சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

வழக்கறிஞர்.பி.விஜயகுமார்

போலீசாருக்கு நமது மொபைல் ஃபோனை சோதனையிடும் அதிகாரம் கிடையாது. (அரசியலமைப்புச்சட்டம் ஆர்ட்டிக்கிள்-21 Right to Life and personal Liberty).

பொதுவாக ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது அபராதம் விதிக்க முற்படுவர். சில வாகன ஓட்டிகளோ வீட்டில் உரிமம் இருக்கிறது, அதனால் அபராதம் கட்ட முடியாது என அடம் பிடிப்பர். இதனால் போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும் வாய்தகராறு முற்றி இறுதியில் போலீசார் அவர் வண்டியை பறிமுதல் செய்தும் அவர் மொபைல் ஃபோனை பறிமுதல் செய்தும் அந்த நபரை காவல் நிலையம் கொண்டு சென்று விடுவர்.

பிறகு அவரது மொபைல் ஃபோனை திறந்து பார்த்து நீ சில பெண்களின் போட்டோக்களை இந்த கோணத்தில் வைத்திருக்கிறாய், அந்த கோணத்தில் வைத்திருக்கிறாய், ஆபாச படமெல்லாம் பார்த்திருக்கிறாய் அதனால் உன் மீது ஓட்டுனர் உரிமம் இல்லாததற்கு வழக்குப்பதிவு செய்வதோடு உனது மொபைலில் இருக்கும் ஆபாச சங்கதிகளுக்கும் வழக்குப்பதிவு செய்யப் போகிறோம் என பயமுறுத்துவர். ஆனால் போலீசாருக்கு தனிப்பட்ட ஒருவரின் தரவுகள் தமது மொபைல் ஃபோன்களில் இருப்பதை பார்ப்பதற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. அவ்வாறான பயமுறுத்தும் செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது சம்மந்தப்பட்டவர் நடவடிக்கை எடுக்கலாம். நமது மொபைலின் பாஸ்வேர்ட் போலீசாருக்கு கொடுக்க வேண்டியத் தேவையில்லை. மொபைல் அன்லாக் பண்ணத் தேவையில்லை.

சில புதிய படங்கள் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பே இன்டர் நெட்டில் வந்து விடும். அவ்வாறு அது எல்லா கம்ப்யூட்டர், மொபைல்களிலும் டவுண்லோட் ஆகிவிடும். இதனால் பாதிப்படைந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் கம்ப்யூட்டர், மொபைலில் படம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? நொடிப் பொழுதில் உலகம் முழுவதும் படம் சென்று விடுமே! இவ்வாறு சினிமாபடம் நமது மொபைலில் இருக்கிறதா என்பதையும் போலீசார் சோதனை இடமுடியாது. இதெல்லாம் நமது தனி நபரின் Right to Life and personal Liberty ஆகும். இவை நமது அரசியல் சாசனம் ஆர்ட்டிக்கிள் 21-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் பொதுவழியில் உலாவரும் காதல் ஜோடியினரை போலீசார் பிடித்து பயமுறுத்தி அவர்கள் மொபைலை பிடுங்கி மிரட்டுவர். அவர்கள் மொபைலினுள் இருக்கும் அவர்கள் புகைப்படங்களை பார்க்க எத்தனிப்பர். இந்த அதிகாரம் எல்லாம் போலீசாருக்கு கிடையாது. காதலர்களை எச்சரித்து அனுப்பலாம். அவர்கள் மொபைல் போனில் இருக்கும் சங்கதிகளை பார்வையிட அவர்களுக்கு உரிமை கிடையாது. ஆனால் சிறார் பாலியல் வழக்கு (போக்சோ சட்டம்) சம்மந்தமாக சிறுவர், சிறுமியர்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் எவரும் தமது மொபைல் ஃபோனில் வைத்திருந்தால் அது குறித்து பார்வையிட போலீசாருக்கு உரிமை உள்ளது. அதே போல் தீவிரவாதம் தொடர்புடைய நபர்களின் மொபைலை சோதனை செய்யும் உரிமை போலீசாருக்கு உள்ளது. இவைகள் தனிநபர் உரிமை கிடையாது.  மொத்த சமுதாயத்தையும் சிதைப்பவை இப்படிப்பட்டவர்கள்  மீது மொபைல் ஃபோனில் இருக்கும் தரவுபடி போலீசார் வழக்குப்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *