கேள்வி பதில்

கேள்வி பதில்

  • By Magazine
  • |

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

முந்தைய இதழின் தொடர்ச்சி…

6. ஆக்சிலெட்டர் அழுத்தினால் மட்டும் கார் வேகமாக போகிறதே! ஏன்?

இயற்பியல் விதி: Newton’s Second Law (F=ma) & Combustion.

விளக்கம்: ஆக்சிலெட்டரை அழுத்தும்போது Throttle valve’ திறந்து அதிக காற்று மற்றும் எரிபொருள் சிலிண்டருக்குள் செல்கிறது. இதனால் ஏற்படும் வெடிப்பு விசை (Chemical energy to Mechanical energy) பிஸ்டன் மீது அதிக அழுத்தத்தை (Pressure) உருவாக்குகிறது. இந்த விசை சக்கரங்களுக்கு மாற்றப்பட்டு முடுக்கத்தை (Acceleration) ஏற்படுத்துகிறது. எளிமையாக சொல்லப்போனால், ஆக்சிலரேட்டரை அழுத்தும் போது அதிகப்படியான எரிபொருள் இஞ்சினுக்கு செல்கிறது.

7. உப்பு நீரில் மின்சாரம் வேகமாக பாய்கிறதே! ஏன்?

இயற்பியல் விதி: Electrolytic Conduction.

விளக்கம்: தூய நீர் ஒரு மின்கடத்தாப் பொருள் (Insulator), ஏனெனில் அதில் கட்டற்ற எலக்ட்ரான்கள் (free electrons) இல்லை. ஆனால் உப்பை (NaCl) சேர்க்கும்போது அது Na+ மற்றும் CK- அயனிகளாகப் பிரிகிறது. இந்த அயனிகள் ‘Charge carriers’-ஆகச் செயல்பட்டு மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குக் கடத்துகின்றன. இருந்தாலும் பொதுவாக காணப்படும் சாதாரண நீரில் ஓரளவுக்கு தனிமங்கள் கலந்து இருப்பதால் அவையும் மின்சாரத்தை கடத்த கூடியது தான்.

8. செல்போன் பேட்டரிகள் ஏன் வெடிக்கின்றன?

இயற்பியல் விதி: Thermal Runaway.

விளக்கம்: லித்தியம்-அயன் பேட்டரிக்குள் இருக்கும் பிரிப்பான் (Separator) சேதமடையும்போது ‘Internal Short Circuit’ ஏற்படுகிறது. இதனால் மின்னாற்றல் வெப்பமாக மாறி, பேட்டரிக்குள் இருக்கும் வேதிப்பொருட்களைச் சிதைக்கிறது. இந்தச் சிதைவு மேலும் வெப்பத்தை உருவாக்கி ஒரு சங்கிலித் தொடர் வினையாக (Exothermic reaction) மாறி அழுத்தத்தை அதிகப்படுத்தி வெடிக்கச் செய்கிறது. பொதுவாக மொபைல் போன் சேதமடைவது, நீரில் விழுவது, அல்லது அதிகப்படியான அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுவது போன்றவை இதற்கு காரணமாக அமையலாம்.

9. ஏன் பருத்தி ஆடைகள் நன்றாக ஈரத்தை உறிஞ்சிக்கின்றன?

இயற்பியல் விதி: Capillary Action

விளக்கம்: பருத்தி இழை என்பது செல்லுலோஸால் ஆனது. இதில் நுண்மையான துளைகள் உள்ளன. நீரின் பரப்பு இழுவிசை (Surface Tension)) மற்றும் ஒட்டுப்பண்பு (Adhesion) காரணமாக, நீர் இந்த நுண் துளைகளுக்குள் தானாகவே மேலே ஏறிச் செல்கிறது. இதுதான் பருத்தி துணி ஈரத்தை ஈர்க்கும் ரகசியம். அதேநேரம், பாலிஸ்டர் போன்ற இழையால் செய்யப்பட்ட துணிகள் நீரை அவ்வளவு சீக்கிரம் உறிஞ்சி கொள்வது கிடையாது.

10. எப்படி கடிகாரங்கள் நேரத்தை சரியாக காட்டுகின்றன?

இயற்பியல் விதி: Piezoelectric Effect

விளக்கம்: குவார்ட்ஸ் கடிகாரங்களில் உள்ள படிகத்திற்கு மின்சாரம் கொடுக்கும்போது அது ஒரு விநாடிக்குத் துல்லியமாக 32,768 முறை அதிர்கிறது. இந்தத் துல்லியமான அதிர்வெண் (Frequency)  ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட் மூலம் எண்ணப்பட்டு, சரியாக ஒரு விநாடிக்கு ஒருமுறை கடிகார முள்ளை நகர்த்துகிறது. இதை அடிப்படையில் மிகவும் துல்லியமாக ஒரு வினாடியை நம்மால் கணக்கிட முடிகிறது.

11. உயர் மின்னழுத்த கம்பிகளில் மின் காப்பு (Insulation)  இல்லை. ஆனால் வீட்டு ஒயர்களில் ஏன் இருக்கிறது?

இயற்பியல் விதி: Dielectric Strength of Airவிளக்கம்: மின்கம்பிகளுக்கு இடையே உள்ள ‘காற்று’ ஒரு சிறந்த மின் காப்புப் பொருளாகச் செயல்படுகிறது. உயர் மின்னழுத்தக் கம்பிகளில் மின்சாரம் பாயும்போது உருவாகும் வெப்பத்தைச் சீராக்க (Heat dissipation) இவை திறந்த நிலையில் இருப்பது அவசியம். ஆனால் வீடுகளில் கம்பிகள் மிக நெருக்கமாக இருப்பதாலும், மனிதர்கள் தொடும் அபாயம் இருப்பதாலும் பிளாஸ்டிக் உறை தேவைப்படுகிறது. இருந்த போதிலும் கூட அதிகப்படியான வெப்பம் ஏற்படும் சூழ்நிலைகளில் ஒயர்கள் எரிந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *