சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-வின் 281-வது கருத்தாய்வுக் கூட்டமான திரு. செல்வநாதன் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 02.11.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில்  வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான் சுவாசகாச சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் வாலை ரசம் எடுக்கும் முறையை தெளிவாகக் கூறினார். மேலும் தோல்நோய்களுக்கு ரச பற்பம் செய்யும் முறையையும் கூறினார்.

அடுத்ததாக, திரு.அனில்குமார் ஆசான் ஆஸ்துமா, சளி பிரச்சனைக்கு எளிய மருந்துக்குறிப்பினை வழங்கினார்.

திரு.புருஸ்லி ஆசான் ஆரோக்கியத்தை பேணும் வழிமுறைகளை தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக திரு. ஜெபமணி ஆசான் வாந்தி, தலைசுற்றல், வெறிபித்தம் இவை குணமாவதற்கு கசாயம் செய்முறைக் கூறினார். மேலும் உடல் நடுக்கம், காந்தல், தாகம், பித்தம், உள் எரிவு குணமாவதற்கான கசாயம் செய்முறையையும் கூறினார்.

     மருத்துவர்.த.இராஜேந்திரன் அவர்கள் கால்சியம் பற்றாக்குறை, மேகம், வெள்ளை, வெட்டை இவற்றுக்கான எளிய மருந்துமுறையை கூறியதோடு, குழந்தையின்மைக்கு மருந்துக் குறிப்பினையும், குளிர்கால நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்து ஜிஷீஸீsவீறீ, விuனீஜீs,  தொண்டைக்கட்டு இவற்றுக்கு பூச்சு மருந்தினையும் எல்லா வகை கட்டிகளுக்கான சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான் வாத காசநோய்க்கான வாதகாச சுடர் தைலம் தயாரிக்கும் முறையை தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே. செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *