வசந்தம் ஒருநாளில் மலர்வதில்லை. அதுபோலத்தான் வாழ்வின் உயர்வு என்கிறார் அரிஸ்டாட்டில். என்றோ ஒருநாள் நடக்கப் போகின்ற தேர்வுக்காக நாம் வருடம் முழுவதும், படித்து, நம்மை தயார் செய்து காத்திருக்கிறோம். நன்றாக எழுதி நல்ல மார்க் எடுக்கிறோம் இல்லையா… உழைக்க வேண்டும். உழைத்தால் தான் கூலி கிடைக்கும். வியர்வை சிந்தாமல் எதுவும் கிடைக்காது. எது உங்களுக்கு தேவையோ அதை அளவில்லாமல் இப்பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்கி கொண்டே இருக்கும். சாதனை புரிய பிறந்த நீங்கள் ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள். அளவில்லா அறிவும், சக்தியும் படைத்த மாமனிதனே உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கெனவே நடந்து முடிந்ததை நினைத்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது என்று விவேகானந்தர் அவர்கள் எவ்வளவு அழகாக கூறியுள்ளார். வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாம் இப்போது இருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு. நல்லவற்றையே சிந்தியுங்கள். நல்லதே நடக்கும். நீங்கள் பிரபஞ்ச ஆற்றலை நேசிக்கும் பொழுது அது உங்களை நேசிக்கும். பிரபஞ்சம் அளப்பறியா ஆற்றல் படைத்தது. வாழ்வின் முன்னேறிய அனைத்து சாதனையாளர்களுமே பிரபஞ்சத்தை நேசித்தவர்கள். உன்னுள் இருக்கும் சக்தியை வெளி கொள். உழைத்து மேன்மக்கள் ஆகுக. பிரபஞ்ச பேராற்றல் உனக்கு உதவட்டும்.
– சஜிபிரபு மாறச்சன்
Leave a Reply