– இரா. அர்ச்சனாதேவி
காலை நேர விடியலில் பரபரப்பாக இருந்தது. அந்த ஐ.பி.எஸ் பயிற்சி அகாடமி புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பயிற்சி தொடக்க விழா அன்று. மகிழ்ச்சியில் திளைத்தாலும் முழுமையான சந்தோசமல்லாமல் சோக சூழலில் பாரதியின் மனதில் பழைய நினைவுகளின் அணிவகுப்பு. பாரதியின் நினைவை கலைத்தது விழா மேடையின் அறிமுக உரை அகில இந்திய அளவில் குடிமைப் பணித்தேர்வில் முதலிடம் பெற்றாலும் ஐ.பி.எஸ் இடத்தை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரன் என்பவரை பயிற்சிக்கு வரவேற்கிறோம் என்ற வார்த்தைகளை கேட்ட போது பாரதியின் மனதில் வெறுமை, கண்ணில் அலைப்புறுதல். வாழ்நாள் முழுவதும் கேட்க விரும்பாத பெயர். அவளது தேடலில் பெயருக்கு சொந்தமானவனை பார்த்தவுடன் அதிர்ந்தது அவளது உள்ளம். அவனிடமிருந்து பாரதியின் முகத்தை மறைக்க நினைத்த போது தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த பாரதி அவர்களை வரவேற்கிறோம் என்ற குரலில் நேத்ரனின் பார்வை பாரதியின் பார்வையோடு மோதியது. நேத்ரனின் மனம் பின்னோக்கி சென்ற வேளையில் மூடி வைத்த நினைவுகள் பாரதியின் மனதை கூறு போட்டது. அப்போது பாரதி கும்பகோணத்தில் கல்லூரியில் B.Sc கணக்கு பாடத்தில் முதலாம் ஆண்டு முதல் நாள் அடியெடுத்து வைத்த போது சீனியர்களின் கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தாள் விதி வலியது.. மாட்டினாள்.
சீனியர் மாணவர்களிடம் அதற்கு தலைமை ஏற்று இருந்த நேத்ரன். மூன்றாம் ஆண்டு வேதியியல் மாணவன். பாரதியை அழைத்து பாட்டு பாட சொல்லி, அதற்கு பாரதி மறுக்க, வகுப்பிற்கு செல்ல விடாமல் கலாட்டா செய்தார்கள். அப்போது பேராசிரியர் ஒருவர் வர பாரதி தப்பித்து வகுப்பிற்கு சென்றாள். பின்னாளில் அடிக்கடி நேத்ரன் குரூப் பாரதியிடம் வம்பிழுத்தது. அவர்களின் தொல்லை எல்லை மீற அன்று கல்லூரியிலிருந்து ஒரு வாரம் நேத்ரன் குரூப்பை சஸ்பெண்ட் செய்தார்கள் . நேத்ரன் பாரதியை பழிவாங்கக் காத்து கொண்டிருந்தான். ஒருநாள் மாலை பாரதி நூலகத்தில் உள்ளே ஒரு புத்தகத்தைத் தேட நேத்ரன் பாரதியின் கைப்பையிலிருந்து மொபைலை அணைத்து விட்டு கைப்பையை மறைத்து விட்டான் மேஜையின் அடியில். சிறிது நேரத்தில் நூலகர் நூலகத்தை மூட உள்ளே யாராவது இருக்காங்களா என்று நேத்ரனிடம் கேட்டதற்கு, இல்லை என்று கூறினான். அன்று வெள்ளிக்கிழமை இனி அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு, திங்கள் அரசு விடுமுறை என மூன்று நாட்கள் . தனியா இருந்து பாரதி தவிக்கட்டும். அது தான் அவளுக்கான தண்டனை என நேத்ரன் கூறினான். நூலகத்தை மூடிய பின்பு வீட்டிற்கு சென்று விட்டான். ஒருவாரம் கழித்து கல்லூரியில் விசாரிக்கும் போது பாரதி T.C வாங்கி விட்டு போனது தெரியவந்தது. காரணம் யாருக்கும் தெரியவில்லை. நேத்ரனின் மனதில் முதன் முறையாக ஒரு நெருடல் உருவானது. அதன் பின் உயர் படிப்பு, தேர்வு என்று அப்படியே போனது. அதன்பிறகு பாரதியை இப்போது தான் சந்திக்கிறேன். மன்னிப்பு கேட்காமல் இவ்வளவு நாள் மனதை நெருடிய, தவிக்க வைத்த அவனுடைய தப்பிற்கு தண்டனை பாரதி தான் தர வேண்டுமென்ற ஏக்கத்தோடு வரும் நாட்களில் கண்ணில் மன்னிப்பு யாசிப்போடும் அவன். பாரதி அதற்கு பிறகு என்னானாள் என்பதை அறியவும் எண்ணம். நேத்ரனை கண்டு கொள்ளாத, பேசாத பாரதி அன்று மலையேறும் பயிற்சியில் மலையுச்சியில் நேத்ரனை சந்திக்க, பேச நேத்ரன் பாரதியை நெருங்க, பல நாள் தவிப்பு பாரதியின் குரலில் சீறலாக, ஏன் பைத்தியமாகவோ இல்லை செத்துட்டேன்னு நினைச்சீங்களா! அன்றைக்கு அந்த நூலகர் பைக் சாவியை எடுக்க மறுபடி வந்ததாலே நான் பாதுகாப்பாக வீட்டுக்கு வந்தேன். எங்கப்பா உன்னை பத்தி போலீஸ் புகார் கொடுக்க போனாங்க. நான் உன் வருங்காலம் பாதிக்கப்படும்ன்னு தடுத்து T.C வாங்கிட்டு எங்கப்பா வேலையை திருச்சிக்கு மாத்திக்கிட்டு அங்க போயிட்டோம். ராகிங்கிற பேருல நீங்களெல்லாம செய்யுற தப்பை என்றைக்கு தான் உணர போறீங்களோ! எத்தனை சட்டம், தீர்ப்புகள் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது என்ற ஆதங்கத்தோடு பாரதி வார்த்தைகளை தெளித்தாள்..
என்னை மன்னிச்சிடுங்கன்னு கேட்க எனக்கு தகுயில்லை. ஆனாலும் நீ கல்லூரியை விட்டு போன பிறகு நான் குற்ற உணர்ச்சியால் தவிச்சிக்கிட்டு இருந்தேன்.
அப்போது ஒரு நாள் என் தங்கையின் கைப்பேசியில் பதற்றத்தோடு வந்த அவள் குரலுக்கு அவளோட கல்லூரிக்கு போனேன். அங்கே அவள் ஆய்வகத்தின் உள்ளே மாட்டியிருந்தாள். யாரோ சீனியர் செய்த வேலையாம் என்று சொன்னதும் அன்று என்னை யாரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ன ஒரு உண்மை. அன்றையிலிருந்து உன்னை தேடுறேன். மன்னிப்பு கேட்டான். பாரதியை போல ஒவ்வொரு பெண்ணும் தடைகளை தாண்டி முன்னேற வேண்டும். அதற்கு நேத்ரன் போன்றவர்கள் தடையாக இருக்க கூடாது. நேத்திரனால் தடுக்கப்பட இருந்த பாரதியின் கனவு அன்று காப்பாற்றப்பட்டது. ஆனால் எல்லாச்சூழலும் இவ்வாறு அமையுமா. ஒருவகையாய் மனக்காயத்தின் ஊடாகவே இருவரும் பயிற்சியில் முழுமனதோடு ஈடுபட்டு பின்னாளில் பணியில் சேர்ந்து நல்ல பெயர் பெற்றார்கள். முற்று புள்ளியாகவேண்டிய பாரதியின் வாழ்க்கை தொடர் புள்ளியானது.
Leave a Reply