தமிழன் கண்டுபிடித்த
தலையாய உணவு
இதன் வரலாற்றுக்காலம்
இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
சிறியவர் முதல் பெரியவர் வரை
விரும்பி உண்பது
காய்ந்த வயிற்றிற்கும்
காய்ச்சல் காரருக்கும் உதவுவது
மருத்துவர் மருந்துசீட்டில்
எழுதாத மருந்து.
எப்போது உண்ணலாம்
எதனுடனும் உண்ணலாம்
ஒரே மாவுதான்
சுவை வேறு- தோசை- இட்லியாய்
எந்த தமிழர் விருந்திலும்
இதற்கு இடமுண்டு
பலரின் பயணத்தில்
உடன் வருவது
துணியுடன் ஒட்டி
அவிழ்ந்தாலும்- பிரிக்கப்படுவது
மாலை வரை தாக்கு பிடிக்கும்
மறுநாள் இட்லி உப்புமாவாக மலரும்.
எண்ணெய் கலக்காத
சிறந்த பலகாரம்
ஐந்து இட்லியும் – தண்ணீரும்
என்றால் வயிறு கப்சிங்
அளவைப் பொறுத்து
உண்ணும் எண்ணிக்கை மாறும்
பல சிறிய உணவகங்களின்
அடையாளம் பெரிய இட்லி கொப்பறை
பலர் ஏழையாக இருந்தாலும்
உணவகங்கள் கை கொடுக்கிறது.
பல ஊர்களில் பிழைக்கிறார்கள்
இட்லி தாத்தா- இட்லி பாட்டி
பற்பல வெளிநாடுகளிலும் இன்றும் வலம் வருகிறது.
இரா.சிவானந்தம்
Leave a Reply