சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா

சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா

  • By Magazine
  • |

நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு 2700-ஆம் ஆண்டு என்றும் குறிக்கப்பட்டுள்ளது. எகிப்திலுள்ள “சக்காரா” என்ற பிரமிடுவில் உள்ள அவரது கல்லறையில் இவை குறிப்பிடப்பட்டு உள்ளன.  அவரது மகன் விட்டுச் சென்ற கல்வெட்டில், அவர் மெரிட் ட்டா (Merit-Ptah) தலைமை மருத்துவர் மற்றும் தலைமைப் பூசாரி என்றும் கூறியுள்ளார்.

ஆயிரம் ஆயிரம் உண்மைகளா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களும் பெண்களும் தங்குமிடங்கள் மற்றும் ஆடைகளை உருவாக்கினர். நெருப்பைக் கட்டுப்படுத்தினர்; வளர்ப்பு விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றின் பாத்திரங்களைப் பற்றி மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்க முடியும். ஆரம்பகால கிரீஸ் மற்றும் ரோமின் பெரிய நாகரிகங்களுக்கு முன்பு, பண்டைய எகிப்தில் பெண்கள் மருத்துவம் செய்ததாக அறியப்படுகிறது. கி.மு 2700-2500 -ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மெரிட் ட்டா என்ற பெண் மருத்துவர் , அவரது கல்லறையில் “தலைமை மருத்துவர்” என்று பொறிக்கப்பட்டு விவரிக்கப்படுகிறார். கிமு 8- ஆம் நூற்றாண்டில் தோன்றிய பண்டைய கிரேக்கத்தில், யதார்த்தத்தின் தன்மை மற்றும் ஆரோக்கியம் மற்றும் நோய் பற்றிய சிந்தனை முதன்மையாக ஆண்களின் முயற்சியாக மாறியது.

மெரிட்- ப்ட்டாவின்  வரலாறு

மெரிட்-ப்ட்டா (Merit-Ptah) (கி.மு.- 2700) ராயல் கோர்ட்டின் “தலைமை மருத்துவர்” என்று பதிவுசெய்யப்பட்ட துவக்க கால எகிப்திய வம்சத்தில் (கி.மு.3150 —.2613) வாழ்ந்தார். இங்கு  எகிப்தில் பெண் அறுவை சிகிச்சை செய்த சான்றுகளும் உள்ளன. இந்தப் பட்டம் அவளை ஓர் ஆசிரியையாகவும், பெண் மருத்துவர்களின் மேற்பார்வையாளராகவும் (“Lady Overseer of the Female Physicians.”) இருந்தார் என்பதால் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். மேலும் அவர், ராஜாவின் தனிப்பட்ட மருத்துவர்/அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்திருக்கிறார்.  மெரிட் ட்டா (Merit-Ptah ) என்ற பெயரால் நாம் அறிந்த முதல் பெண் மருத்துவர் என்றாலும், லோயர் எகிப்தில் உள்ள “சைஸில்” என்ற இடத்தில்  உள்ள நீத் கோயிலில் ஒரு மருத்துவப் பள்ளி இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.  இது கி.மு. 3000-ஆம் ஆண்டில்  பெண்களால் நடத்தப்பட்டது. கிமு 1500- ஆம் ஆண்டிலேயே ஹெலியோபோலிஸ் (Heliopolis) என்ற இடத்தில் உள்ள ராயல் மருத்துவப் பள்ளியில் பெண்கள் படித்ததாகவும் எகிப்திய வரலாறு பதிவு செய்கிறது.

மெரிட் –ப்ட்டா பற்றிய பதிவுகள்

மெரிட் ப்ட்டா பற்றிய பதிவுகளாவன: “ மெரிட் ப்ட்டா தனது சமூகத்தில் தனது பாரோவின் தலைமை மருத்துவராக இருந்திருக்கிறார். அவரது  கண்டுபிடிப்புகள் மூலம் அவரது மக்கள் பலரின் உயிர்களை துன்பகரமான நோய்கள் மற்றும் காயங்களிலிருந்து காப்பாற்றினார்.  மேலும் பெண் விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கு சமத்துவத்தை நோக்கி எடுத்துச் சென்றார். அறிவியல் துறைக்கு மட்டுமின்றி வரலாற்றிலும் அவர் ஆற்றிய பங்களிப்புகள், இன்றைய மருத்துவ மற்றும் அறிவியல் பணிகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.

மெரிட் ப்ட்டா முன் மருத்துவத்தில் பெண்களுக்கான சமூகம்

 மெரிட் ட்டாவுக்கு முந்தைய நாட்களில் மருத்துவம் ஒரு வளரும் துறையாக இருந்தது. பொதுவாக அறிவியலைப் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே இருந்தன. அதுவும்  குறிப்பாக மக்களின் ஆன்மீக மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் அனைத்தும்,  கலாச்சாரம் பொதுவாக விஞ்ஞான அறிவைத் திரித்துக் கூறியது. இதனால்  அந்த சமூகத்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான நோய்களுக்கான பயனுள்ள சிகிச்சைகளைக் கண்டுபிடிப்பதை மிகவும் கடினமாக்கியது. அந்த காலத்தில், உலகின் பெரும்பாலான பகுதிகளில், எந்தவொரு பெண்ணும் மருத்துவம் செய்வதைக் கண்டறிந்தால், அவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டனர். மருத்துவ நடைமுறைக்கான சட்டங்கள் இடத்திற்கு இடம் மாறுபட்டு இருந்தன.  மேலும் ஒவ்வொரு சமூகமும்  அதன் சொந்த சட்டங்கள், எதிர்பார்ப்புகள், யோசனைகள் அவைகளுக்கு ஏற்றபடி செயல்களைக்  கொண்டிருந்தன. இருப்பினும், மருத்துவத் தொழில்களைக் உள்ள எல்லா இடங்களிலும், பெண்கள் பொதுவாக எதிர்பார்க்கப் படவில்லை.  மேலும் அவர்கள் மருத்துவத் துறையில் செழிப்பாக வளர ஊக்குவிக்கப்படவும் இல்லை. அவர்களுக்கு முறையான கல்விக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. மேலும் சிலருக்கு அவர்கள் எதிர்கொள்ளும் ஊக்கமின்மையின் காரணமாக இருக்கும் பயிற்சி மற்றும் கல்வியைத் தொடர விருப்பமும் விருப்பமும் இருந்தது. பண்டைய எகிப்து என்பது அவர்கள் காலத்தின் மிகவும் மேம்பட்ட நாகரிகங்களில் ஒன்றாகும். அவர்கள் முழுமையாக வளர்ந்த எழுத்து முறை மற்றும் ஓர் எண் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்தனர், இது கணக்கீடுகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்ய அனுமதித்தது. அவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரம், அரசாங்க அமைப்பு அறிவியல் மற்றும் அரசியலைக் கொண்டிருந்தனர்.”

எகிப்த்தில் பெண்கள் நிலை

பண்டைய எகிப்தில் பெண்கள் மிகவும் மதிக்கப்பட்டனர் மற்றும் உரிமைகள் மற்றும் சமூக அந்தஸ்து ஆண்களுக்கு கிட்டத்தட்ட சமமாக இருந்தனர். அவர்கள் சொத்து வைத்திருக்கலாம்;  விவாகரத்துபெறலாம், , தொழில்களை நடத்தலாம் மற்றும் பாதிரியார்களாகவோ அல்லது எழுத்தர்களாகவோ ஆகலாம் (மிகவும் வசதியான சமூக வர்க்கங்களில் ஒன்று).என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மருத்துவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள்.  எகிப்திய மருத்துவர்கள்  கிமு 800 -ஆம் ஆண்டிலேயே பரவலாக நோயைக்  குணப்படுத்துபடுத்துவதில் புகழ் பெற்றும் இருந்தனர்.  அவர்களது திறமைகள் வரலாற்றாளர் ஹோமரின் ஒடிஸியில் கொண்டாடப்பட்டன.

இருப்பினும், சமீப காலங்களில், அவர் பெரும்பாலும் மெரிட் ட்டா என்பவர்  அப்படி ஏதும் இருக்கவே இல்லை என்றும் வாதிடப்பட்டது.  கேட் கேம்ப்பெல் ஹர்ட்-மீட் (Kate Campbell Hurd-Mead) என்ற கனடிய பெண்ணியவாதியின் நவீன 1938-ஆம் ஆண்டின் கண்டுபிடிப்பு. கொலராடோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியரான ஜக்குப் க்விசின்ஸ்கி, நியூஸ் வீக்கின் இரண்டாம் நிலை ஆதாரத்தால் மெரிட் ட்டா மேற்கோள் காட்டப்பட்டார்.

வரலாறு

மெரிட் ப்ட்டாவைப் பற்றி  முதன்முதலில் இலக்கியத்தில் 1937 ஆம் ஆண்டு, கேட் கேம்ப்பெல் ஹர்ட்-மீட என்பவர் தனது  வரலாறு இலக்கியத்தில், எழுதிய பெண் மருத்துவர்களைப் பற்றிய புத்தகத்தில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் காம்ப்பெல் ஹர்ட்-மீட், எழுதிய இரண்டு பண்டைய எகிப்திய பெண் மருத்துவர்களைப் பற்றிய புத்தகத்தில் இவர்களைப் பற்றி உள்ளது. அவர் இரண்டு பண்டைய எகிப்திய பெண் மருத்துவர்களை முன்வைக்கிறார். ஒருவர் எகிப்த்தின்  இரண்டாம் வம்சத்தைத்ச் சேர்ந்த மெரிட்-ப்ட்டா மற்றும் பெயரிடப்படாத ஒருவர் ஐந்தாவது வம்சத்தின் காலப்பெண்.   எழுத்தாளர், ஹர்ட்-மீட் , மெரிட் ப்ட்டா வைப் பற்றி  சொல்வதாவது, “அவர் தனது அரசர்களின் பள்ளத்தாக்கில் (அவரது புதைகுழியில்) குறிப்பிடப்பட்டதாகக் கூறுகிறது. எகிப்திய மன்னர்கள் கிமு 1500 முதல் கிமு 1080 வரை). பெயரிடப்படாத பழைய இராச்சிய பெண் மருத்துவர் பெரும்பாலும் பெசேஷேட் ஆவார்.  அவர் அந்த காலத்தின் கல்லறையிலிருந்து அறியப்படுகிறார்.

பண்டைய காலத்தில் பெண் மருத்துவர்

பண்டைய எகிப்தில் இருந்து வரும் பதிவுகள்,  “ மெரிட் ட்டா “ போன்ற பெண் மருத்துவர்கள், கிமு 2700 -ஆம் ஆண்டுகளில் வாழ்ந்தவர்; அவர் இம்ஹோடெப்பின் (Imhotep) என்ற வரலாற்று ஆசிரியரின் சமகாலத்தவர்.  இரண்டாம் வம்ச எகிப்திய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. பெசெஷெ என்பவர் நான்காவது வம்சத்தில் வாழ்ந்தவர் ஆவார். இவர்கள் “பெண் மருத்துவர்களின் பெண் மேற்பார்வையாளர்கள்” என்று அழைக்கப்பட்டனர். ஆனால் பண்டைய கிரீஸ் தான் மிகவும் பிரபலமான பெண் மருத்துவர்களைக் கொண்டிருந்தது.

அனலிசா வேகா என்பவர் ,தனது  ஜூனியர் பிரிவு வரலாற்றுப் பதிவில் உள்ள  வார்த்தைகளின் (Analisa Vega Junior Division Historical Paper)  எண்ணிக்கை பற்றியும் கூட குறிபிடுகிறது. : 1990 வார்த்தைகள்; பக்கம் 21. இதில் மெரிட் Ptah பற்றிக் கூறப்பட்டுள்ளது.  மெரிட் Ptah பண்டைய வரலாற்றில் பெயரால் அறியப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி மற்றும் மருத்துவர் ஆவார்.  அவள் 2700 B.C பண்டைய எகிப்தில் வாழ்ந்தாள் என்றும் தெரிவிக்கிறது. முக்கிய சாதனைகளாக, அறிவியலில் முதல் பெயர் பெற்ற பெண் என்றும் தெரிய வருகிறது. இருப்பினும் கூட, மெரிட் ப்டாவின் உண்மையான இருப்பு பற்றி ஒரு சந்தேகம் உள்ளது,. சர்வதேச வானியல் ஒன்றியம் வெள்ளிக்கோளில் உள்ள பள்ளம் ஒன்றுக்கு “மெரிட் ட்டா “ என்று பெயரிட்டு, அவரை உலக அளவிலான பெண் மருத்தவராக கணக்கில் கொண்டு பெருமைப்படுத்து உள்ளது.

– முனைவர் .மோகனா, பழனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *