SAVKIA-வின் 303-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.முழங்குழி பா.லாசர், திரு.கே. செல்வநாதன், மரு.கமலகண்ணன், மரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.09.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் திரு. முழங்குழி லாசர் சித்த மருத்துவத்தின் பெருமைகள் குறித்துப் பேசினார்.
மரு.வடமலை நாராயணன் சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசியதோடு, கல்லீரலீல் கொழுப்பு சேர்வதை தடுப்பதற்கு சூரணம் செய்முறை, லேகியம் போன்றவற்றை கூறினார்.
அடுத்ததாக, மரு.கமலகண்ணன் முடக்குவாதத்துக்கு சூரணம் மற்றும் வெளிப்பூச்சு தைலம் செய்முறை, தோல் வியாதிக்கு மேல்பூச்சு தைலம் செய்முறை, தோல்வியாதிக்கு மேல்பூச்சு தைலம், மூச்சிரைப்பு சூரணம், மலச்சிக்கலுக்கு சூரணம் செய்முறைகளை தெளிவாகக் கூறினார்.
திரு.அருள்தாஸ் ஆசான் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும், மஞ்சள் நோயை குணப்படுத்தவும் கல்லீரல் டானிக் செய்முறையையும், சிறுநீரக செயலிழப்பு
கட்டுபடுத்த மருந்து, நீரிழிவு சூரணம், நீரிழிவு நோயாளிகளுக்கு தலைக்கு பயன்படுத்தும் தைலம் செய்முறைகளை தெளிவாகக் கூறினார்.
திரு.மைக்கேல் ஆசான் நாடி குறித்து பேசியதோடு மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்களுக்கான டானிக் செய்முறையையும் கூறினார்.
மருத்துவர்.த.இராஜேந்திரன் வர்ம மருத்துவத்தில் அடங்கியுள்ளவை குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசினார். கூட்டத்தின் இறுதியில் திரு.கே. செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply