செ.பராந்தகன்
காலங்காலமாய் கல்விக்கூடங்களில் கம்பீரமாய் வீற்றிருந்தேன்
கருமை நிறம் போர்த்தி கல்விப்பணிக்கு
உதவினேன்..
வெண்ணிற எழுத்துக்களால்
அலங்கரிக்கப்பட்டு அறிவுப் பசி போக்கினேன்..
ஏற்றம் பெற்ற மாணவர்களை
உலகம் முழுவதும் பரப்பினேன்..
கணினி யுகத்தில்
பின் தள்ளப்பட்டு
காணாமல் தான் போகிறேன்.
‘ஸ்மார்ட் ‘ வகுப்புகள் முன்பாக பொழிவிழந்து
நிற்கிறேன்..
என்பணியால் கல்விகற்றவர்
மூத்த குடிமக்களாகியிருக்க,
விரைவில் உலகம் எனை மறப்பினும் கல்விப் பணியில் ஏற்றமுறும்.
சரித்திரத்தில் நானும் ஒரு கல்விக்கருவியாய்
இடம்பெறுவேன்..
Leave a Reply