வ.உ.சி-க்கு உதவி செய்த கைதிகள்

வ.உ.சி-க்கு உதவி செய்த கைதிகள்

  • By Magazine
  • |

வ.உ.சி-க்கு கோவை சிறைதான் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

வ.உ.சி -யைஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டித் தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனிஅறை.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுத்தான் வஉசியை அடைத்து வைத்தனர்..!

சிறைக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு உடைதந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, சிறையில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்துப் போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசிச் சோறு கேட்டாராம் வஉசி.. .அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்தச் சிறை அதிகாரி  மிஞ்ஜேல். சணல் கிழிக்கும் இயந்திரத்தைக் கையாலேயே சுற்ற வேண்டும்..

இதுதான் வ.உ.சிக்கு தரப்பட்ட முதல் வேலை… அப்படி செய்தததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதைப் பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்துஇயந்திரம் சுற்றுவதைத்  தடுத்துள்ளார்..

`     அதனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்… பிறகு, கையால் செய்யும் வேலைகளைத்  தராமல், செக்கிழுக்கும் வேலையைத் தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்குப் பதில் வஉசியைப் பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்து விட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!

வஉசியின் மதிப்புத் தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி “வணக்கம் ஐயா” என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கிச் சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த சிறைக்காவலன்.

வஉசி விடுதலை செய்யப்பட்ட பிறகும் தன்னுடைய வக்கீல் பணியைத் தொடர முடியாத அளவுக்கு உரிமத்தைப்  பிடுங்கிவிட்டனர்.. இதனால் வஉசி ஒரு ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்குப் போவாராம்.. இந்தச் செய்தி தெரிந்த அந்த மளிகைக் கடைக்குச் சீல் வைத்து விட்டனர் ஆங்கில அதிகாரிகள்..!

அரை வயிற்றுக் கஞ்சிக்குகூட துன்பப்படும் நிலை வந்ததால்தான், பேரூர் வீதிகளில் தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்…!

இதைவிட கொடுமை,தன்னுடைய வக்கீல்உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு,   மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.இவர் தான் வ.உ.சிக்குத் துரோகம் செய்த முதல் இந்தியர்  தமிழர்.

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமல் எதிர்த்துள்ளார் வஉசி..!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு,  தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள்,  5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்..

 “எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தைச் சேர்த்து விடுங்கள்” என்றும் சொல்லி உள்ளனர்.. கடிதம் மேல் கடிதம் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!ஆனால் அந்த பணத்தைக்  காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம்.. “    இதனால் தான் இந்தியர்கள் திரும்ப வராத கடனைக் காந்தி கணக்கு என்று நாம் சொல்கிறோம். (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியையோ, போர்க்குணமுள்ள நல்ல தலைவனான அவருக்கு சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பதும் கசப்பான உண்மை..!

உண்மையைச்  சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..! பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே  வஉசிக்குதான் உண்டு..!

இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி..இனியாகிலும் “வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்” என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், முழுவதையும் கூறுங்கள்.

– ஜி. ஜெயகர்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *