“இயற்கை என்னும் இளைய கன்னி”
குமரியின் கிழக்கு எல்லையில் தோவாளைக்கும் இராஜாவூருக்கும் இடையலிருக்கும் மலையின் பெயர்
கன்யா உச்சி…ஆம் குமரிக்கோடு..(கன்யா_குமரி.உச்சி_கோடு,மலை)
‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’
என்ற சிலம்பின் பாயிரவரிகள்..ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுகின்றது.
கடுக்கரை என்ற ஊர் வரை குமரிக்கடல்பரந்திருந்து..
அன்றைய கபாடபுரத்தோடு.. இவ்வூரும் கடல்கோளுக் கிரையாகி, கடற்கரை எனும் ஊர் கடல்வற்றி மீண்டும்
நிலமாகி இன்றைய நிலம் கடுக்கரை ஆயிற்று… என்பர்….
ஆம்… இயற்கை அற்புதமானது, அழகானது, அன்பானது,
ஆனால் அதனை அரவணையாமல் அறுத்து எடுக்க ,உடைத்து உடைமையாக்கிக் கொள்ள நினைத்தோமானால்….
அதன் போக்கில் மாற்றமுறும் சில நேரங்களில் சீற்றமுறும்….
அதுவே சுனாமி.
காலமில்லா காலத்தில் பெய்யும்
பருவம் தம்பிய மழை…
ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் சொரியும், வயநாடாய் மண் சரியும்….சாலைகள் விரிவாக்க மென்ற பேரில் காடுகள் அழிப்பு…எண்வழிச்சாலை, பாலங்கள் என்ற பேரில் குளங்கள் மூடல்….
விளைவயல்கள் காலியாதல்…தென்னை தோப்புகள் காணமல் போதல்…ஆற்று மணல் அள்ளப்படுதல்… கடல் நீர் ஊருக்குள் ஊற்று வழி ஊடுருவல், நஞ்சைநிலங்களில் வாயுக்கள் எடுக்கப்படுதலால்… பூமி பொத்தலாவது, ஓசோன் ஓட்டை விழுவது …என பற்பல நடக்கும்..
மண், காற்று, தண்ணீர், தீ, ஆகாயம் இவற்றில் தீ தவிர அனைத்தும் மாசடையும்…முக்கடல் பொங்கலாம் எரிமலைகள் குமுறலாம்’ பூமி விரியலாம் மலைகளை, மண்ணை, கடலையே விழுங்கலாம்….இவை சாபமல்ல…நினைவூட்டல்..இது கற்பனையல்ல கற்றறிந்த விஞ்ஞனிகளின் ஆய்வு முடிவுகள்.
இராவணதேசம் நீரில் மூழ்குமென ஒரு சினிமாக்காரர் தான் படித்த சித்தர் பாடலை ஆதாரம் காட்டுகிறார்..முக்கடலும் பொங்கிடக் கண்டேன் மக்கா..என கிழக்கத்தி ஊரொன்றில் பதியொன்றில் அருள் வாக்கு நய்யாண்டி மேளம் நாதஸ்வரத்திடடையே ஒலிக்கிறது…
இவையாவும் சுற்றுப்புறத்தை சுத்தமாக
பேணாதாருக்கு வைத்த ஆப்புகள்….
எனக்கொண்டால்…
விழிப்பணர்வு ஏற்படுத்தினால்..இயற்கை சிறக்கும் உலகம் உய்யும். “இயற்கையைப் பேணுவோம் இன்பம் துய்ப்போம்”.
– குமரி எழிலன்
Leave a Reply