உயரம் என்பது எப்போதும்
தரையிலிருந்து
தொடங்குவதில்லை..
துயரம் என்பது எப்போதும்
எதிரியிடமிருந்து
எழுவதில்லை..
இரக்கம் என்பது எப்போதும்
செல்வச் செழிப்பிலிருந்து
வருவதில்லை…
உறக்கம் என்பது எப்போதும்
உயர்ந்த மெத்தையிலிருந்து
பெறுவதில்லை..
மகிழ்ச்சி என்பது எப்போதும்
அடைந்த பணத்திலிருந்து
கிடைப்பதில்லை..
புகழ்ச்சி என்பது எப்போதும்
அமர்ந்த பதவியிலிருந்து
விளைவதில்லை…
உலகம் விசித்திரமானது..
Leave a Reply