– குமரி எழிலன்
ஜீவானந்தம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட, இளமையில் தேவாரம், திருவாசகம், பஜனைப்பாடல்களை தேர்வீதிகளில் பாடிப் பரவசம் அடைந்த சொரிமுத்து, குமரி மண்ணில் பூதப்பாண்டியில் பிறந்தவர் …. 9 வயதில் கோயில் சுண்டலை, எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாக கொடுக்கச் சொல்லி, பூசாரிப் பாட்டா கேட்காததால்… பூசாரியிடமிருந்து பறித்துப் போய் சமபங்கு வைத்தவர்.
உடன்பயின்ற மண்ணடி மாணிக்கத்தின் தோளில் கை போட்டு தேர்வீதியில் சுற்றி கோயிலுக்குள் புக முயற்சியில் அடித்துக் காயப்படுத்தபட்டவர்..
காந்தியின் மீதும் கதர்மீதுமுள்ள பற்றால் அம்மா மரணமடைந்தபோது கொள்ளி வைக்க எடுக்கப்பட்ட வேட்டி கதரில் இல்லாததால் தன் தம்பியை கொள்ளி வைக்கச் சொனனவர்.. தான் நடத்திவந்த சிராவயல் ஆசிரமத்துக்கு காந்தியார் வந்தபோது.. ஜீவா உங்களுக்கு சொத்து இருக்கிறதா என்று கேட்க…
இந்தியா தான் என் சொத்து என ஜீவா சொல்ல….இல்லை நீங்கள் தான் இந்தியாவின்சொத்து என்று காந்தி கூறலானார் என்பர்…
வைக்கம் சத்யாக்கிரகத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த போது சந்தித்த தோழர்களின் உரைகளைக் கேட்டு பொது உடைமே சித்தாநதி ஆனார்..
…பாலின்றி பிள்ளையழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமளுவோம்
வீடு முச்சூடும் அழும் – தோழனே…
பாழுக்குழைத்தோமடா – தோழனே
பசையற்றுப் போனமடா…
எனும் வரிகள் உண்மைகளின் உண்மை.
துப்பாக்கிக்கு நெஞ்சை விரித்துக்காட்டிய வீரன்
மேடையில் பேசும்போது புயல் பூகம்பம் மாமழை இடி யாவும் ஒரேநேரத்தில் வந்ததைப் போன்றப் பேருரையாளர்..
பாரதியையும் கம்பனையும் தன் தோளில் சுமந்து…ஏழைகளையும், உழைப்பாளர்களையும் இதயத்தில் சுமந்தவர்… மாற்றுக் கட்சியினருடன் நல்லுறவு வைத்திருந்த நேய்மையாளர்.
ஜனசக்தி நாளிதழையும் தாமரை மாத இதழையும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தையும் தொடங்கிய அந்திய காலம் வரை உறுப்பினராயிருந்த அற்புத தோழர் ஜீவா,
சேரன் மகாதேவி பரத்துவாத ஆசிரமத்தில் பிராமணரல்லாதாருக்கு மடத்துக்கு வெளியே உட்காரச் சொல்லி உணவளிக்க பெரியாருடன் தானும் … எதிர்த்து வெளியேறிய பின்பு திராவிடக்கழகம் தோன்றியது , அதில பணிபுரியும் போது… வைக்கம் போராட்டத்தில சிறை சென்றார் … என்பது குறிப்பிடத்தக்கது,
Leave a Reply