்டகங்களில் முதன்மையானது, 1924-ல் திறக்கப்பட்டது. மற்றது, 1963-ல் திறக்கப்பட்டது.   உலகம் முழுவதும் உள்ள மைய வங்கிகள், இந்த பெடரல் வங்கியை நம்பி, தங்களுடைய அனைத்து தங்கத்தையும் பாதுகாப்புக்காக கொடுத்து வைத்துள்ளன.தனிப்பட்ட மனிதர்களின் தங்க இருப்புகள் இங்கு வாங்கப்பட மாட்டாது.

 சொந்தம் எது ?

     நியூயார்க்கின் 33,  லிபர்ட்டி தெருவில் அமைந்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, உலகிலேயே பெரிய வங்கி. இது 32 மாடிகள் கொண்ட ஒரு மாளிகை. இதன் ஜன்னல்களுக்கு கூட கேட் போட்டு வைத்துள்ளனர். இதன் கீழுள்ள, தரைக்கு அடியில் 80 அடி ஆழத்திலும்,கடல் மட்டத்திலிருந்து 50 அடிக்கு கீழும் தங்க பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள 7000 டன்கள்  உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு 250 பில்லியன் டாலர். இதிலுள்ள ஒவ்வொரு தங்க கட்டியின் மதிப்பு என்ன தெரியுமா? இன்றைய மதிப்பில் ஒரு தங்க கட்டியின் விலை 650,000 டாலர். இதில் இருக்கும் தங்கம் பெடெரல் வங்கிக்கு சொந்தமானதல்ல. இது ஒரு பாதுகாப்பாளராக செயல்படுகிறது மேலும் தற்போதைய உலக சேமிப்பில்  10%  இங்குதான் இருக்கிறது. இங்கு அதிகமாக தற்போது அதிகமாக  வைத்திருக்கும் கணக்கு, 54 பில்லியன் டாலர்கள் மட்டுமே. 

 பாதுகாப்பு எப்படி?

தங்க பெட்டகத்துக்கு பல அடுக்கு பாதுகாப்பு வைக்கப்பட்டு  இருக்கிறது. முதலில்  நுழைவில், 90 டன் எஃகு  சிலிண்டர், பின்னர் 9 அடி  உயர சிலிண்டர்,  140 டன் எஃகு மற்றும் காங்கிரீட்  பிரேமுக்குள் வைத்து மூடப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும்  நீர் மற்றும் காற்று உள்ளே நுழையாதபடி. வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 4 எஃகு துண்டுகள்  உள்ளே நுழைக்கப்பட்டும் உள்ளது. தேவைக்கு ஏறறாற்போல.. இங்கிருக்கும் தங்கம் எல்லாம் பெரும்பாலும் இரண்டாம் உலகப்போரின் போது கொண்டு வரப்பட்டவை ஆகும்.

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜ குமாரா?

   இவ்வளவு தங்கம் வைத்திருக்கும் இடத்தை கொள்ளை அடிக்க, திருட ஆசை இல்லாமல் இருக்குமா? இருக்கும் இருக்கும், ஆனால் இதன் பாதுகாப்பு கருதிதானோ என்னவோ, இதுவரை யாரும் அப்படி முயற்சிக்கவில்லை. அப்படி செய்ய ஆசைப்பட்டால் என்ன ஆகும்?.எளிதில் இதனுள்ளே நுழையும் வழி என்பது, இதன் அருகாமையிலுள்ள, சப் ஸ்டேஷனில் உள்ள tunnel  தான். அதுதான் 30 அடி  உயரத்தில் இருக்கிறது. அங்கே  போய் உடைப்பது என்றால், என்ன ஆகும?  என்ன செய்யணும், உலகத்தின் மிகப் பலமான வலுவான, துளைப்பானைக் (Driller) கொண்டு, ஓட்டை போடணும்.  ஆனா அந்த துளைப்பானுக்கு நுனியில் வைரம் பொருத்தப்பட்ட முனை இருக்கணும். அப்பேது தான்  சுவரை துளை போட முடியும். அப்படி போட்டாலாவது ஓட்டை போட்டுடலாமா? அதுதான் ஆகாது. சுமார் இரண்டு மாத காலம் ஆகும்,  நீங்க ஓட்டை போட.ஆனால் சின்னதான அதிர்வு இருந்தால் கூட, அதிலுள்ள பாதுகாப்பு அலாரம் அலறி ஊரைக்கூட்டிடும். அப்புறம் நீங்க /நான் எல்லோரும் அமெரிக்க போலீசின் துப்பாக்கி ரவைக்கு தீனிதான். இது தேவையா நமக்கு.. ?

    கீழுள்ள 10 நாடுகள்தான் அதிகமான தங்க கையிருப்பை வைத்துள்ளன. இந்தியா உட்பட

  1. அமெரிக்கா. டன்: 8,133.5. 
  2.  வெளிநாட்டு இருப்பு சதவீதம்: 75.2 சதவீதம்.

2. ஜெர்மனி. டன்: 3,371.0. …

3. இத்தாலி. டன்: 2,451.8. …

4. பிரான்ஸ். டன்: 2,436.0. …

5. ரஷ்யா. டன்: 1,909.8. …

6. சீனா. டன்: 1,842.6. …

7. சுவிட்சர்லாந்து. டன்: 1,040.0.

…8. ஜப்பான். டன்: 765.2. …

அதிக தங்கம் உற்பத்தி செய்யும் 10  நாடுகள்

ஆப்பிரிக்க கானாவில் மொத்த கனிம உற்பத்தியில் 90% க்கும் அதிகமான தங்கம் உற்பத்தி ஆகிறது

உலகின் மிகப்பெரிய தங்கம் உற்பத்தி செய்யும் நாடு சீனா

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான தங்கச் சுரங்கங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளன.

நெவாடா அமெரிக்காவில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் மாநிலமாகும்.

தங்க நகை நுகர்வு – 2015

தரவரிசை   நாடு             டன்

1              இந்தியா         674.5

2              சீனா               563.7

3             அமெரிக்கா        140.5

4            சவுதி அரேபியா     57.5 அதிகம்

தங்கம்  உற்பத்தி செய்யும் நாடுகள் :        

உஸ்பெகிஸ்தான்       – 90,000 கிலோ

இந்தோனேசியா       – 100,000 கிலோ

 கானா                – 100,000 கிலோ

கனடா               – 110,000 கிலோ

பெரு                 – 150,000 கிலோ

தென்னாப்பிரிக்கா      – 190,000 கிலோ

ரஷ்யா               – 200,000 கிலோ

அமெரிக்கா           – 237,000 கிலோ  

 துபாயில் மற்ற நாடுகளை விட தங்கத்தின் விலை மலிவு /குறைவு

     916 தங்கம் என்பது 22 கேரட் தங்கத்தைத் தவிர வேறில்லை. 916 என்பது அடிப்படையில் இறுதி தயாரிப்பில் தங்கத்தின் தூய்மையைக் குறிக்கப் பயன்படுகிறது, அதாவது 100 கிராம் அலாயில் 91.6 கிராம் தூய தங்கம். எண்ணிக்கை 916 அடிப்படையில் 22/24 (22 காரட் /24 காரட்). … சுத்தமான தங்கம் மிகவும் மென்மையாக இருப்பதால், அதில் நகைகள் செய்வது கடினம். எனவே  சிக்கலான நகைகளை தயாரிக்க 916 தங்கம் நல்லது

ஒவ்வொரு தங்க கட்டியும் ஒரு தண்ணி பாட்டில் சைஸ்தான்ண் இருக்கும்.. எடை 27 பவுண்டுகள். இங்குள்ள தங்க கட்டிகள் 100% தங்கம்  அல்ல.இதில் செம்பு, வெள்ளி மற்றும் பிளாட்டினம் கலந்துள்ளது, ஒவ்வொன்றும் தனிப்பட்டது ஒன்றுபோல் மற்றொன்று கிடையாது. தனித்தனியாக அதன் எண்ணுடன் குறிக்கப்பட்டிருக்கும், ஒன்றும் இன்னொன்னும்,வேறு வேறானவை. அந்த கட்டியிலேயே அந்த தங்கம் எங்க செய்யப்பட்டது என்றம் முத்திரை இருக்கும்.

  பாதுகாப்பும், கலைநயமும்

தங்கத்தின் பாதுகாப்பு எப்படி தெரியுமா?  சிலிண்டர்,  அலாரம்,  போலீஸ்   எல்லாம் தாண்டி, அந்த தங்க பெட்டகத்துக்கு பாதுகாப்பு படை என்பது கண்டரோல் குழு தனியாக உள்ளது. இதில் மூவர் உண்டு .ஒருத்தருக்கு கூட தனியா திறப்பது என்பது முடியாத விஷயம். பாதுகாப்பு ஒரு புறம் என்றால், அந்த கட்டிடத்தின் கலை நயம், வடிவமைப்பு எல்லாம் ஒருவர் பெட்டகத்தில் நுழைந்து சுற்றிப்பார்த்து வந்தால் தான் இதில் இரும்பு,  சுண்ணாம்பு, மணல் போன்றவையும் கலந்த கலை நுணுக்கத்தோடு கட்டப்பட்டுள்ள இந்த இத்தாலிய கலைநயம்  ஆங்காங்கே மிளிர்வதை அறிய முடியும்

 தங்க சுற்றுலா  போலாமா?

இதனைச் சுற்றிப்பார்க்க, ஒரு tour ஏற்பாடு செய்துள்ளனர். சுற்றிப்பார்ப்பது என்பது  எல்லா வேலைநாட்களிலும்.உண்டு. ஆனால் ஒரு பைசா கட்டணம் இல்லை.  எல்லாம் கட்டணம் இல்லா tour online- னில்தான் பதிவு.   இதற்கு   முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஒரு  தடவையில் 25 பேர் செல்லலாம் . சுற்றிப்பார்க்க ஒரு மணி நேரம்தான். போய்ப் பார்க்க 30 நிமிடம் முன்னாடியே இருக்கணும், security செக்கிங் உண்டு. 16 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அவர்களின் பாதுகாவலருடன் வரலாம். .இந்த டூரின்போது எங்கே தங்கம் கொட்டிக் கிடக்குதுன்னு நேரில் பார்க்கலாம். டூரின் போது வழிகாட்டி உங்களுக்கு எல்லா இடத்தையும் விளக்கி காட்டுவார். கண்ணால் மட்டுமே அனைத்தையும் பார்த்து, ரசித்து, அனுபவித்து, கற்பனை செய்து மகிழலாம். உலகில் ஒட்டு மொத்த தங்கத்தையும் பார்ப்பது என்பதே ஒரு வரலாறுதானே . வரலாற்று சிறப்பு மிக்க மியூசியமும் உண்டு. அத்தனையும் சுற்றிப்பார்க்கலாம்.

வர்றீங்களா.. நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கிக்கும், அதோட தங்க பெடடகத்துக்கும் ஒரு டிரிப் அடிச்சுட்டு வரலாம். ஆசையாய் இருக்குதா?  அமெரிக்கா செல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் திட்டமிட்டு, முன்கூட்டியே பதிவு செய்து பாத்துட்டு வந்துங்கப்பா.. நான் பார்க்கல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *