மொழிப்போர் ஈகியர் வரிசையில் வில்லிவாக்கம் சிவா திலீபன்!

மொழிப்போர் ஈகியர் வரிசையில் வில்லிவாக்கம் சிவா திலீபன்!

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

இந்திய ஒன்றியத்தை எக்கட்சி ஆண்டாலும் ;அனைவருக்கும் ஒரே வகையான மொழிக்கொள்கை தான் உள்ளது. ஒற்றை இந்தியா, இந்துநாடு, தேசிய இன உரிமை மறுப்பு, இந்தித் திணிப்பு ஆகிய கொள்கைகளில் காங்கிரசு, பாசக இரு கட்சிகளும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

அதிலும் 2014 ஆம் ஆண்டு பா.ச.க. ஆட்சி அமைந்த பிறகு, இத் திட்டங்கள் எல்லாம் படிப்படியாக அசுர வேகமெடுக்கத் தொடங்கி உள்ளன. ஒற்றை இந்தியாவின் அடையாளமாக இந்தியை, அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாகக் கட்டாயம் கற்க வேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படையில் புதியகல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது ஒன்றிய அரசு.இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு, புதியகல்விக் கொள்கையை ஏற்க மறுத்தது. அதனால், ‘அனைவருக்கும் கல்வி” என்ற திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்கும் கல்விநிதியைக் கொடுக்க மறுத்து, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதியை வடமாநிலங்களுக்குத் திருப்பி விட்டனர்.

இந்தியை மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட போதும் தமிழ்நாடு மட்டும் இந்திக்கு எதிரான போக்கை மாற்றிக் கொண்;டதே இல்லை. அதற்குக் காரணம் இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழர்கள் நடத்தியமொழிப் போராட்டங்களும் உயிர் ஈகங்களுமே ஆகும்.

அந்தவகையில் 2026 ஆம் ஆண்டு, மார்ச்சு 11 ஆம் நாள், ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை, தமிழர்;களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து‘ மே 17 இயக்கத்தினர் சென்னை -பூங்காநகர் தொடர்வண்டி நிலையத்தில் இந்தி எழுத்துக்களை காரிநெய்(தார்) பூசி அழிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆதிக்க இந்தி ஒழிக! அன்னைத் தமிழ் வாழ்க! என முழங்கிக் கொண்டே உற்சாகமாக இந்தி எழுத்துகளை அழித்தனர். தொடர்வண்டிக் காவல்துறையினரின் தடுப்பையும் மீறித் தோழர்.திருமுருகன் காந்தி போராட்டத்தின் நோக்கம் குறித்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த மக்களிடம் விழிப்புணர்வுப் பரப்பல் செய்து கொண்டிருந்தார். அந்தவேளையில் யாரும் எதிர்பாராத வகையில், தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என முழங்கிக் கொண்டே இயக்கத் தோழர் சிவாதிலீபன் அவர்கள் வந்து கொண்டிருந்த புறநகர் தொடர்வண்டி முன் பாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்நிகழ்வால் கூடி இருந்த தோழர்கள் அதிர்ச்சி அடைந்தனர்;. செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அருகில் உள்ள இராசீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குத் தோழரைத் தூக்கிச் சென்றனர். அனைவருக்கும் பெருங்கவலை தொற்றிக் கொள்ளச் செய்தி காட்டுத் தீயாகத் தமிழ்நாடெங்கும் பரவியது.  இது எல்லா இயக்கத் தோழர்களின் மனத்திலும் ஒரு கொந்தளிப்பை உருவாக்கியது. தோழருக்குத் தலையில் பெரும் காயம் ஏற்பட்டிருந்தததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தோழரை முதல்வர்  உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பல்வேறு முற்போக்கு இயக்கத் தோழர்களும் தோழரின் இணையர் கீதா அவர்களையும் மே 17 இயக்க தோழர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.  கவலையுடன் வரும் அனைவரிடமும் மிகுந்த நம்பிக்கையுடன் எந்தவிதப் பதட்டமுமின்றித் தோழரைப் பற்றியும் அவரின் போராட்டக் குணங்கள் பற்றியும் தெளிவான அரசியல் புரிதலோடு பேசிய தோழர் கீதாவை எவரும் மறக்க இயலாது. தாயைப் போலவே மகள் கோகிலாவும் தமிழ் காக்கும் போராட்டத்தில் ‘தனது தந்தையின் செயலைப் பெருமையாகவே கருதுகிறேன்” என்றும் அவர் பற்றவைத்த நெருப்பு, தமிழ்நாடெங்கும் தமிழர்களின் மனத்தில் எழுச்சிக்கனலை மூட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் கூறினார்.

அனைவரின் நம்பிக்கையும் பொய்க்கும் வண்ணம் 18.03.2026 புதன்கிழமை இரவு 9 மணி அளவில் தோழரின் இயங்குதிறன் முழுமையாக நின்று போனது. அடக்க முடியாத மனக்குமுறல்கள், யாரையும் யாரும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம், தோழர்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். தோழர் சிவாதிலீபன் மறைந்த செய்தி தமிழ்நாடெங்கும் பரவியது. தோழர்கள் அனைவரின் நெஞ்சத்திலும் இந்தி எதிர்ப்புணர்வை ஏற்றி வைக்க நினைத்த தோழர் சிவாதிலீபனின் எண்ணம் ஈடேறி விட்டது.

தோழர் சிவகுமார் என்கிற சிவாதிலீபன், சென்னை-வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 56 வயது நிரம்பிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவாஜீன் இணையர் தோழர் கீதா என்கிற இசைமொழி, இரண்டு பெண் பிள்ளைகள் கோமதி, கோகிலா ஆவார். ஆரவாரமில்லாத அமைதியான குடும்பம். திராவிடப் பற்றாளராக விளங்கிய சிவாதிலீபன், ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்குப் பிறகு திராவிடம் உள்ளடக்கிய தமிழ்த்தேசிய அரசியல் மீது நாட்டங்கொண்ட போதுமே 17 இயக்கம் நடத்திய அனைத்துப் போரட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

அவரின் உயிர் ஈகம் கூட ஒரு நொடி உணர்;ச்சிப் பெருகில் நடந்தது அல்ல. தாம் பிறந்த தமிழ்நாட்டிற்கும் தமது தாய்மொழி தமிழுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் எனப் பல நாள்களாகப் பேசி வந்தவர். இந்த இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முந்தைய நாள் இரவே முடிவு செய்து விட்டார்.

தோழர் சிவாதிலீபனின் இறுதி ஊர்வலம் மறுநாள் மாலை வீட்டிலிருந்து தொடங்கி மூலக்கொத்தளம் வந்தடைந்து. வரும் வழிமுழுக்கச் சாலையோரம் மக்கள் கூடி நின்று இரங்கல் தெரிவித்து முழக்கமிட்டு வீரவணக்கம் செலுத்தினர். ஆயிரக்கணக்கான தோழர்கள் பல்வேறு கட்சி, இயக்கங்களில் இருந்து கலந்து கொண்டனர். அனைவரும் விண்ணதிரத் தமிழ் வாழ்க! இந்தி வீழ்க! என்று முழக்கமிட்டுச் சென்றனர். இறுதி நிகழ்வு மொழிப்போர் ஈகியர்  நினைவிடத்தில் நடந்தது. மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பில் பல்வேறு இயக்கத் தலைவர்களும் இரங்கல் உரை ஆற்றினர். தோழர் சிவாதிலீபன் இணையர் கீதாவும் மகள் கோகிலாவும் ஆற்றிய வீரவணக்க உரை அனைவரின் மனத்தையும் ஈட்டியாய்த் துளைத்தது. தமிழ்ச் சமூகத்தைப் போராட்டக் களத்திற்கு அழைப்பு விடுத்து, தங்களின் கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்தனர்.

இந்தியை எதிர்த்துத் தாய்மொழி காக்கும் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்கள் நடராசன், தாலமுத்து, கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை இராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, ஐயம்பாளையம் வீரப்பன், விராலி மலைசண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்க பாணிமற்றும் எண்ணற்ற ஈகியர் வரிசையில் வில்லிவாக்கம் சிவாதிலீபனும் இணைந்து விட்டார்.

ஒன்றிய அரசின் ஆதிக்க அதிகாரத் திமிரை, இந்தித் திணிப்பிற்கு எதிரான போரைத் தோழர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்;வதே, அவரின் ஈகத்திற்கு செய்யும் மரியாதை ஆகும்.

இந்தி ஆதிக்கத்தை வெட்டிப் புதைப்போம் !அன்னைத் தமிழை அதிகாரத்தில் ஏற்றுவோம் !தோழர் சிவாதிலீபன் காயமுற்றுச் சிகிச்சையில் இருந்த போதும் முடிவெய்திய போதும் தோழார் கீதா சூழலை மிகவும் மனஉறுதியுடனே எதிர்கொண்டார்.

அவரின் கவிதைவாசிகள் ! இதோ..

அன்று பூத்தமலரல்லவோ

உன்முகம்

செந்தளிர் மேனி இன்னும் ஆண்டுகள் வாழுமே!

எப்போதும் தமிழைப் போற்றும்

உன் உளம் நானறிவேன் !

இன்முகத்துடன் போராடிஉருக்குலைந்தஉயிரே!

அன்றே நின்றதடா என் இதயம்

இன்றுஎன்னுள் துடிப்பது

உன் இதயமே!

அவசரப்பட்டாயோ என்றனரே

நீயோ இன்றில்லை என்றால் என்றுஎன்பாயே!

நாம் அதிகம் பேசியது இயக்கத்தைப் பற்றித் தானே!

அன்றாடஅரசியலைவிரல்நுனியில் வைத்த ஆசானே!

என் வாழ்வில் வந்தவசந்தமே!

உன் நினைவைச்சுமந்துவாழ்வேனே!

பாயும் புலியாய்ப்பாய்ந்தாயோ

பயத்தை எதிரிக்குப் பரப்பிடவே!

தமிழ் தமிழ் என்று முழங்கினாயே ..

இனி தமிழுக்காக உலகம் திரளும் காண் !

இளைப்பாறு என் இனியவனே

இயக்கம் இயங்கும் உயிர்ப்புடனே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *