சட்டம் படிப்பதற்குரிய கல்வித்தகுதி
கழிந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இவ்வாறு ஒரு தீர்ப்புவந்தது. மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு வரை பள்ளிச்சென்று ரெகுலர் படிப்பை படித்து முடித்து விட்டு சூழ்நிலையின் காரணமாக மேலும் பள்ளிச் சென்று +2 படிக்க முடியவில்லை. இதனால் இவர் வீட்டிலிருந்தே தொலைதூரக்கல்வி மூலம் தமது +2 வை முடித்தார்.
இந்த தொலை தூரக்கல்வி சான்றுடன் ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பிற்காக விண்ணப்பம் கொடுத்திருந்தார். கல்வி நிர்வாகமோ தொலைத்தூரக்கல்வி படித்தவர்களுக்கெல்லாம் சட்டக் கல்லூரியில் அட்மிசன் கிடையாது எனக் கூறி அவன் மனுவை நிராகரித்து விட்டனர். இதனால் பாதிப்படைந்த அந்த மாணவர் ஆந்திர உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்குள்ள தனி நீதிபதி அமர்வும் அவர் சட்டம் படிப்பதற்கு தகுதியற்றவர் என்ற தீர்ப்பையே வழங்கியது. இருப்பினும் மாணவர் தனது முயற்சியை கை விடவில்லை. அந்தத் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அதே உயர்நீதிமன்றத்தில் டிவிசன் அமர்விற்கு மேல்முறையீடு செய்தால் டிவிசன் அமர்வில் 3 நீதிபதிகள் வரை இருப்பர். இங்கு 3 நீதிபதிகளும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா ரூ-ல் 5 ஐ சுட்டிக்காட்டி தொலைத்தூரக்கல்வி பயின்றவர்களும் சட்டம் படிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தனர். இப்போது அந்த மாணவர் சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்.
அதாவது பார் கவுன்சில் ஆஃப் இந்தியா ரூல் பிரகாரம் தொலைத்தூரக் கல்வியில் +2 படித்தவர்கள் 5 ஆண்டுக்குரிய சட்டப்படிப்பை மட்டுமே படிக்க முடியும். +2 முடித்த பின் 3 ஆண்டுகள் டிகிரி கோர்ஸ் முடித்தால் 3 ஆண்டுக்குரிய சட்டப்படிப்பில் சேரலாம்.
சிலதிறந்தவெளி பல்கலைக்கழகங்கள் அடிப்படை 10tலீ., 12tலீ. டிகிரி படிக்காதவர்களுக்கு நேரடியாக BA, MA விகி படிக்க வழிவகை செய்துள்ளது. அதவாவது 3-ம் வகுப்பு வரை மட்டும் படித்தவர்கள் கூட நேரடியாக BA, MA பட்டம் பெற்று விடலாம். இவ்வாறு பட்டம் பெற்றவர்களுக்கு சட்டக் கல்லூரியில் படிக்க இடம் கிடையாது.
இந்தியாவில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சட்டம் படிப்பதற்கு விதவிதமான வழிகளை கையாள்கின்றனர். பூனா பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டம் படிக்கும் மாணவர்கள் +2 அல்லது டிகிரி கோர்ஸ்களில் குறைந்து 45 சதவிகிதம் மதிப்பெண் இருந்தால் மட்டுமே அங்கு சட்டம் படிக்க முடியும் என்ற விதியை வைத்துள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு 40 சதவிகிதம் என நிர்ணயித்துள்ளது. மேலும் சட்ட படிப்பை முடிப்பதற்கு 50 சதவிகிதம் மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற விதியையும் வைத்துள்ளது. ஆனால் இவை கர்நாடகா, ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்கப்படவில்லை. சட்டம் படிப்பதற்கு வழிவகைகளை வகுப்பவர்கள் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவும், அந்தந்த மாநிலமும், அந்தந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும் சேர்ந்து சட்டம் படிப்பதற்குரிய வழிவகைகளை வகுக்கின்றனர்.
Leave a Reply