SAVKIA -வின் 278-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், திரு.கே. செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 03.08.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் துருசு சுண்ணம் செய்முறையை செய்து காண்பித்தார்.
அடுத்ததாக, திரு. இராஜன் ஆசான் மேகநோய்கள், கை கால் எரிவு, மேகவறட்சை, எலும்புருக்கி, நீர் சுருக்கு, உடல் வறட்சி இவற்றை குணப்படுத்தும் மேக இராஜாங்க சூரணம் செய்முறையை தெளிவாக கூறினார்.
திரு.ஜெரின் ஆசான் மேகரணம், கிரந்தி, ஆண்குறி, பெண்குறி புற்று, கள்ளிப்பூகிரந்தி, வாதம், புண்புரை இவற்றுக்கு சித்திரகுளிகை செய்முறையை தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக, மரு.ஷேக் முகமது வர்மத்துக்கு அண்ட லேகியம் செய்முறையைக் கூறினார்.
அடுத்ததாக, மரு.கமலக்கண்ணன் வாதம், அண்டவாதம், 80 வகை வாதம் இவற்றுக்கு ஐங்கூட்டு அண்ட தைலம் செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.ஜாண் ஆசான் செந்தூர தீநீர் செய்முறையை கூறினார்.
திரு. ஸ்டீபன் ஆசான் சொறி, சிரங்கு, அரிப்பு, படை இவற்றுக்கு கசாயம் செய்முறையை தெளிவாகக் கூறினார். திரு.வினோத்குமார் ஆசான் வெள்ளை, படர்தாமரை, வர்மகாயம், ஞாபகசக்திக்கு வல்லாரை லேகியம் செய்முறையையும், வாதத்துக்கு முறிவெண்ணெய் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் வர்ம மருத்துவம் செய்யும் அடிப்படை முறைகளைக் குறித்து பேசியதோடு, மூக்கு சதை வளர்ச்சிக்கு விஷமுட்டி தைலம் செய்முறையை தெளிவாகக் கூறினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே. செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply