பயன்நோக்கா பணிசெய்து வாழ்தல் வேண்டும்
பகுத்துண்டு பல்லுயிர்கள் ஓம்பல் வேண்டும்
அயராது இறைத்தொண்டு செய்தல் வேண்டும்
அன்பாலே பிற உயிரைக் காத்தல் வேண்டும்
தயங்காமல் பிறர்க்குதவி அளித்தல் வேண்டும்
தந்நலத்தை அடியோடு நீக்கல் வேண்டும்
வியந்து நமை ஊரார்கள் மெச்ச வேண்டும்
வாழ்நாளில் புகழோடு வாழ்தல் வேண்டும்
Leave a Reply