இருபக்கங்களிலும்
ஒவ்வாமையை வளர்த்தியிருக்கிறது
கதவு
உளுத்துபோன மரத்தால் ஆகியிருக்கின்றது
கதவின் மனம்
சிலுவை என அடிக்கப்பட்டிருக்கும்
நிலையின் கண்ணி
விடுவதாயில்லை
கதவை
அதன் கனத்தையும் தாண்டி
புலம்பலை ஒரு
சாபமென
துப்பிக்கொண்டிருக்கின்றது
கதவு
இருபக்கங்களிலும்
அங்கிருக்கும்
இருபக்கங்களும்
தனக்கான இருபக்கங்களை
உற்பத்தி திறன்கொண்டு
வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன
அவ்வாறே
கதவுகளும்
பக்கங்களும்
பக்கங்களும்
கதவுகளும்
என சுழலும்
ஒரு வட்டம்
தன்னுள் ஒளி பொருந்தியதாய்
தன்னை நினைத்துக் கொள்கிறது
பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன்
தன்கை ஓட்டுச்சில்லால்
அடிக்கின்றான்
சில்லு சில்லாகும்
வட்டங்களுள் மிதக்கின்றதொரு
குறிப்பு
அவனுக்கு
குறி பார்க்கத் தெரியாது
……………….
இரா. அரிகரசுதன்
Leave a Reply