– ஓஷோ
அந்த கிராமத்தில் முல்லா மட்டுமே எழுத படிக்கத் தெரிந்தவர். ஒருவர் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்தவராக இருப்பதால் அவர் என்ன எழுதுவார், என்ன எழுத மாட்டார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அந்த கிராமத்தில் கடிதம் எழுத வேண்டுமானால் எல்லோருமே முல்லாவிடம் தான் செல்ல வேண்டும்.
ஒருநாள் முல்லாவிடம் ஒரு வயதான மூதாட்டி கடிதம் எழுதுவதற்காகச் சென்றாள். ஆனால் முல்லாவோ என்னால் எழுத முடியாது என மறுத்தார். காரணம், அவருடைய காலில் வலி என்றும் அவரால் நடக்க முடியாது என்றும் கூறினார்.
கோபமுற்ற அந்த மூதாட்டி கடிதம் எழுதுவதற்கும் காலில் வலி இருப்பதற்கும் என்னத் தொடர்பு என்று முல்லாவிடம் வாதிட்டாள். முல்லாவோ வாய் திறக்கவில்லை. திரும்பவும் மூதாட்டி முல்லாவிடம் சண்டையிட்டாள்.
முல்லாவோ மூதாட்டியிடம் விரிவாக என்னை சொல்ல வைக்க முயற்சிக்காதே, நான் திரும்பவும் சொல்லுகிறேன், எனக்கு காலில் வலியுள்ளது. கடிதம் என்னால் எழுத முடியாது எனக் கூறினார்.
மூதாட்டியும் விடவில்லை. முல்லாவே நான் படிப்பறிவில்லாதவளாக இருக்கலாம். என்னை ஏமாற்ற முடியாது என்றாள். உன்மை தெரியாமல் இவ்விடத்தை விட்டு அகல மாட்டேன் என அடம் பிடித்தாள். திரும்பவும் கடிதம் எழுதுவதற்கும் கால் வலிக்கும் என்னத் தொடர்பு என கோபமுற்றாள்.
இறுதியில் முல்லாவோ மூதாட்டியிடம் நீ தொடர்ந்து வலியுறுத்துவதால் நான் இப்போது உண்மையைச் சொல்ல போகிறேன் என்றார். இந்த உண்மை உன்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கும் என்றார். அது என்ன ஆச்சரியம் என்றாள் மூதாட்டி? முல்லா சொன்னார் நீ கடிதம் அனுப்பும் அந்த ஊரில் உள்ளவர்களுக்கு கடிதம் வாசிப்பதற்கும் நான் தான். அங்கு செல்ல வேண்டும், காலில் வலி உள்ளதால் அங்கு நான் செல்ல முடியாது, அதனால் கடிதம் எழுத முடியாது எனக் கூறினேன் என்றார் முல்லா. இதைக் கேட்டதும் மூதாட்டி ஆச்சரியத்துடன் திகைத்து நின்றாள்.
Leave a Reply