சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA-வின் 280-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மருத்துவர்.த.இராஜேந்திரன், மருத்துவ கமலகண்ணன், திரு.கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 05.10.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் மருத்துவர். கமலகண்ணன் மூட்டுவலிக்கு எளிய முறையில் சூரணம் செய்முறையை கூறினார்.

அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் பாரம்பரிய மருத்துவம் குறித்து தெளிவாக உரையாற்றினார்.

அடுத்ததாக, திரு.ஸ்டீபன் ஆசான் நாபிரணம் மாற எளிய மருந்தினையும், பெரும்பாடு குணமாக எளிய மருந்து செய்முறையையும் கூறினார்.

அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான், பித்தம், வயிற்றுநோய்கள், மூலம் இவற்றை குணப்படுத்தும் தைலம் செய்முறையை கூறினார்.

திரு.ஜெபமணி ஆசான், ஈளை, கபம், இருமல் இவற்றுக்கு திற்பிலி கவளம் செய்முறையைக் கூறினார்.

திருமதி.மாலா கல்லடைப்புக்கான மருந்து செய்முறையை தெளிவாகக் கூறினார். திரு. அருள்தாஸ் ஆசான் மகோதரம், காய்ச்சல், காசம், மூட்டுவலி, தைராய்டு பிரச்சினை, கண்டமாலை, தலைவலி, புற்றுநோய், இவற்றுக்கு செந்தூர செயநீர் செய்முறையை தெளிவாகக் கூறினார்.

திரு. ஷெரின் ஆசான் தோல்நோய்கள்,  பிமிக்ஷி, புற்றுநோய்கள், கபநோய்கள் இவற்றுக்கு மெழுகு செய்முறையை தெளிவாகக் கூறினார்.

மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் அமிர்த விஷம், நாடிகள் குறித்தும் தெளிவாக உரையாற்றினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே. செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *